உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மோடி பிறந்த நாள் விழா: ஆர்வமில்லா பா.ஜ.,

மோடி பிறந்த நாள் விழா: ஆர்வமில்லா பா.ஜ.,

சென்னை: பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை, இரு தினங்களுடன் தமிழக பா.ஜ.,வினர் நிறுத்திஉள்ளனர். பிரதமர் மோடியின் பிறந்த நாள் கடந்த 17ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்று முதல் வரும் அக்., 2ம் தேதி வரை, இரு வாரங்களுக்கு நாடு முழுதும் மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள், துாய்மை பணி உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளுமாறு, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தினார். தமிழகத்தில் செப்., 17ம் தேதி தமிழக பா.ஜ.,வினர், கடற்கரையில் துாய்மை பணி, துாய்மை பணியாளர்களுக்கு விருந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினர்; அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தனர். அதற்கு அடுத்த நாளும் சில இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. பா.ஜ., மேலிட தலைவர்கள், இரு வாரங்களுக்கு சேவை பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திய நிலையில், தமிழகத்தில் இரு தினங் களுடன் நிறுத்தி விட்டனர்.

பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்யலாம். ஆனால், தமிழக பா.ஜ.,வினர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். நிறைய செலவாகிறது என்பதால், கட்சி நிர்வாகிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் தவிர்த்து விட்டனர். எனவே, அமைப்பு ரீதியாக செயல்படும் 66 மாவட்ட தலைவர்களிடமும், மோடி பிறந்த நாள் நலத் திட்ட உதவிகள் வழங்கிய விபரங்களை, அறிக்கையாக மாநில நிர்வாகிகள் கேட்க வேண்டும். அதோடு, கட்சி தரப்பில் இருந்தும், நல உதவி திட்டங்களுக்கு ஏதேனும் நிதி உதவி தர வேண்டும். அப்போது தான் பணிகள் வேகமெடுக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சாமானியன்
செப் 27, 2025 19:13

பணம் தான் எல்லாவற்றையும் இயக்குவதால் அதுவே ஊழலுக்கு வழி அமைக்கிறது. எல்லாமே பிஸினஸ்.


Velayutham rajeswaran
செப் 27, 2025 16:44

தி பாஜக கும்பல் மோடி பிறந்த நாளை கொண்டாடியதே சிறப்பு


Sesh
செப் 27, 2025 15:46

2 சதவீதம் சந்தேகம் தான்


ஈசன்
செப் 27, 2025 15:42

பாஜகவில் இன்னும் பல அவலங்கள் நடக்க உள்ளது. இன்று மக்களிடையே பிரபலமானவர்கள் மோடிஜி, அண்ணாமலை மட்டுமே. மோடிஜி பிறந்த நாளை, ஒரு பத்து நாளாவது கொண்டாட வேண்டாமா. அட ஒவ்வொரு நாளும் மக்கள் சேவை தினமாகவோ, swach barath தினமாகவோ கொண்டாடி மக்கள் மனதில் மத்திய அரசு நல திட்டங்களை கொண்டு சேர்த்திருக்கலாம். நல்ல வாய்பை விட்டு விட்டார்கள். காரணம் தமிழக பாஜகவில் உள்ள பழையவர்களும் அவர்களுடைய சோம்பேறித்தனம் மட்டுமே. அண்ணாமலை தலைவராக இல்லை. தொண்டர்களுக்கும் ஆர்வம் இல்லை.


Venugopal S
செப் 27, 2025 13:01

பாஜகவினருக்கு கூட மனம்மாற்றம் வந்து விட்டது போல் உள்ளதே!


thiru
செப் 27, 2025 11:32

பா ஜ க வளர்ந்துச்சு ஆனா பாதியிலேயே KARUGIDUCHU


RRR
செப் 27, 2025 09:26

திராவிட அடித்தளத்தில் இருந்து வந்தவரை மாநில தலைவராக்கினால் இப்படித்தான் நடக்கும். இது என்ன பிரமாதம்... 2026 தேர்தலில் திராவிஷ பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இருக்குது மிகப்பெரிய பேரிடி...


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 27, 2025 09:19

நயினார் நாகேந்திரன் வெளியே விரட்டாமல் இருக்கும் வரை தமிழா பாஜக நிலைமை பாதாளத்திற்கு போக போகிறது. கேவலமாக இருக்கிறது அதிமுக கூட்டணி அமைத்து 5 to max 10 MLA seat கிடைக்கும் என்ற ஒற்றை காரணத்திற்காக கட்சியையே இப்படியொரு கேவலமான நிலையில் மாற்றி விட்டார்கள். எனக்கு தெரிந்து இது மோடி மற்றும் அமித்ஷா வின் முடிவினால் வந்த வினை இல்லை. தமிழக பாஜக வில் இருக்கும் முன்னாள் பாஜக நிர்வாகிகளால் கொடுக்க பட்ட அழுத்தத்தால் எடுக்க பட்ட முடிவாக இருக்கும். காரணம் 10 வில் 9 முன்னாள் பாஜக வின்னர் அண்ணாமலையை நீக்க அழுத்தம் கொடுத்தால் கட்சி மேலிடம் இப்படி பட்ட தவறான முடிவை தான் எடுக்கும்.


Oviya Vijay
செப் 27, 2025 08:46

கொண்டாடுவதற்கு, வேலை செய்வதற்கு ஆட்கள் வேண்டுமே... தமிழகத்தில் மொத்தம் இருக்கும் சங்கிகளின் எண்ணிக்கையே 267 தானே...


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 27, 2025 07:45

>> நேரு குடும்பம் செய்த, செய்து வரும் அதே தவறை பாஜகவும் செய்தால் மக்களுக்கே சலிப்பு ஏற்படும் .....


முக்கிய வீடியோ