சர்வதேச திரைப்பட விழா: 181 திரைப்படங்கள் தேர்வு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோவா தலைநகர் பனாஜியில், கடந்த 20ம் தேதி முதல், 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதை, கோவா மாநில அரசு, இந்திய திரைப்பட துறையுடன் இணைந்து நடத்துகிறது.இதில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் ஆகியவையும் இணைந்துள்ளன.இந்த விழாவிற்கு, திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 101 நாடுகளில் இருந்து 1,676 திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.அதில், 81 நாடுகளில் இருந்து, 181 சர்வதேச படங்கள் தேர்வாகி உள்ளன. அதில், 16 பிரீமியர்கள், சர்வதேச அளவில் மூன்று, ஆசியாவில், 43 மற்றும் இந்திய பிரிவுகளில், 109 ஆகியவை அடங்கும்.இவ்விழாவில், 6,000க்கும் மேற்பட்டோர்பார்வையாளர்களாக பங்கேற்றுள்ளனர்.இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமாவின் கீழ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், அம்மா பிரைடுஎன்ற தமிழ் படங்களும், இந்தியன் பனோரமாவின் சிறப்பு பிரிவில், ஆடு ஜீவிதம், மஞ்சுமெல் பாய்ஸ், லெவெல் கிராஸ், பிரம்மயுகம் போன்ற மலையாள படங்களும், கெரபேட் என்ற கன்னட படமும், சின்ன கத காடு, கல்கி 2898 என்ற தெலுங்கு படங்களும் திரையிடப்படுகின்றன.மேலும், மராத்தி, ஹிந்தி, அசாமிஸ், பஞ்சாபி, ஹரியான்வி, கரோ, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்களும் திரையிடப்படுகின்றன.இதில் வழங்கப்படும், 'தங்க மயில்' விருது போட்டிக்கு, இந்திய படங்களான தி கோட் லைப், ஆர்ட்டிகிள் 370, ராவ்ஹேப்ஆகியவையும், 12 வெளிநாட்டு படங்களும் தேர்வாகிஉள்ளன.வெற்றி பெறும் படத்தின் கலைஞர்களுக்கு, 40 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க மயில் விருது வழங்கப்பட உள்ளது.இந்த விழாவால், இந்திய சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், சர்வதேச கலைஞர்களுடன் தொடர்பு கொள்ளவும், கருத்துக்களை பரிமாறிக் கொள் ளவும் வாய்ப்பு கிடைக்கிறது.மேலும், இந்திய ரசிகர்களுக்கு ஒரே இடத்தில், சர்வதேச மொழி திரைப்படங்கள் வாயிலாக, பல்வேறு கலை, கலாசாரத்தை உள்வாங்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.இங்குள்ள பிலிம் பஜார், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சினிமாக்களை வாங்கும் இடமாக உள்ளது.தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்தினம், பார்த்திபன், சிவகார்த்திகேயன், கவுதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், சரத்குமார், குஷ்பு, சுகாஷினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். - நமது நிருபர் -