உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / த.வெ.க., அணிகள் பட்டியலில் திருநங்கை அணிக்கு 9ம் இடமா? திருநங்கை செயற்பாட்டாளர்கள் கொந்தளிப்பு

த.வெ.க., அணிகள் பட்டியலில் திருநங்கை அணிக்கு 9ம் இடமா? திருநங்கை செயற்பாட்டாளர்கள் கொந்தளிப்பு

மதுரை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கான புதிய அணிகள் பட்டியல் வெளியான நிலையில் அதில் திருநங்கை அணிகளுக்கு ஒன்பதாம் எண்ணில் குறிப்பிட்டுள்ளது தவறு என திருநங்கை செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கேற்ப 28 அணிகள் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 19 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உடன் விஜய், பொதுச்செயலர் ஆனந்த் சந்தித்த நிலையில் நேற்று முன்தினம் புதிதாக 9 அணிகள் உருவாக்கப்பட்டதாக பட்டியல் வெளியானது.இதில் ஒன்பதாம் இடத்தில் திருநங்கைகள் அணி என இடம்பெற்றுள்ளது. ஒன்பதாம் எண்ணில் திருநங்கைகள் அணியை குறிப்பிடுவதா என திருநர் இயக்க செயற்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கண்டனம்

அதில் 'நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விஷயம். அதை ஒன்பதாம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள்' என்று பதிவிட்டிருந்தார். இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஆவண மைய இயக்குநர் பிரியாபாபுவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோசமான மனநிலை

அவர் கூறியதாவது: இது மிகவும் மோசமான மனநிலை. வேண்டுமென்றே ஒன்பதாம் எண்ணில் திருநங்கை அணி என குறிப்பிடுவதற்கு பின்னால் மிகப்பெரிய வன்மம் இருக்க வேண்டும். அணி என தனியாக குறிப்பிட்டது நல்ல விஷயம் தான் என்றாலும், இந்த கேலியை கடந்து செல்ல முடியாது. திருநர் செயற்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா கண்டனத்தை பதிவு செய்தது சரியே. இன்னமும் அடிப்படையே தெரியாமல் பனையூருக்குள் உட்கார்ந்து கொண்டே அரசியல் செய்வது என்றால் எப்படி? விஜய்க்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே 'சிவகாசி' உட்பட அவரது படங்களில் திருநங்கைகளை பற்றிய கிண்டல், கேலி நிறையவே இடம்பெற்றுள்ளது. பட்டியல் எண்ணை மாற்றி மறுஅறிவிப்பு செய்தால்தான், திருநங்கைகள் எதிர்ப்பில் இருந்து தப்பிக்க முடியும். இவ்வாறு பிரியாபாபு கூறினார்.இதுகுறித்து த.வெ.க. கொள்கை பரப்பு செயலர் ராஜ்மோகனிடம் கேட்டபோது, ''கட்சியிடமிருந்து அப்படியொரு பட்டியல் வெளியிடப்படவில்லை. தலைமை அலுவலகத்தில் இருந்து யாரும் அனுப்பவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழ்வேள்
பிப் 13, 2025 13:57

கூத்தாடி குசும்பு...இவனையெல்லாம் ஒரு ..........endru மதித்து கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் பயல்களை சொல்லவேண்டும்... கூத்தாடிக்கு கோவில் கட்டிய மாநிலம்தானே இது ..எப்படி இருக்கும் ?


வீரபாண்டி,அலங்காநல்லூர்
பிப் 13, 2025 16:30

குழந்தைகள் அணி என்ற ஒன்றும் இருக்கிறதாம் அப்படி இருந்தால் நடிகர் விஜய் மாநில குழந்தைகள் அணி தலைவராக எந்தக் குழந்தையை நியமிப்பார் என ஆவலாக உள்ளது.


Ramesh Sargam
பிப் 13, 2025 13:14

பேசாம திருநங்கைகள் ஒன்று சேர்ந்து மற்றொரு TVK ஆரம்பித்து விடலாம். அதான் திருநங்கைகள் வெற்றி கழகம் TVK


Oviya Vijay
பிப் 13, 2025 11:30

எதிர்பாராத விதமாக தற்செயலாக நடந்ததாக இருக்கலாம். வேண்டுமென்றே இவ்வாறாக செய்து தங்கள் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. இதை பெரிது படுத்தாமல் இருப்பதே நன்று...


ஆரூர் ரங்
பிப் 13, 2025 10:35

முதலிடத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுத்து விஜய் ஒன்பதாம் இடத்துக்கான தலீவரா அறிவித்துக் கொள்ளலாம். பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.