உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பறிக்கப்பட்ட சலுகைகள் கொடுக்கப்பட்டது சாதனையா; முதல்வரின் மேஜிக் அறிவிப்புகளால் ஆசிரியர்கள் அதிருப்தி

பறிக்கப்பட்ட சலுகைகள் கொடுக்கப்பட்டது சாதனையா; முதல்வரின் மேஜிக் அறிவிப்புகளால் ஆசிரியர்கள் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 'மேஜிக்' அறிவிப்புகள் ஏற்கனவே ஆசிரியர், அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்டவை தான். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் என்னாச்சு என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.சட்டசபையில் 110 விதியின்கீழ் முதல்வர் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பலன் பெறும் நடைமுறை 2020 வரை நடைமுறையில் இருந்தது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும் போதெல்லாம் மாநில அரசும் அறிவிப்பது நடைமுறை. பண்டிகை கால முன்பணம் வழங்கப்படுவதில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் தேவையான நிதி இதற்காக ஒதுக்கப்படுவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தன.இந்நிலையில் ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தான் திருமண முன்பணம் வழங்குவதிலும் நீடித்தது. இவ்வாறாக மொத்தமுள்ள 9ல், பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு காலத்தையும் அவர்களின் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு மட்டுமே புதிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். மற்ற அறிவிப்புகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்தவை தான். அதாவது பறிக்கப்பட்ட சலுகைகளை பல போராட்டங்களுக்கு பின் வழங்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை நிலை என ஆசிரியர்களிடையே விவாதப்பொருளாக மாறியுள்ளது.

மிஞ்சியது ஏமாற்றம் தான்

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவது என்பது தான். 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சிக்கு வரப்போவதற்காக 2021 தேர்தல் அறிக்கையில் தி.மு.க., உறுதியளித்ததால் நம்பிக்கை ஏற்பட்டது. அதுபோல் 14 ஆண்டுகளுக்கும் மேலாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள சம்பள முரண்பாடு களையப்படும், பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவர், 'டெட்' தேர்வு எழுதியவர்களுக்கு நடத்தப்படும் நியமனத் தேர்வு ரத்து செய்யப்படும், 'அவுட்சோர்ஸ்' முறையிலான நியமன முறை ரத்து செய்யப்படும் என ஆசிரியர்கள் நலன்சார்ந்த, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாக்குறுதிகளை ஒன்றை கூட கண்டுகொள்ளவில்லை.பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரம் குறித்த அறிவிப்பு இல்லை. தி.மு.க., ஆட்சியின் கடைசி பட்ஜெட்டிலும் ஆசிரியர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான். இதன் எதிரொலி வரும் சட்டசபை தேர்தலில் வெளிப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajasekar Jayaraman
ஏப் 30, 2025 13:54

திரும்ப பறிக்க எவ்வளவு நேரம் ஆகும் இந்த திருட்டு திராவிட மாடலுக்கு.


kumar
ஏப் 30, 2025 06:46

ஏன் மக்கள் பிரச்சனைகளை தீர்க்காம இந்த லஞ்சம், ஊழல் பண்ணி ஒரு வேலையும் செய்யாம மக்களை அலயவிடும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பென்ஷன் ஒரு கேடா? ஏன் ஒன்றுக்கும் லாயக்கில்லாத பயலே அதுக்கு மட்டும் பணம் இருக்கா? டேய் மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்க பாரு


Padmasridharan
ஏப் 30, 2025 05:40

சாமியோவ்.. கடந்த பொங்கலுக்கு, பல ரேஷன் கடையில புடவை, வேஷ்டி கொடுக்கலைங்க மெலிசா இருக்கிற கரும்பு மக்களுக்கு கொடுத்துட்டு, நல்ல தடியா இருக்கிறத உள்ள வெச்சிக்கிட்ட ஊழியருங்க. இந்த பறிக்கப்பட்டது, எப்ப கொடுப்பீங்க


முக்கிய வீடியோ