உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போலி கிளினிக் நடத்திய ஜோலி நான்காவது முறையாக சிக்கினார்

போலி கிளினிக் நடத்திய ஜோலி நான்காவது முறையாக சிக்கினார்

திருப்பூர்: மாவட்ட மருத்துவ பணிகள் துறை அதிகாரிகளுக்கு போக்குகாட்டி, இடத்தை மாற்றி, மாற்றி போலி கிளினிக் நடத்தி வந்த, பிளஸ் 2 மட்டுமே படித்துள்ள 65 வயது ஆசாமி நேற்று நான்காவது முறையாக பிடிபட்டார்.திருப்பூர், முருகம்பாளையம், சூர்ய கிருஷ்ணா நகரில் செயல்படும் இமாலயா மெடிக்கல் ஸ்டோரில் மருந்து விற்பனை செய்பவர், பொதுமக்களுக்கு ஊசி போட்டு மருத்துவம் பார்ப்பதாக, மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மீரா தலைமையில் குழுவினர், வீரபாண்டி இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி மற்றும் போலீசார், அங்கு ஆய்வு நடத்தினர். அதில், கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோலி அகஸ்டின், 65, மருத்துவம் படிக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, மருந்து, மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்தனர். இருப்பு வைத்திருந்த மருந்து, மாத்திரை, ஊசிகளை பறிமுதல் செய்த மருத்துவ துறை அதிகாரிகள், கிளினிக் மற்றும் மருந்தகத்தை பூட்டி, 'சீல்' வைத்தனர்.இணை இயக்குநர் மீரா கூறுகையில், “மருந்தகத்துக்குள் சிறிய அறையில் இரண்டு படுக்கைகளுடன் கிளினிக் செயல்பட்டு வந்தது. மருந்து, மாத்திரையுடன் ஊசி செலுத்தி வந்த இவர், எவ்வித ரசீதும் தராமல் மருத்துவம் பார்த்து, நோயாளிகள் உடன் வருவோரிடம் பில் எதுவும் தராமல், 'ஜிபே, போன் பே'வில் பணம் பெற்றுள்ளார்.நிறைய மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்துள்ளார். பிளஸ் 2 படித்த சான்றிதழ் வைத்துள்ளார். மருந்து கடை நடத்த உரிமம் பெற்றுள்ளாரா என விசாரணை நடக்கிறது,” என்றார்.முன்னதாக, ஜோலி அகஸ்டின் போலி கிளினிக் நடத்தி, 2017ல் திருப்பூரிலும், 2019ல் திருப்பூரில் வேறு ஒரு இடத்திலும், 2024 ஏப்ரலில் முருகம்பாளையத்திலும் கைதாகி உள்ளார். தற்போது சூர்ய கிருஷ்ணா நகரில் கிளினிக் நடத்தி, நான்காவது முறையாக சிக்கியுள்ளார்.ஜெயிலில் இருந்து வந்ததும், இடம் பார்த்து போலி கிளினிக் துவங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்காவிடில், மீண்டும் ஜாமின் பெற்று வந்ததும், எங்காவது கிளினிக் அமைத்து மக்களின் உயிரோடு விளையாடுவார் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

D Natarajan
மே 24, 2025 21:12

பேராசை பிடித்த வக்கீலகளும், நீதி மன்றமும் தான் இதற்கு காரணம். பிணை ஒரு curse .


சிந்தனை
மே 24, 2025 20:27

காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் உதவி இல்லாமல் இத்தனை நாள் யாராலாவது நடத்தி விட முடியுமா


naranam
மே 24, 2025 13:48

இவங்க ஓட்டு போட்டு தான முதல்வர் அந்தப் பதவியில் இருக்கிறார்? அதனால் தான் அவர் மீண்டும் மீண்டும் போலி கிளினிக் நடத்துகிறார். எல்லாம் அப்பாவவின் மகிமை.


Krishnamurthy Venkatesan
மே 24, 2025 11:44

2017. 2019, 2024 மற்றும் இப்போது 2025 இல் பிடிபட்டுள்ளார். மீண்டும் 2027இல் பிடிபடுவார். வாழ்க அவர் தொண்டு.


Nandakumar Naidu.
மே 24, 2025 11:16

மக்களின் உயிர்களுடன் விளையாடும் இது போன்றவர்களை தூக்கில் போட வேண்டும்.


கண்ணன்
மே 24, 2025 09:43

இவருக்கு இதே ஜோலியாக, ஜாலியாக வேலை பார்த்துள்ளார் நல்ல வேளை யாராவது இறக்கும் முன் பிடித்தார்களே!


அப்புசாமி
மே 24, 2025 08:54

அனுபவமே படிப்பு. இவர் மருத்துவம் பாத்து எத்தனை பேர் செத்தார்கள்?


Padmasridharan
மே 24, 2025 08:26

இதுவரை ஏதேனும் உயிரோடு விளையாடிருக்கிறாரா.. இனிமேல் நடக்காமல் இருக்க இதுக்கு கூடவா குண்டர் சட்டம்.. காவலர்களும் ஃபோன் மூலமாகத்தான் லஞ்சப்பணதை மிரட்டி வாங்குறாங்க. . ஒரு முறை பிடிபட்டவர் குற்றத்தை தொடருகிறார் என்றால் இவரை பிடித்த உயிரையும் பொருட்களையும் காக்கும் காவலர்கள் எவ்வளவு பணம் அடித்து விட்டார்கள் இந்த ஆளை . .


புதிய வீடியோ