உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக அரசு மீது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதிருப்தி: மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஒப்புதல்

தமிழக அரசு மீது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதிருப்தி: மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஒப்புதல்

மதுரை: ''பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாத தமிழக அரசின் மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருப்பது உண்மை'' என்று மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சி கூட்டத்தில் கட்சி செயலாளர் சண்முகம் பேசினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு ஏப். 2 முதல் 6 வரை மதுரையில் நடக்க உள்ளது. அதையொட்டி தேனி மாவட்டக்குழு சார்பில் நடந்த சிறப்பு கருத்தரங்கில் மாநிலச் செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது: ஏப். 3 மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் கருத்தரங்கில் ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்கின்றனர். 6ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் பங்கேற்கிறார்.மதுரை மாநகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சிக்கு மெஜாரிட்டி உள்ளது என்ற காரணத்திற்காக மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர்களின் எதிர்ப்பையும் மீறி ஆடு, கோழி, நாய் வளர்ப்புக்கு கட்டணம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்வது கவலை அளிக்கின்றது. அ.தி.மு.க. ஆட்சியிலும் இப்பிரச்னைகள் தொடர்ந்தது. ஆனால் தற்போது சம்பவம் நடந்த உடன் குற்றவாளிகள் கைது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.2021 சட்டசபை தேர்தலின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றுவது உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க. அளித்தது. தற்போது வெளியான நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியம் குறித்த எந்த வார்த்தைகளும் இல்லை. இது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது உண்மை.போராடும் உரிமை எல்லோருக்கும் உள்ளது, அதை பறிக்கும் வகையில் அச்சுறுத்தல் மிரட்டலை செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Bhaskaran
மார் 22, 2025 08:55

இப்படி பேசினால் ஸ்வீட் பாக்ஸ் கிடையாது கூட்டணி யில் இருந்து கழட்டி விட பட்டு அனாதையாக போக போவது நிச்சயம்


Perumal Pillai
மார் 22, 2025 00:20

தேதி 21 ஆகிவிட்டது . இன்னும் டாப் அப் பண்ணவில்லை போலும் .


SRIDHAAR.R
மார் 21, 2025 11:25

தோழர்கள் ஏன் தனியாக நின்று தேர்தலை சந்தித்து தங்கள் நிலையை காட்டக்கூடாது


krishna
மார் 21, 2025 09:59

BEGGERS HAS NO CHOICE.UNDI KULUKI KOMAALIGAL GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI KUMBAL. ELECTION VANDHA SEATTU PICHAI PANA PETTIKKU AZHUKKALAYAM VAASALIL THAVAM KIDAKKA VENDUM.PAATHU SOODHANAMA THURU PIDITHU IRUMBU KARAM KITTA PESUNGA.


Subburamu Krishnasamy
மார் 21, 2025 06:51

It seems comrades expecting larger suitcase than they received last time


Subburamu Krishnasamy
மார் 21, 2025 06:49

Government officials are more corrupt than political netas. Without the help of beaurocrates political leaders cannot involve in corrupt practices. For personal benefits many officials are acting as brokers to political netas


Rajarajan
மார் 21, 2025 05:35

அரசு கஜானாவையே கொடுத்தாலும், அரசு ஊழியருக்கு திருப்தி ஏற்படாது. தேவையற்ற அரசு / பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடி, மீதியை தனியாருக்கு கொடுங்க. அப்போதான், நிழலின் அருமை, வெயிலில் தெரியும்.


பெரிய ராசு
மார் 21, 2025 14:37

IPS IAS IFS எல்லாம் வீட்டுக்கு போங்க கோமாளி சொல்லுறாரு


புதிய வீடியோ