உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 13 முதல் 18 வயது வரை., 59 ல் 57 பேர் கைது !

13 முதல் 18 வயது வரை., 59 ல் 57 பேர் கைது !

திருவனந்தபுரம்: கேரளாவில் 13 வயது முதல் 18 வயது வரை 62 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டதாக அளித்த புகார் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக பத்தினம்திட்டா மாவட்ட போலீஸ் அதிகாரி வினோத்குமார் கூறியதாவது: தற்போது 18 வயது நிரம்பிய இளம்பெண் அளித்த புகாரில் இளவம்திட்டா போலீசில் முதல் வழக்கு பதியப்பட்டது. இதன்படி ஐபிஎஸ் அதிகாரி அஜீதா பேகம் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்தனர். இதில் பெண் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. பெண்ணின் அருகில் வசித்தவர்கள் மற்றும் புறபகுதிகளில் இருப்பவர் என தெரிய வந்தது. மொத்தம் 62 பேரில் 59 பேர் அடையாளம் கண்டறியப்பட்து. இன்று வரை 57 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் வெளிநாட்டில் இருப்பதாக தெரிகிறது. குற்றம் புரிந்தவர்களில் மைனர் சிறுவர்கள் 5 பேர் அடங்குவர்.

ரப்பர் தோட்டத்தில்

பெண் 12 ம் வகுப்பு படிக்கும் போது இன்ஸ்டாகிராமில் பழகிய இளைஞர் ஒருவர் பெண்ணை ரப்பர் தோட்டத்திற்கு அழைத்து சென்று சக நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். பெண்ணை பலர் தனியார் பஸ் ஸ்டாப் மற்றும் கார் உள்புறம், அரசு மருத்துவமனை அருகே இது போன்ற பகுதிகளுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Arul Narayanan
ஜன 21, 2025 14:01

....?


Ganapathy
ஜன 20, 2025 11:42

தொளபதி அதிகம் கேரளாவை புகழ்வதற்கு காரணம் அங்கு பெரிய அளவில் கூட்டுக்கற்பழிப்பு நடப்பதால் போலும். பல ஞானசேகரன்களும் சார்களும் உள்ள மாநிலம் கேரளம் என்ற பெருமை போலும் தொளபதிக்கு.


Barakat Ali
ஜன 20, 2025 18:50

திருந்தாத சார் இவன் .....


புதிய வீடியோ