உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ.,வை நம்பி நட்டாற்றில் நிற்கிறாரா செங்கோட்டையன்?

பா.ஜ.,வை நம்பி நட்டாற்றில் நிற்கிறாரா செங்கோட்டையன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''பா.ஜ.,வை நம்பியதால், நட்டாற்றில் செங்கோட்டையன் நிற்கிறார்; அடுத்து என்ன செய்வது என்ற புரியாத நிலையில் துாக்கமின்றி தவித்து வருகிறார்,'' என, அ.தி.மு.க.,வில் இருக்கும் செங்கோட்டையன் நலன் விரும்பிகள் கூறுகின்றனர். இது குறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=308vlyne&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்குமாறு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 'கெடு' விதித்தபோது, அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன; அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சேர்த்து பறித்தார். ஆனால், கட்சியில் இருந்து செங்கோட்டையனை நீக்கவில்லை. அதே நேரத்தில், டில்லி சென்ற செங்கோட்டையன், அங்கு பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இதனால், அவருக்கு பா.ஜ., மேலிட ஆதரவு இருக்கலாம் என பழனிசாமியும் நம்பினார். அதற்கேற்பவே அரசியல் சூழல்களும் அப்போது இருந்தன. இதனால், செங்கோட்டையன் விஷயத்தில் அதிரடி நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாமல், பழனிசாமியும் பொறுமையாகவே நடந்து கொண்டார். கட்சியில் இருந்து அவரை நீக்குவதில் அவசரம் காட்டவில்லை. இந்நிலையில், முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்காக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற செங்கோட்டையன், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், சசிகலா, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோரை சந்தித்தார். தனக்கு எதிராக செயல்படும் அவர்களுடன் செங்கோட்டையன் கைகோர்த்ததை, பழனிசாமி ரசிக்கவில்லை; கடும் ஆத்திரம் அடைந்தார். சந்தேகம் இனியும் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், செங்கோட்டையன் போலவே, கட்சி தலைமைக்கு எதிராக பலரும் குரல் எழுப்பக்கூடும் என அச்சப்பட்டார். இதையடுத்து, டில்லியில் இருக்கும் கட்சியின் மூத்த தலைவர்கள் வாயிலாக, பா.ஜ., தலைமையிடம் சில தகவல்களை கொண்டு சென்றார். அதன்படி, 'செங்கோட்டையன் விஷயத்தில் பா.ஜ., பின்னணியில் இருப்பதாக பழனிசாமிக்கு சந்தேகம் இருக்கிறது. அதனாலேயே, இது நாள் வரை கட்சியில் இருந்து அவரை நீக்கும் முடிவை எடுக்காமல் இருந்தார்; இதே நிலை இனியும் தொடர்ந்தால், அது அ.தி.மு.க., செயல்பாடுகளை முழுமையாக பாதிக்கும். 'செங்கோட்டையனை உடனடியாக கட்சியில் இருந்து நீக்கும் முடிவை பழனிசாமி எடுத்து விட்டார். இந்த விஷயத்தில் பா.ஜ.,வின் பின்புலம் இருக்குமானால், அது கூட்டணிக்கே நெருக்கடியை ஏற்படுத்தலாம். அதனாலேயே, இதுவரை பொறுமையாக அணுகிய பழனிசாமி, பா.ஜ., நிலைப்பாட்டை அறிந்த பின், அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுத்து இருக்கிறார். உட்கட்சி பிரச்னை 'அதனால், பா.ஜ.,வின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய விரும்புகிறோம்' என, பா.ஜ., மேலிடத் தலைவர்களிடம் அ.தி.மு.க., தலைவர்கள் எடுத்துச் சொன்னார்கள். இதற்கு பதிலளித்த பா.ஜ., மேலிடத் தலைவர்கள், 'மூத்த அரசியல் தலைவர் மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் என்ற முறையில் தான் செங்கோட்டையனை, பா.ஜ., டில்லி தலைவர்கள் சிலர் சந்தித்தனர். அவர் விஷயம், முழுக்க முழுக்க அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னை சம்பந்தப்பட்டது. அதில், பா.ஜ., தலையிட விரும்பவில்லை. அவர் விஷயத்தில், பழனிசாமி என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்' என சட்டென கூறிவிட்டனர். இப்படி பா.ஜ., தரப்பில் இருந்து பதில் வரும் என அ.தி.மு.க., தலைவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், சந்தோஷத்தின் உச்சத்துக்குப் போன அவர்கள், உடனே அந்த தகவலை பழனிசாமிக்கு கொண்டு சென்றனர். அதையடுத்தே, செங்கோட்டையன் மீது பழனிசாமி அதிரடியாக நடவடிக்கை எடுத்து, கட்சியில் இருந்து நீக்கி விட்டார். தன் விஷயத்தில் பா.ஜ., இப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கும் என செங்கோட்டையன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை; அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் உள்ளார். தன்னை கட்சியில் இருந்து நீக்கிய நாளில், இரவு முழுதும் தனக்கு துாக்கமே இல்லை என செங்கோட்டையன் கூறியிருப்பதன் பின்னணி இது தான். இனி செங்கோட்டையன் அரசியல் எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

உதய சூரியன்
நவ 02, 2025 15:48

இப்படி சொந்தக் கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டு அடுத்த கட்சியை நம்பி அரசியல் செய்தால் நட்டாற்றில் இல்லை நடுத்தெருவில்தான் நிற்கனும்.


ஜெகதீசன்
நவ 02, 2025 12:58

பிடிக்காவிட்டாலும் கட்சி தலைவரை அனுசரித்து தானே ஆகனும்? எதிர்ப்பதாக இருந்தால் மாற்று திட்டம் கைவசம் இருக்கனும்.


Sun
நவ 02, 2025 09:23

இத்தனை வருடங்களாக அந்த ஏரியா அ.தி.மு.கவில் ஒரு சிற்றரசர் போல் அரசியல் செய்து வந்தார். சீனியர் என்பதால் யாரும் இவர் செய்யும் தவறுகளை கண்டு கொள்வதில்லை. ஏன் எடப்பாடியாரே என்றைக்காவது இவர் மாறுவார் என கடந்த ஆறு மாதமாக கட்சிக்கு எதிராக இவர் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும்தான் இருந்தார். தன்னை ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி என தானே நினைத்துக் கொண்டு பத்து நாள் கெடு எல்லாம் விதித்தார். பசும்பொன்னில் இவர் நடந்து கொண்ட விதம் யாருமே ஏற்றுக் கொள்ள முடியாதது. அ.தி.மு.க வை விட்டு என்னை நீக்கினால் சந்தோசப்படுவேன் என்றது இவரது ஆணவத்தின் உச்சம். இனிமேலாவது அங்கு புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும்.


Haja Kuthubdeen
நவ 02, 2025 08:44

செங்கோட்டையனுக்கு எடப்பாடி முதல்..மூத்த தலைவர்கள்..தொண்டர்கள் அனைவருமே மதிப்பும் மரியாதையும் கொடுத்தே வந்துள்ளனர்.எடப்பாடியும் அதிரடியாகவெல்லாம் முடிவும் எடுக்க வில்லை.செங்கோட்டையன் பண்ணீர் தினகரன் சசி போன்றோரை சந்தித்தது ஏற்று கொள்ள முடியாத ஒன்று.அதன் பலனை அனுபவிக்கட்டும்.


pmsamy
நவ 02, 2025 08:24

எடப்பாடி பழனிச்சாமிஏ மக்களுக்கு தெரியாது. இதுல செங்கோட்டையன் யார் என்று மக்களுக்கு தெரியவே தெரியாது.


Senthoora
நவ 02, 2025 07:41

இதுவரை யாரு கரை சேர்ந்தாங்க அண்ணாதிமுகவில்.


Sun
நவ 02, 2025 07:26

இவர் ஒரு டம்மி பீசுன்னு பா.ஜ.கவிற்கு தெரியாதா?


Venugopal S
நவ 02, 2025 07:25

பாஜக என்ற அரசனை நம்பி அதிமுக கைவிட்டவர் ஆகிவிட்டார் செங்கோட்டையன்!


Govi
நவ 02, 2025 05:33

மற்றெரு .O.P S அவ்வளவுதான்


சமீபத்திய செய்தி