உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரசாந்த் கிஷோரின் அரசியல் முடிந்துவிட்டதா?

பிரசாந்த் கிஷோரின் அரசியல் முடிந்துவிட்டதா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர், தன் சொந்த மாநிலமான பீஹாரில், ஜன் சுராஜ் என்ற கட்சியை கடந்தாண்டு அக்டோபரில் துவங்கினார். நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலில், இவரது கட்சி படுதோல்வி அடைந்தது; ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை அளித்து அவற்றை வெற்றி பெற செய்த பிரசாந்த் கிஷோரால், தன் சொந்த மாநிலத்தில் வெற்றி பெற முடியாமல் போனது. இவரது கட்சிக்கு வெறும், 3.4 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.ஆனால், இப்படி கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் முதல்வர் ஆனவர் அரவிந்த் கெஜ்ரிவால். 2012ல் ஆம் ஆத்மியை ஆரம்பித்து, 2013 டிசம்பரில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். இதே போல, பிரசாந்த் கிஷோரால் வெற்றி பெற முடியவில்லை; என்ன காரணம்?இளைஞர்களை தன் பக்கம் இழுக்க பிரசாரம் செய்தார். 'நிதிஷ் ஆட்சியில் ஊழல், வேலை வாய்ப்பு கிடையாது. பீஹாரில் தொழிற்சாலைகள் இல்லை. இதனால், பீஹாரிகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர்' என, கடுமையாக பிரசாரம் செய்தார். மீடியா இவருக்கு பல விதங்களில் உதவி செய்து, தேசிய அளவில் கிஷோர் பிரபலம் ஆனார்.வெற்றி பெற்றால் மதுவிலக்கை ரத்து செய்து மீண்டும் சாராயத்தைக் கொண்டு வருவேன் என சொல்லி இளைஞர்களைக் கவர்ந்தார். ஆனால், இதுவே இவருக்கு வினையாகிவிட்டது. கிராமத்திலுள்ள பீஹார் பெண்கள் சாராயத்தால் கஷ்டப்பட்டவர்கள். இவர்கள் அதிக அளவில் நிதிஷ் குமாருக்கு ஓட்டளித்தனர்.அப்படியெனில், பிரசாந்த் கிஷோரின் அரசியல் அவ்வளவு தானா? '48 வயதாகும் இவருக்கு இனிதான் அரசியல் வாழ்க்கை ஆரம்பிக்கப் போகிறது' என்கின்றனர். நிதிஷ் - லாலுவிற்கு பின், பீஹார் அரசியலில் கிஷோருக்கு வாய்ப்பு உள்ளது; இன்னும் வயது இருக்கிறது.ஆனால், அதுவரை இவர் அரசியலில் நீடிக்க வேண்டுமே? 'தோல்வி அடைந்தாலும் அரசியல் தொடரும்' என, உறுதி அளித்து விட்டார் கிஷோர். எனவே, அடுத்த பீஹார் சட்டசபை தேர்தலில் கிஷோர் வெற்றி பெற வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Balasubramanian
நவ 23, 2025 20:08

மற்ற மாநிலங்களில் பருந்துகளுக்கு பறக்க கற்றுக் கொடுத்து சொந்த ஊரில் ஊர் குருவி ஆன பின் பருந்து ஆக முடியாது!


RAMESH KUMAR R V
நவ 23, 2025 14:44

நல்ல ஜோஷியரிடம் கேளுங்கள் அவரது வருங்காலம் பற்றி கூறுவார் தெளிவாக.


ஆசாமி
நவ 23, 2025 13:29

எப்ப ஆரம்பிச்சது ?


KRISHNAN R
நவ 23, 2025 10:01

ஊரை அடிச்சு ஊலையில் போட்டாங்க, அவங்க கிட்ட அடிச்ச ஆளு


ஆரூர் ரங்
நவ 23, 2025 09:33

ஏணி எப்போதும் மேலே சென்றதில்லை.


Barakat Ali
நவ 23, 2025 07:56

பிரசாந்த் கிஷோருக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்றீங்க ..... எனக்கும் வாய்ப்பிருக்குன்னு சொல்லுங்க....


Ramesh Sargam
நவ 23, 2025 06:56

ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் அழிந்துவிட்டது என்று அபசகுனமாக கூறுகிறீர்கள்.


Field Marshal
நவ 23, 2025 06:45

அரவிந்த் கெஜ்ரிவால் மாதிரி ஜொலிக்க நினைத்தார் ..நிதிஷுடன் இணைந்திருந்தால் ஜனதா தளம் இவர் கட்டுப்பாட்டில் வந்திருக்கும்


Venugopal, S
நவ 23, 2025 12:15

அதெல்லாம் சும்மா. ஒடிசாவில் என்ன ஆயிற்று? வலது இடது கரம் அப்டி இப்படின்னு அடிச்சு விட்டனர் இப்போ துண்டை காணோம் துணியை காணோம் அப்டின்னு ஆளே அட்ரஸ் இல்லாமல் ஓடி விட்டார்...நவீன் பட்நாயக் பிறகு இவர் தான் என்றனர்...


D.Ambujavalli
நவ 23, 2025 06:12

இந்தப்படுதோல்விக்குப் பின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பணத்தை செலவிட்டு நஷடமடைந்தவர்கள் இவரை விட்டு விலகிவிடுவார்கள் கட்சி ஆரம்பித்து சற்று நிலைப்பாடு அடைந்தபின் தேர்தலில் நுழைந்திருக்கலாம். ‘எல்லாருக்கும் சொல்லும் பல்லி தான் போய்க் கழுநீர்ப்பானையில் விழுந்ததாம் ‘ என்ற நிலை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை