உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மோடி - ஸ்டாலின் சந்திப்பு நிகழுமா? நேரம் கேட்டிருக்கிறார் முதல்வர்

மோடி - ஸ்டாலின் சந்திப்பு நிகழுமா? நேரம் கேட்டிருக்கிறார் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரதமர் மோடியை சந்தித்து, கோரிக்கை மனு அளிக்க, பிரதமர் அலுவலகத்தில், முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், மத்திய அரசு, 'சமக்ரா சிக் ஷா அபியான்' திட்டத்தில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இது தொடர்பாக, பிரதமரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என, அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பியதும், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.அதன்படி, நாளை பிரதமரை சந்தித்து பேச, முதல்வர் தரப்பில், பிரதமர் அலுவலகத்தில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. நேரம் ஒதுக்கினால், நாளை சந்திப்பு நிகழலாம். இல்லையேல், 25ம் தேதி சந்திக்க வாய்ப்புள்ளது என, தகவல் வெளியானது. பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதும், முதல்வர் டில்லி பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, தலைமைச் செயலக அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

krishna
செப் 19, 2024 23:08

IDHU ENNA KODUMAI.ULAGIN NO 1 THALAIVAR THUNDU SEATTU.DRABIDA MODEL AATCHI VENDUM ENA CHANDRA MANDALAM SEVVAI GRAHATHIL ELLAM KENJUGIRAARGAL.APPERPATTA KAIPULLAYA MODI CHENNAI OODI VANDHU AVAR VEETIL PAARKKA VENDUM.IPPADIKKU 200 ROOVAA OOPIS CLUB LIFE LONG MEMBERS VENUGOPAL BOLI VELAN IYENGAR MURUGAN THAMIZHAN VAIKUNDESWARAN AANDI SORRY ARASU.


ராமகிருஷ்ணன்
செப் 19, 2024 17:40

நிதியமைச்சரிடம் கேட்டால் புள்ளி விவரங்களுடன் பணம் கொடுத்தை விரிவாக சொல்வாங்க. பிரதமரிடம் கோரிக்கையை வைத்து விடலாம்


venugopal s
செப் 19, 2024 16:40

நாட்டில் நிறைய ஆண்கள் இப்படித்தான் வேறு வழியின்றி குடும்ப நன்மைக்காக ஆஃபிஸில் மோசமான மேலதிகாரியிடம் அவரைப் பிடிக்காவிட்டாலும், சிரித்து பேசி சகித்துக் கொண்டு இருப்பார்கள்!


Hari
செப் 19, 2024 17:05

Thank you venugopal... For kudumba nanmaikaga...... Rs 200 is working


krishna
செப் 19, 2024 22:48

AGILA ULAGA OOPIS RASIGAR MANDRA 200 ROOVAA CLUB THALAIVAR VENU SOLLITTARUPPA.ELLORUM NALLA KETTUKONGA.


Matt P
செப் 27, 2024 07:38

நம்ம முதியவர் துர முருகன் தம்பி ஸ்தாலின்கிட்ட சிரித்து பேசுவது மாதிரியா?


krishna
செப் 19, 2024 13:18

IDHU ENNA KODUMAI.


ram
செப் 19, 2024 13:13

முதல்வரே... மோடி நிச்சையம் உங்களுக்கு நேரம் ஒதுக்குவார்.. ஏன்னா அவர் உங்களைப்போலே கீழ்த்தறமான அரசீயல் பன்னமாட்டார்.. நீங்க மோடியை சந்தீக்கப்போகும் போது வேறு யாரையும் கூட கூட்டிட்டு போகாதிங்க.. உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை..


அரசு
செப் 19, 2024 12:56

பிரதமருக்கு மாநில முதல்வர்களைப் பார்க்க நேரம் இருக்காது. வெளிநாட்டுப் பயணங்கள் செய்வதற்குத் தான் நேரம் இருக்கும். பிரதமரைப் பார்த்தாலும் எந்தப் பயனும் ஏற்படாது.


ram
செப் 19, 2024 13:15

இது தெரிந்த விஷயம் தானே..


krishna
செப் 19, 2024 13:19

AAHA 200 ROOVAA OOPIS PUDHU VARAVU AANDI SORRY ARASU VARUGA VARUGA.


N Sasikumar Yadhav
செப் 19, 2024 10:58

தேசிய கல்வி திட்டத்தில் இணையாமல் எதற்காக உங்களுக்கு பணம் ஆட்டய போடவா சமச்சீர் கல்வியை தூக்கியெறிந்துவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணையுங்கள்


Indian
செப் 19, 2024 09:40

எவ்வளவு தான் கெஞ்சினாலும் , ஒரு ரூபா கிடைக்க வாய்ப்பு இல்லை என நினைக்கிறன் ....../


anonymous
செப் 19, 2024 07:34

புலி பசித்தாலும் புல்லை தின்னாது. நாளய பிரதமர் இன்றய ஒன்றிய அமைச்சரைக்காண நேரம் கேட்பது என்பது எதிர்கட்சிகளின் சூழ்ச்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை