உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அதிரடிக்கு தயாராகிறதா மத்திய அரசு? டில்லியில் நயினாருக்கு பாடம் நடத்திய அமித் ஷா

அதிரடிக்கு தயாராகிறதா மத்திய அரசு? டில்லியில் நயினாருக்கு பாடம் நடத்திய அமித் ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அவசர அழைப்பில் டில்லி சென்ற தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அடுத்தகட்ட அதிரடிகள் தொடர்பாக, அமித் ஷா பெரிய 'பிளான்' வைத்திருப்பது, இந்த அரை மணி நேர சந்திப்பில் தெரியவந்துள்ளதாக, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4qmqswol&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தடையுத்தரவு

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததும், இரு கட்சியினரிடம் ஏற்கனவே நிலவிய முரண்களை முழுமையாக அகற்ற வேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர்களிடம் அமித் ஷா கூறிச் சென்றார். அதன்பின்னும், ஒருசிலர், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும்; அதில் பா.ஜ.,வுக்கும் பங்கு உண்டு' என்பதுபோல பேசி வந்தனர். இது, அ.தி.மு.க., தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அமித் ஷாவிடம் இதுபற்றி பேசியுள்ளனர். அதையடுத்து நயினாரை தொடர்பு கொண்ட அமித் ஷா தரப்பினர், 'கூட்டணி குறித்து ஆளாளுக்கு கருத்து சொல்ல வேண்டாம். அ.தி.மு.க., தரப்பில், பழனிசாமி தவிர யாரும் எதுவும் பேச மாட்டார்கள்' என, சொல்லி இருந்தனர்.இதையடுத்தே, கூட்டணி குறித்து தேவையில்லாமல் கருத்து சொல்ல, தங்கள் கட்சியினருக்கு நயினாரும், பழனி சாமியும் தடையுத்தரவு போட்டனர். கூட்டணி பற்றியோ, ஆட்சி அமைப்பு பற்றியோ, யாரும் எதுவும் இப்போது சொல்வதில்லை.இந்நிலையில், அவசரமாக டில்லி அழைக்கப்பட்ட நயினார் நாகேந்திரனுடன், 30 நிமிடங்களுக்கும் மேலாக அமித் ஷா பேசியுள்ளார். தி.மு.க., அரசின் நிர்வாக தோல்விகளை, மக்களுக்கு எல்லா வழிகளிலும் எடுத்துச் சொல்ல வேண்டும்போராட்டங்கள், பொதுக்கூட்டங்களை இதற்காகவே திட்டமிடுங்கள்மாநில அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல்கள், நீதிமன்ற உத்தரவுக்கு பின், பதவி விலகிய செந்தில் பாலாஜி, பொன்முடி விவகாரங்கள் குறித்தெல்லாம், மக்களிடத்தில் பேசுங்கள். இதற்காக தகவல் தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்துங்கள்.இதுபோன்ற பல அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் நயினாரிடம், அமித் ஷா கூறியிருக்கிறார்.அதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணை குறித்து, அமித் ஷா முக்கியமாக பேசியிருக்கிறார்.

அறிவுரை

'அதன் பின்னணியை, அமலாக்கத் துறை முழுமையாக வெளியில் கொண்டு வரும். அதற்கு முன், அரசு அதிகாரிகளில் இருந்து அறிவாலயம் வரை பலரையும் அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைக்கும். தேவையானால் யாரையும் கைது செய்யும்' என்றும் கோடிட்டு காட்டியுள்ளார் அமித் ஷா.அரவிந்த் கெஜ்ரிவால் மீதான நடவடிக்கைகளில் டில்லி பா.ஜ.,வினர் எப்படி செயல்பட்டனரோ, அதைவிட சாதுரியமாகவும் வேகமாகவும், இந்த விஷயத்தில் தமிழக பா.ஜ.,வினர் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியிருக்கிறார்.'தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னணி தலைவர்கள் மீது நடவடிக்கைகள் வரும். அதை பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாக பயன்படுத்தும் விதமாக, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு முழுக்க முழுக்க தமிழக பா.ஜ., தலைவர்களிடம் தான் உள்ளது. இந்த மாதிரியான விஷயங்களில், நீங்கள் கொஞ்சம் அதிரடியாக செயல்பட வேண்டும்' என்றும், நயினாரிடம் அமித் ஷா கூறியுள்ளார். தமிழக ஆட்சியாளர்கள் மீது, மத்திய அரசு வேகமான நடவடிக்கைகளை முடுக்கிவிட ஆயத்தமாகி வருவதையே, இந்த சந்திப்பும், அமித் ஷா பேச்சும் உணர்த்துவதாக, தமிழக பா.ஜ., வட்டாரத்தில் கூறப்படுகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Suresh Velan
ஏப் 30, 2025 19:36

அண்ணாமலையை சவுண்ட் விட கூடாது என்று பிஜேபி சொல்ல அவர் அடங்கி விட்டார் , அது ஒரு மோசமான decision . இவ்வளவு சொல்லியும் பிஜேபி நைனா ஏன் வாய் திறப்பதில்லை . dmk கண்டு பயமா ? தன்னுடைய த்ரீ ஸ்டார் ஹோட்டலில் தமிழக அரசு raid வந்து விட்டால் இவர் செய்யும் ஊழல் தெரிய கூடும் ,அதை கண்டு இவருக்கு பயம், மோடியே சொன்னால் கூட dmk உஊழல் பற்றி பேச மாட்டார். இனி அண்ணாமலை சவுண்ட் தமிழகத்தில் கேட்க வில்லை என்றால் தமிழக பிஜேபி தண்ணீர் இல்லாத கிணறு ஆகிவிடும்.


venugopal s
ஏப் 29, 2025 18:14

தமிழகத்தைப் பொறுத்தவரை சகுனி என்றுமே சாணக்கியன் ஆக முடியாது!


திருட்டு திராவிடன்
ஏப் 29, 2025 17:52

இதற்கு சரியான ஆள் அண்ணாமலை தான். அவர்தான் இப்பொழுது இல்லையே. இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க.


அப்பாவி
ஏப் 29, 2025 11:10

ரொம்ப துள்ளினால்.....


sugumar s
ஏப் 29, 2025 09:27

bjp to list all failures including last election promises not done. spread entire TN in regular intervals so that people get reminded very often about this till this reflects in 2026 election as a result


பாமரன்
ஏப் 29, 2025 08:42

ஒங்க ஃபீலிங்கு ஒரு அளவே இல்லையா...??? எதுக்கோ கூப்ட்டு நங் நங்குன்னு குட்டு வச்சி அனுப்பறாய்ங்க... இதைல்லாம் வெளியே சொல்ல முடியுமா...


vivek
ஏப் 29, 2025 16:57

என்ன பாமர்.....நேத்து ஓசி பீர் பார்ட்டிக்கு போனியாமே