உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராகுலிடமிருந்து இந்தியாவை பாதுகாப்போம்..: அந்துமணி பதில்கள்

ராகுலிடமிருந்து இந்தியாவை பாதுகாப்போம்..: அந்துமணி பதில்கள்

இரா.தீனதயாளன், விழுப்புரம்:

நுாறு சதவீதம் எத்தனாலில் இயங்கும் கார், இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளது குறித்து?சோளதட்டை போன்ற உள்நாட்டு மூலபொருட்களால் எத்தனால் தயாரிக்கப்படுவதால், நாம் எரிபொருட்களுக்கு வேறு நாட்டை கையேந்த வேண்டி இருக்காது. 'ஆல் த பெஸ்ட்' நிதின் கட்கரி!

க.அருச்சுனன், செங்கல்பட்டு:

அமைச்சர் வருகிறார் என்றாலே, 'போஸ்டர், பிளெக்ஸ் பேனர்' வைக்கும் காலத்தில், 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' துவக்க, மதுரை வந்த முதல்வர் விஜய்க்கு, எந்த போஸ்டரும், பேனரும் இல்லை என்பது பாராட்டத்தக்கது தானே?போஸ்டர், பேனர்கள் வைக்கும் செலவில், இன்னும் அதிக நலத் திட்டங்களை செயல்படுத்தலாமே... மேலும், பேனர்கள் பொதுமக்கள் மேல் சரிந்து விழும் அபாயமும் தவிர்க்கப்படும் அல்லவா!

என்.ஏ.நாகசுந்தரம், கன்னியாகுமரி:

'ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது; முழு வலிமையுடன் பாதுகாப்போம்' என, ராகுல் அழைக்கிறாரே?முதலில் இவரிடமிருந்து, இந்தியாவை நாமெல்லாம் பாதுகாப்போம் நாகசுந்தரம்!

மு.மதிவாணன், தர்மபுரி:

'அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதால், 1 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு, 685 கோடி ரூபாய் மிச்சமாகும்' என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளாரே?ஒரு லட்சம் கர்ப்பிணிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கும் விதமாக, மருத்துவ மனைகளின் கட்டமைப்பும், பயிற்சி பெற்ற மருத்துவர்களும் வேண்டும். சுகாதாரமான சூழ்நிலை இருந்தால், அரசு மருத்துவ மனைகளுக்கு தாமாகவே மக்கள் வருவரே!

க.பெரியசாமி, மதுரை:

கடந்த தி.மு.க., ஆட்சியில் மின்வெட்டே இல்லை; இப்போது மட்டும் மின்வெட்டு இருப்பது ஏன்?தி.மு.க., ஆட்சியில் மின்வெட்டே இல்லையா... அப்போது அந்த, 'அணில்' கதையெல்லாம் எதற்காக சொல்லப்பட்டது?

மு.தெய்வானை, பழனி:

ஓட்டு சீட்டு முறையை தேர்தலில் மீண்டும் கொண்டு வர வேண்டுமென சிலர் குரல் கொடுக்கின்றனரே?'ஆகாத நபர் கால் பட்டால் குத்தம்; கை பட்டால் குத்தம்' என்ற மனப்பான்மையில் , சிலர் சொல்லும், 'அறிவார்ந்த' யோசனைகளில் இதுவும் ஒன்று. தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்க மறுக்கும் இவர்களை, எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் இளைஞர்கள் ஒதுக்கி விடுவர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Abdul Rahim
அக் 01, 2026 14:47

குனா நீ ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா தனி கருத்தை எழுது அத விட்டு எழுதுபவர்கள் காலில் தொடர்ந்து விழாதே...


guna
அக் 01, 2026 15:19

ரஹீம் பாய்.இதை உன் வீட்டில் முதலில் கேட்டுப்பார்


ராமகிருஷ்ணன் பரமக்குடி
அக் 01, 2026 13:13

ராகுல் காந்தி காங்கிரஸில் தலை எடுத்த பின்னர் இந்தியாவில் ஒரு பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் போல உள்ளது. அவர்களின் மோடி எதிர்ப்பு அவ்வளவு வன்மமாக மாறிவிட்டது. அது ஒருவகையில் காங்கிரஸின் அழிவுக்கும் பி ஜே பி யின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது விட்டது, இதை மற்றவர்கள் எடுத்து சொல்லியும் ராகுல் காந்தி தன்னை மாற்றிக். கொள்ளவில்லை


Abdul Rahim
அக் 01, 2026 18:31

குணா செய்திக்கு எழுது என்றால் மீண்டும் ஒரு வாசகன் பின்னால் ஓடி தனிநபர் தாக்குதலுக்கு தான் வருகிறாய் எனவே நான் சொன்னதை நிரூபிக்கிறாய்.....


Abdul Rahim
அக் 01, 2026 09:47

நடுநிலையை சில பொய்நிலை ஒரு சார்பு பத்திரிகை இடம் இருந்து மீட்க முடியுமா உன்னால்.


guna
அக் 01, 2026 13:02

ரஹீம் ...பப்பு கிட்ட போய் கேசு போட்டு கொட்டு வாங்க சொல்லு


Proud Indian
அக் 01, 2026 09:34

திமுக ஆட்சியில் மின்வெட்டு ஆரம்பத்தில் இருந்தாலும், அதனை சரி செய்தார்கள். ஆனால், இப்போதைய அமைச்சர் பேட்டி கொடுப்பதை மட்டுமே செய்கிறார். மேலும், தவெக ஆட்சியில், மின் கட்டணம் பல மடங்கு ஏறி உள்ளதே? தாங்கள் கட்டிய மின் கட்டண வித்தியாசம் என்ன? பகிரலாமே?


Govi
அக் 01, 2026 07:56

சார்பு நிலை அப்பட்ட மாக தெரிகிறது சில காலமாக மெல்ல ....


என் ஏ அரவழகன்
அக் 01, 2026 06:55

காங்கிரஸ் இல்லாத பாரதம் தேவை..ராகுல் இல்லாத காங்கிரஸ் தேவை என்ற கோஷம் இப்போ அவசியம் தேவை...


சூர்யா
அக் 01, 2026 06:03

போஸ்டர், பேனரை மிச்சப் படுத்துவதால் மட்டுமல்ல தனி விமானத்தில் பறக்கும் காசை மிச்சப் படுத்தினாலும் இன்னும் அதிக மக்கள் நலத் திட்டங்களை தமிழக மக்களுக்கு அமல் படுத்தலாம்.


பிரேம்ஜி
அக் 01, 2026 07:37

சரியாகச் சொன்னீர்கள் சூர்யா அய்யா! சொந்தக் காசில் செலவு செய்தால் வருத்தம் தெரியும். மக்கள் வரிப் பணம்! அதான் அள்ளி வீசுறார்!


புதிய வீடியோ