உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அண்ணாமலை அமைப்பில் சேர மிஸ்டு கால் திட்டம் அறிமுகம்?

அண்ணாமலை அமைப்பில் சேர மிஸ்டு கால் திட்டம் அறிமுகம்?

சென்னை: உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க, 'மிஸ்டு கால்' திட்டத்தை செயல்படுத்த, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, 'வீ தி லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பாக, கடந்த ஜூலை முழுதும், போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த மாதம் முழுதும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த, அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அவரது அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் கூறியதாவது: 'வீ தி லீடர்ஸ்' அமைப்பில், இதுவரை 19.47 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். குறைந்தது 50 லட்சம் பேரை சேர்த்த பிறகே, கட்சி தொடங்குவது என, அண்ணாமலை உறுதியாக இருக்கிறார். ஆனால், அவரை பின் தொடர விரும்பும் கிராம மக்களும், இணையதள புரிதல் இல்லாதவர்களும், அமைப்பில் சேர முடியாமல் உள்ளனர். எனவே, 'மிஸ்டு கால்' இயக்கத்தை அண்ணாமலை தொடங்க உள்ளார். ஏற்கனவே இத்திட்டத்தை சில கட்சிகள் முன்னெடுத்தன. அதுபோன்று, 'மிஸ்டு கால்' கொடுப்போரை, அப்படியே உறுப்பினராக சேர்க்காமல், அவர்களை தொடர்பு கொண்டு, விபரங்களை சேகரித்த பின், உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Vijay D Ratnam
ஆக 10, 2026 23:08

அண்ணாமலை நல்ல பேச்சாளர். உலக பொருளாதாரம் முதல் உளுந்தூர்பேட்டை பஸ்ஸ்டான்ட் கக்கூஸ் அடைப்பு வரை மணிக்கணக்கா பேசும் வல்லமை பெற்றவர். நாஞ்சில் சம்பத் மாதிரி, திருச்சி வேலுச்சாமி மாதிரி. பேச்சாளர் தலைவரெல்லாம் ஆக முடியாது. அதிகபட்சம் கருணாஸ் மாதிரி கமல்ஹாசன் மாதிரி ஒரு கட்சி நடத்தலாம். அவ்ளோதான். திமுக எதிர்த்து அதிமுக, ரெண்டும் பிடிக்கலையா தவெக. மற்றதெல்லாம் மற்றதெல்லாம் எள்ளோடு சேர்ந்து காயும் எலிப்புழுக்கை.பாஜக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஒப்புக்கு சப்பாணிகள்.


ம பு மன்னார்சாமி
ஆக 10, 2026 22:42

எனக்கு என்னவோ, தம்பி அண்ணாமலை சற்றே நிலை தடுமாறி விட்டார் என்றே தோன்றுகிறது. அவர் பாஜகவில் இருந்து விலகியதும் அவரால் பாஜகவில் நல்ல பதவி சுகத்தை அனுபவிப்பவர்கள், அவர் பின்னால் வருவார்கள் என்று எதிர்ப்பார்த்து அவர்கள் வராமல் போனது அவருக்கு செம்ம ஷாக்.


Sesh
ஆக 10, 2026 17:38

அண்ணாமலை திட்டம் கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடித்தல் போன்று உள்ளது. இவரின் திறமைக்கு , நிர்மலா சீதாராம் போன்று மத்திய மந்திரி பணியை ஒப்புக்கொண்டு இருக்கவேண்டும் , அமித்ஷா இவரை உள்துறை மந்திரி இணை -பணி கொடுக்க முன்வந்தும் , அதை ஏற்காமல் - செய்தது , புத்திசாலித்தனம் அல்ல.


KRISHNA
ஆக 10, 2026 12:16

உங்களின் கருத்து எனக்கு சந்தேகத்தை தருகிறது.


RAVINDRAN.G
ஆக 10, 2026 10:37

அண்ணாமலையின் செயல்பாடு சந்தேகத்தை தருகிறது? பிஜேபியின் மாற்று அரசியல் வேலைதான். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பிளான் மற்றும் செயலாக்கம் வைத்து இருப்பார்கள்.


தியாகு
ஆக 10, 2026 10:26

தமிழக பாஜக இன்னும் ஐம்பது வருடங்கள் ஆனாலும் நோட்டோவுடன் போட்டிபோட்டுக்கொண்டிருக்கும்.


baala
ஆக 10, 2026 10:08

இதையேதான் பாலியல் கட்சியும் செய்தது.


sankaran
ஆக 10, 2026 09:44

இவர் ஹிந்து அடையாளத்தை விட்டுவிட்டு தமிழன் அடையாளத்தை கையில் எடுத்துள்ளார்.. ஆனால் அப்துல் கலாமை கை காட்டுகிறார்.. தமிழக முஸ்லிம்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லி கொள்வதில்லை.. அவர்களுடைய மூதாதையர்கள் அரபியர்கள் என்று சொல்வார்கள்..


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஆக 10, 2026 09:24

அண்ணாமலை நல்ல தலைவர்தான். ஆனால், மிஸ்ட்டு கால் திட்டமா? அது பிஜேபியின் திட்டமாயிற்றே...மக்களின் சந்தேகம் உறுதியாகிக்கொண்டே வருகிறது.


KRISHNA
ஆக 10, 2026 12:19

உங்கள் மீது சந்தேகம் உறுதியாகி கொண்டே வருகிறது.


Mario
ஆக 10, 2026 08:56

ஒரு சாட்டை அடி இலவசம்


guna
ஆக 10, 2026 12:29

முட்டு சந்து மரியோவிற்கு பத்து சாட்டையடி இலவசம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை