உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காசா... இல்லை கேசா...? அ.தி.மு.க., ஆட்டத்தை கலைக்க பகீர் திட்டம்!

காசா... இல்லை கேசா...? அ.தி.மு.க., ஆட்டத்தை கலைக்க பகீர் திட்டம்!

தமிழக கட்சிகள் எல்லாம் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் வேளையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மட்டும் மக்களை சந்திக்க, முதல் ஆளாக கிளம்பியிருக்கிறார். 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரிலான, மூன்று கட்ட பயணத்தில், 100 தொகுதிகளை கடந்திருக்கிறார். நான்காம் கட்ட பயணத்துக்காக, மதுரையில் இருக்கிறார். போகும் இடமெல்லாம் கூடும் கூட்டம் அவருக்கும், அவரது கட்சியினருக்கும் பெரிய உற்சாகத்தை தந்திருக்கிறது. https://www.youtube.com/embed/zgaXVSvFlC8

சிதறடிக்கும் வேலை

அதேநேரத்தில், ஆளுங்கட்சியின் கோபத்திற்கும் வழிவகுத்திருக்கிறது. மக்கள்நலப் பணிகளை நாலா பக்கமும் பரவலாக்கி, ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை போக்கும் முயற்சிக்கு எதிராக, பழனிசாமியின் பயணம் இருப்பதாக கருதுகிறது. அதன் காரணமாக, தி.மு.க.,வுக்கு எதிரான விஷயங்களையும், சக்திகளையும் ஒன்றுசேர விடாமல் சிதறடிக்கும் வேலையில், ஆளும் தலைமை இறங்கியிருக்கிறது. இதற்காகவே பல குழுக்கள் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளன. சமீப நாட்களாக, இக்குழுக்கள் பம்பரமாக சுழன்று வருகின்றன.

இது குறித்து, விபரம் அறிந்த அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:

அடுத்தும் ஆட்சிக்கு வந்தாக வேண்டிய கட்டாயத்தில், தி.மு.க., இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்கும் துடிப்போடு அக்கட்சித் தலைவர்கள், பல முனைகளிலும் ஆட்களை களம் இறக்கி விட்டு உள்ளனர். முதல் கட்டமாக, தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை சிதறடிக்க வேண்டும் என்பது, அவர்களுடைய இலக்கு. தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும்போது, தங்கள் வெற்றி எளிதாகி விடும் என்பது அவர்களுடைய கணிப்பு. அதற்காக, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்து மூன்றாவது சக்தியாக உருவாகி வரும் நடிகர் விஜய், எக்காரணம் கொண்டும் அ.தி.மு.க.,வோடு கைகோர்த்து விடக்கூடாது என்பதில், ஆளும் தரப்பு தெளிவாக இருக்கிறது. கூடவே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பல வகைகளிலும் பலவீனப்படுத்தும் வேலைகளையும் செய்து வருகிறது.

கட்சிக்குள் புகைச்சல்

அ.தி.மு.க.,வில் இருக்கும் சில பெரும் தலைகளை, அங்கிருந்து வெளியே கிளப்பும் காரியத்தை செய்யுமாறு, தி.மு.க., புள்ளிகள் சிலருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக, பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தி.மு.க.,வில் சேர்ந்தார். இதற்கு பலனாக, அவருக்கு சிறப்பு சலுகைகளும் செய்யப்பட்டதாக தகவல். அவரைப் போலவே, அ.தி.மு.க., தலைமை மீது வெறுப்பில் இருக்கும் பலரையும், தி.மு.க., பக்கம் கொண்டு செல்ல திட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. 'ஒன்று, தி.மு.க.,வுக்கு வாருங்கள்; இல்லையென்றால், த.வெ.க., பக்கம் போய்விடுங்கள்' என்பதே, இப்பணியை மேற்கொண்டிருக்கும் தி.மு.க., புள்ளிகளால் அ.தி.மு.க., முக்கியஸ்தர்களுக்கு தரப்படும் அன்பான நெருக்கடி. ஆளும் தரப்பின் வலைவிரிப்பு தெரிந்திருந்தும், கட்சிக்குள் புகைச்சல் இருப்பதை அறிந்திருந்தும், அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்ல மறுக்கும் பழனிசாமியின் அணுகுமுறையால், தி.மு.க., புள்ளிகளின் ஆள் இழுப்பு வேலை எளிதாகிறதாக சொல்லப்படுகிறது. இப்போது, அன்வர் ராஜாவுக்கு அடுத்து பழனிசாமிக்கு எதிராக குண்டு வீச தயாராகி வருகிறார், ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். வரும் 5ம் தேதி அதாவது நாளை மறுநாள் வரை கெடு விதித்திருக்கிறார்; யாருக்காக, எதற்காக அவர் காத்திருக்கிறார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இதற்கிடையில், பழனிசாமிக்கு போட்டியாக சசிகலாவை மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய வைத்து, அதிருப்தியாளர்களை அணிசேர்க்கும் திட்டமும் இன்னொரு பக்கம் தயாராகி வருகிறது. அதற்கு பின்னணியில் பன்னீர்செல்வம், தினகரன் மட்டுமின்றி, பழனிசாமிக்கு நெருக்கமான சில முன்னாள் அமைச்சர்களும் இருப்பதாக தெரிகிறது.

விபரங்கள் சேகரிப்பு

இந்த பயணத்திற்கு பின், பழனிசாமிக்கு எதிரான தங்கள் அரசியல் போக்கை தீவிரப்படுத்த, விஜய் பக்கம் செல்லவும் திட்டமிடுகின்றனர். அதை வாய்ப்பாக எடுத்து, அவர்களை நல்லபடியாக விஜய் பக்கம் அனுப்பி வைக்க அனைத்து வேலைகளையும் ஆளும் தி.மு.க., தரப்பு செய்து வருகிறது. அதோடு, இன்னொரு விஷயத்தையும் செய்ய தயாராகி வருகிறது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றிக்காக யாரெல்லாம் மும்முரமாக களத்தில் பணியாற்றுகின்றனர் என்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அவர்களின் வேகத்திற்கு, பணக்கட்டுகளால் முட்டுக் கட்டை போட முடிவு செய்துள்ளனர். அதற்கு மசியவில்லை என்றால், 'போக்ஸோ' உள்ளிட்ட வழக்குகள் பாயலாம் என்றும் பயமுறுத்த வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தனக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் சுழன்றடிக்கப் போகும் சூறாவளியை பழனிசாமி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது தெரியவில்லை. இவ்வாறு அந்த பிரமுகர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Modisha
செப் 04, 2025 00:46

விஜய் லயோலா கல்லூரியால் களமிறக்கப்பட்ட திமுக ஏஜென்ட் . இது நிறைய பேருக்கு புரியல .


Thiagaraja boopathi.s
செப் 03, 2025 23:08

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முதல்வர் ஆக்க முடியும்... இல்லை என்றால் இறுதியில் வைக்கோ கட்சி போல் தான்


JaiRam
செப் 03, 2025 22:35

போச்சோ வழக்குகள் பொய்யா பதியப்பட்டால் கவர் துறை அதிகாரிகள் ஜெயிலுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்


Kadaparai Mani
செப் 03, 2025 13:04

Anti Establishment wave sweeping in tamil nadu. That is why Edapppadi palanisamy is attracting very big crowds in all the meetings covering more than 100 constituencies . Always tamil nadu people prefer AIADMK to dmk if dmk is ruling party. DMK may not secure even opposition leader post in 2026


Ms muralidaran
செப் 03, 2025 11:49

ஆகட்டும் ஆகட்டும் திமுக மட்டும் வெளியே போகட்டும்


Sangi Mangi
செப் 03, 2025 11:31

ஏன்டா நமது உன் வாய்யா திறந்தா வண்டை வண்டைய பொய்யா தானே வரும்,, வாய் வலிக்காத இப்படி இட்டு கட்டி கதை சொல்ல, இதை நம்பி இந்த சனியன் சங்கிகள் இங்க வந்து அதுக வயத்துல இருந்து வன்மத்தை காக்குதுக... என்னத்த சொல்ல இந்த நமதை நம்பினால் நாண்டு கிட்டு சகா வேண்டியது தான்...


வேணு
செப் 03, 2025 09:51

நீங்க சொல்றதெல்லாம் சரி இந்த வாக்காளர்களை பத்தி எதுவுமே பேச மாட்டேங்கிறீங்க ஓட்டு போட வாங்க பேசி வேண்டிய விஷயத்தை அரசியல்வாதிகள் மட்டுமே பேசி நாட்டை குடிச்சவராக்க வேண்டுமா இது தேவையா அப்படியானால் தமிழ்நாட்டில் அரசியல் என்பது தங்கள் சுயநலத்துக்காக மட்டும்தான் அதை உடன் சேர்த்து பண விளையாட்டு பெரிதாக இருக்கிறது பாவம் பொதுமக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு


raja
செப் 03, 2025 08:05

எப்படியோ அதிமுக பிஜேபி வெற்றி கூட்டணியை பார்த்து ... திருட்டு திராவிட விடியா கொள்ளையன்...


மனி
செப் 03, 2025 06:11

ஒன்னும் எடுபடது. செங்கோட்டயன். எல்லாம் காணம போயிருவான் கட்சியால் தான் அவன். அவனால் கட்சியல்ல. தொண்டர்களால் தான் கட்சி


முருகன்
செப் 03, 2025 07:28

எடப்பாடி இது வரை பெற்ற வெற்றி எத்தனை அதற்குள் ஒருமையில் பேச்சு வரும் தேர்தலில் முன்றாம் இடம் தான் கிடைக்கும்


pakalavan
செப் 03, 2025 06:11

எடப்பாடியை தோற்க வைக்க பாஜகா போதும், அண்ணாமலையோட முக்கிய பணி அதிமுகாவை அழிப்பதுதான், 2026 க்குபிறகு அதிமுகா என்ற கட்சி தேய்ந்துவிடும், அதிமுக வை பிஜேபி வீழ்த்திவிடும்


SIVA
செப் 03, 2025 08:33

பகலவன் பகல் கனவு பலிக்காது .....


Kjp
செப் 03, 2025 08:36

எம்ஜிஆர் இருக்கும்போது 13 வருஷம் திமுக ஆட்சிக்கு வர முடிந்ததா. எத்தனை ஜகஜாலம் போட்டாலும் திமுக ஆட்சியின் மேல் மக்களுக்கு இருக்கும் கோபம் பற்றி உங்களுக்கு தெரியவில்லை. 2026 தேர்தல் திமுகவுக்கு பெரிய தலைவலி தான். அரசு ஆசிரியர் ஓட்டு இந்த தடவை திமுகவுக்கு பத்து சதவீதம் கிடைத்தால் அதுவே பெரிது. அரிசி விலை கிலோ ரூபாய் 100 தொட போகிறது. மின் கட்டணம் சிறு குறு தொழில் அதிபர்களை வாட்டி வதைக்கிறது.


முக்கிய வீடியோ