உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆறு மொழிகள் தெரியும்: கமல்

ஆறு மொழிகள் தெரியும்: கமல்

சென்னை: ''கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டியது கட்டாயம்,'' என, நடிகர் கமல் பேசினார். தி.மு.க., மாணவர் அணி சார்பில், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், 'எங்கள் கல்வி, எங்கள் உரிமை' என்ற தலைப்பில், மாநில கல்விக் கொள்கை உரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசியதாவது: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டியது கட்டாயம். மத்திய அரசு, கல்வியில் கூட்டாட்சி வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏனெனில், மாநில அரசுக்குதான் மக்களின் மனநிலையும், கள யதார்த்தமும் தெரியும். மொழி திணிப்பு கூடாது. மொழி என்பது மட்டுமே கல்வி கிடையாது. தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை, தமிழ் மற்றும் ஆங்கிலம் என, இரு மொழிக் கொள்கையை தெளிவாக வலியுறுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை, தாய் மொழி கல்வி, ஆங்கிலம் மற்றும் இன்னும் பிற இந்திய மொழிகள் என, குறிப்பிடப்படுகிறது. பிற மொழிகள் என்றால் என்ன? நம் மாணவர்கள் இரு மொழிகளில் கற்று தேர்ந்தவர்கள். நடைமுறை தேவைக்கு ஏற்ப, மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளலாம். அதற்கு சிறந்த உதாரணம் நான்தான். நான் பள்ளிக்கு வெளியே இருந்து கூடுதலாக, 6 மொழிகளை கற்றுக் கொண்டேன். எனக்கு தேவைப்படும்போது, தேவையான மொழிகளை, நான் கற்றுக் கொண்டேன். ஆனால், என் தாய் மொழி தமிழ்தான். இன்றைய தொழில்நுட்ப உலகில், நிகழ் நேர மொழிபெயர்ப்பு சாதனங்கள் அதிகம் வந்து விட்டன. எனவே, மொழி திணிப்பு என்பது தேவையற்றது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

Perumal Pillai
ஆக 25, 2025 13:24

Even a third standard out like Kamala Dasaan knows six languages but we are permitted to learn no Indian language other than Tamil by illiterate fools, who use language as a medium of segregation and as a weapon against nationalists, for their own political gains. Learning Hindi must be made mandatory.


Nachiar
ஆக 25, 2025 01:24

உங்கள் ஆங்கில திறமையை ஸ்மிர்த்தி இரணிஉடனான வாதத்தில் பல தமிழரும் கண்டு வெட்கி தலை குணிந்தோம்.


Oviya Vijay
ஆக 24, 2025 22:54

நீங்கள் சொல்வது புரியப் போவதில்லை... பாவம்... உங்கள் எனர்ஜியை அவர்களுக்காக வீணாக்க வேண்டாம்...


நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2025 03:42

கரெக்ட்டா சொல்லிடீங்க உங்க தலைவருக்கு விக்கு மாற்றவே நேரம் சரியாயிருக்கும் இப்போ கூட்டணி சொல்வதெல்லாம் புரியுமா என்ன


R K Raman
ஆக 24, 2025 21:48

எந்த பள்ளியில் எந்த வகுப்பு வரை படித்தார் இவர்?


Nagarajan D
ஆக 24, 2025 21:38

சரி காமாலை ஹாசன் நீ என்ன மொழியில் பேசினாலும் எவருக்கும் புரியப் போறதில்லை உமக்கு எவ்வளவு மொழி தெரிஞ்சிருந்தாலும் யாருக்கும் பிரயோஜனமில்லை


GUNA SEKARAN
ஆக 24, 2025 21:26

அருமை


Nandakumar Naidu.
ஆக 24, 2025 21:11

ஆறு மொழிகள் தெரிந்து என்ன பயன், அறிவாலய கொத்தடிமை ஆகியது தான் மிச்சம்.


lana
ஆக 24, 2025 20:15

அப்போ அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2025 19:31

மொழியை திணிக்க வேண்டாம் என்று கூறும் நீங்க மதத்தை திணிக்கவேண்டாம் என்று கூறும் ஆண்மையை கொண்டிருக்க வேண்டும்


என்றும் இந்தியன்
ஆக 24, 2025 19:14

க+ மல +ஹா +சன் இப்பொழுது அர்த்தம் பாருங்கள் சரியாக இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை