உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குறைந்த மின்னழுத்தம்: துாங்க முடியாமல் தமிழகமே அவதி

குறைந்த மின்னழுத்தம்: துாங்க முடியாமல் தமிழகமே அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சென்னை உட்பட பல்வேறு இடங்களில், 'லோ வோல்டேஜ்' எனப்படும், குறைந்த மின்னழுத்த பிரச்னையால், 'ஏசி' சாதனம், மோட்டார் பம்ப் போன்ற வற்றை இயக்க முடியாமல், மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தமிழக மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின்சாரம் கிடைக்கிறது. எனினும், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்களில் ஏற்படும் பழுதால், பல இடங்களில் மின் தடை தொடர்கிறது. ஒரு டிரான்ஸ்பார்மரின் திறனுக்கு ஏற்ப, எத்தனை மின் இணைப்புகளுக்கு மின் வினியோகம் செய்ய வேண்டுமோ, அந்த அளவுக்கு தான் வினியோகம் செய்ய வேண்டும். அதை விட அதிகமான இணைப்புகளுக்கு மின் வினியோகம் செய்யும் போது, 'லோ வோல்டேஜ்' எனப்படும், குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது. தமிழகம் முழுதும் இந்தப் பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக, மின்னகம் சேவை மையத்திற்கு அதிக புகார்கள் வருகின்றன. அதேபோல, சென்னை உட்பட பல்வேறு இடங்களில், மின் தடை பிரச்னையும் உள்ளது. இரவு நேர மின் தடை செய்யப்படுவதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

தினமும் இரவு 9:00 மணிக்கு மேல், குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது. இதனால், மின் விளக்குகள், மின் விசிறிகள் சரியாக இயங்குவதில்லை. 'ஏசி, மோட்டார் பம்ப்' போன்றவற்றை இயக்கவே முடிவதில்லை. அதிகாலை தான் மின்சாரம் சீராக வருகிறது. இதனால், இரவில் துாங்க முடிவதில்லை. அதேபோல் பல மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும், நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின்னழுத்த பிரச்னை ஏற்படும் இடங்களை கண்டறிந்து, கூடுதலாக டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு வருகிறது. 'திடீரென பெய்யும் மழையால், மின் சாதனங்களில் பழுது ஏற்படுகிறது. இதனால், இந்தப் பிரச்னை ஏற்படுகிறது; அவற்றை விரைந்து சரிசெய்ய, பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அருண் பிரகாஷ் மதுரை
மே 16, 2025 14:13

திடீரென பெய்யும் மழையால் மின் வெட்டு ஏற்படுகிறது.. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் மழை வந்தால் மின்வெட்டு ஏற்படவே இல்லை.. அது எல்லோருக்கும் தெரியும்.. அது ஏன் திமுக ஆட்சி என்றால் மட்டும் மழையும் மின் வெட்டும் பிரிக்க முடியா ஒன்றாகி விட்டது.. ஊழல் செய்து தரமற்ற மின் உபகரணங்கள் வாங்குவதே காரணம்.. வேறு என்ன காரணம் இருக்கப் போகிறது..


jss
மே 16, 2025 09:48

சாவுங்கடா. ஊழல் செய்து வாங்கிய ட்ரான்ஸப்பாரங்கள. மற்றஙசமாச்சாரங்களும் அவ்வளவுதான் வேலைஙசெய்யும் ஊழல்வாதிகள் என்று தெரிந்தே ஓட்டு போட்டீர்கள் அல்லவா. சாவுங்கடா வெயிலிலும் வெப்பத்திலும். குறைந்த மின் அழுத்தம் பேன்களையும் ஏசிக்களையும் பதம் பார்த்து விடும, விட்ட்டும். அதற்க்கும் ரிப்பேருக்கு பணத்தை செலவழியுங்கள்


Karthik
மே 16, 2025 08:59

கட்சிக்காரர்களின் ஆதரவோடு மர்ம நபர்கள் / மர்மம் கும்பல் பலர் இரவு நேரங்களில் மின்சாரத் திருட்டில் ஈடுபடுகின்றனர் இதுவும் குறைந்த மின்னழுத்த பிரச்சனைக்கு ஒரு காரணம்.