உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கார்த்திகை தீபம் ஏற்றுவது உறுதி; ராம ரவிக்குமார் ஆவேசம்

கார்த்திகை தீபம் ஏற்றுவது உறுதி; ராம ரவிக்குமார் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் கோரிக்கை, எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல; அது வரலாற்று மற்றும் ஆன்மிக மரபுகளை மீட்டெடுக்கும் உரிமை. இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்பதில் ஹிந்துக்கள் உறுதியாக உள்ளனர்' என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றம் மலையில், தீபம் ஏற்றும் கோரிக்கை, எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல; அது வரலாற்று மற்றும் ஆன்மிக மரபுகளை மீட்டெடுக்கும் உரிமை. சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என, மனுவில் எங்கும் கூறாத நிலையில், இதை ஒரு சதி திட்டமாக சித்தரிப்பது, கம்யூ., கட்சியின் அரசியல் கற்பனை.தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு, தீபம் ஏற்ற அனுமதித்து தீர்ப்பளித்துள்ள நிலையில், உண்மைகளை திரித்து பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் வீரபாண்டியன் மீது, நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறையே தொடரும்' என, சட்ட அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருப்பது, நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும் பொறுப்பற்ற செயல். வழக்கு நிலுவையில் உள்ளபோது, தீர்ப்பை முன்கூட்டியே தீர்மானிப்பதுபோல், அமைச்சர் பேசுவது சட்டத்திற்கு எதிரானது. அவர் தன் கருத்தைத் திரும்பப் பெற்று, பொது வெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Mani . V
ஜூன் 08, 2026 05:04

ஏன் திமிங்கிலம், கடந்த உங்களின் புரிந்துணர்வு கூட்டணிக் கட்சியின் ஆட்சியின் பொழுது இவ்வளவு ஆவேசப்படவில்லை?


D Natarajan
ஜூன் 07, 2026 21:37

விசில் பொடியன்களின் பேச்சை கேட்டு TVK க்கு வோட்டு போட்ட தமிழக ஹிந்துக்களே இப்போதாவது விழித்தெழுங்கள் . இந்த அரசு ஹிந்து விரோத அரசு. பாடம் கற்பிக்க படவேண்டும் .


Rathna
ஜூன் 07, 2026 21:06

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அங்கே முருகனின் வழிபாடு உள்ளது. ஆனால் அங்கே மதுரை நகரத்தை கொள்ளை அடிக்க வந்து, பல பெண்களை மனம் இழக்க வைத்த ஆப்கானிய, துருக்கிய கொள்ளையனுக்கு மதிப்பு தருவது எந்த விதத்தில் நியாயம்?


Suresh
ஜூன் 07, 2026 20:00

இதுதான் இவர்கள் செல்லிய மாற்றத்தின் லட்சணமா? இதற்கா இவர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தது??… தவெகா இன்னும் ஒரு திமுக என்று தினம் தினம் நிருபித்துக்கொண்டே இருக்கிறது. திருந்தாவிட்டால் வந்த வேகத்தில் காணாமல் போவார்கள்.


sankaranarayanan
ஜூன் 07, 2026 19:29

ஆட்சியாளர்களே முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் - கிக்கந்தருக்கு இரண்டு சமாதிகள் எப்படி இருக்க முடியும் ஒருவருக்கு ஒரே ஒரு சமாதிதான் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம் அதுதான் நடைமுறையும் அப்போ இரண்டு இடங்கள் இருந்தால் சிக்கந்தர் உடம்பை இரண்டாக பிளவு படுத்தினார்களா? ஆனால் இந்த சிக்கந்தருக்கு கோரிப்பாளையத்தில் ஒரு சமாதி ஏற்கனவே இருக்கும்போது அங்கே மக்கள் அவரை கொண்டாடும்போது இன்னொரு சமாதி அவருக்கு இந்த திருப்பரங்குன்றத்தின்மேல் ஒரு சமாதி கனவிலும் யாருமே கண்டிருக்க முடியாத விஷயம் அதை முதலில் நீதி மன்றமே தெளிவு படுத்த வேண்டும் இதை வேண்டுமென்றே சமுதாய சன்டை வரவேன்றுமென்று எண்ணி அரசியவாதிகள்செய்த சூழ்ச்சிதான். திருப்பரங்குன்ற மலை முழுது முருகனுக்கேதான் சொந்தம் மற்ற எந்த சமுதாயத்தினரும் அந்த மலையில் ஒரு அங்குலம்கூட சொந்தம் கொண்டாட லாயக்கு இல்லை முடியவும் முடியாது இதுதான் நடைமுறை


பாரதன்
ஜூன் 07, 2026 19:29

sivagiri கருணாநிதி பற்றி கூறிய கருத்து 100 சதவீதம் உண்மை. கருணாநிதி போன்ற கயமை கொண்ட திராவிட வாரிசுகள் தான் இப்போதைய அரசும் திருந்தினால் நல்லது.


Sivagiri
ஜூன் 07, 2026 19:01

ஸ்கந்தரை , சிக்கந்தர் ஆக்கியது , கருணாநிதி யின் வார்த்தைஜால அரசியல் விளையாட்டு . . . எப்போதும் யாரையாவது மோத விட்டுக் கொண்டே இருப்பது , ஜாதி மோதல் , மத மோதல் , அரசியல் மோதல் , மாநிலங்களுக்கு இடையே நதிநீர் மோதல் , மத்திய அரசுடன் மொழி மோதல் , இதெல்லாம் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு இவர்களை எல்லாம் , தான்தான் தீர்த்து வைக்கும் தலைவன் போல காட்டிக் கொண்டு அரசியலில் நிரந்தரமாக பிழைத்துக் கொண்டிருந்தார் . . . முஸ்லிம்களை தூண்டி விடுவதும் அவர்தான் , ஹிந்துக்களை தூண்டி விடுவதும் அவர்தான் , ஜாதிகளை மோத விடுவதும் அவர்தான் , மாநிலங்களுக்கு இடையே , மத்திய அரசுக்கு இடையே பிரச்சினைகளை உள்ளே விடுவதும் அவர்தான் , வந்த பின்னே போராட்டங்களை தூண்டுவதும் அவர்தான் . . . ஆகவே மோதல்கள் போராட்டங்கள் இருந்துகொண்டே இருக்க வேண்டும் , அவர் , அரசியலில் முன்னே சென்று கொண்டே இருப்பர் . . . அதன் தொடர்ச்சிதான் இதுவும் . . .


ravindran
ஜூன் 07, 2026 16:55

ஆனானப்பட்ட திராவிட மாடலையே தமிழக மக்கள் மூலம் குப்பைக்கு வீசியவர் கடவுள் முருகன் தான். தவெக எம்மாத்திரம்


Balaji Radhakrishnan
ஜூன் 07, 2026 16:22

நிர்மல் குமாருக்கு நேரம் சரியில்லை.


Tamilan
ஜூன் 07, 2026 14:36

இந்து மத வெறியர்களை, குண்டர்களை சிறையில் அடைக்க தவறிவிட்டது முந்தையா அரசு.


Suppan
ஜூன் 07, 2026 15:58

அந்த நவாஸ் கனி எந்த மத வெறியர்? ஆரம்பித்து வைத்தது அந்த ஆசாமிதானே


சமீபத்திய செய்தி