உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எம்.பி., திறந்த குடிநீர் குழாய் விழா முடிந்ததும் திடீர் மாயம்

எம்.பி., திறந்த குடிநீர் குழாய் விழா முடிந்ததும் திடீர் மாயம்

எரியோடு: திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில், ஏற்கனவே திறந்து வைக்கப்பட்ட குழாயை, கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி மீண்டும் விழா நடத்தி திறந்து வைத்தார். ஆனால், அந்த குழாய், விழா முடிந்த சிறிது நேரத்தில் மாயமானது.எரியோடு மகாத்மா நகரில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் 17 லட்சம் ரூபாய் செலவில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.அதை ஜூன் 19ல், வேடசந்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ., காந்திராஜன் திறந்து வைத்தார். இந்நிலையில் தன் நிதியில் கட்டிய திட்டம் என்பதால், ஜோதிமணி எம்.பி.,யும் ஒரு விழா நடத்த முடிவு செய்தார்.இதற்காக நேற்று முன்தினம் அப்பகுதியில் புதிதாக ஒரு குடிநீர் குழாய் அமைத்தனர். அதையும், மேல்நிலைத் தொட்டியையும் நேற்று ஜோதிமணி திறந்து வைத்தார்.அப்பகுதியினர் சிறிது நேரம் தண்ணீரும் பிடித்து சென்றனர். ஆனால் அடுத்த சில மணி நேரத்தில், அங்கிருந்த குடிநீர் குழாய் மாயமானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் செய்தனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'பணிகள் முழுமையாகாத நிலையில் திறப்பு விழாவிற்காக தற்காலிக ஏற்பாடாக பைப்கள் பதிக்கப்பட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. விழா முடிந்ததும் அகற்றப்பட்டுள்ளது. பைப் பதிக்கும் பணி முழுமையானதும் குழாய்கள் அமைக்கப்படும்' என்றனர். குடிநீர் மேல்நிலைத் தொட்டி மாயமாகாமல் தப்பியதே என மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Raj S
ஜூலை 03, 2025 22:04

முழுமை ஆகாத போது மக்கள் பணத்தை வீணடிச்ச குற்றத்துக்காக ரெண்டையும் புடிச்சி ஒரு ரெண்டு வாரம் உள்ள வெச்சா புத்தி வரும்... ஆனா அதுக்கு முதுகெலும்புள்ள நீதி துறை வேணுமே??


Sundaran
ஜூலை 03, 2025 21:10

திருட்டு திராவிட ஆட்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணம்


Karthik
ஜூலை 03, 2025 20:40

திருச்சி பஸ்ஸ்டாண்ட்க்கும் அதை நிலைமை தான் இன்னமும் பழைய பஸ்ஸ்டாண்ட் ல் தான் போக்குவரத்து இடையூறோடு இயங்குகிறது


rama adhavan
ஜூலை 03, 2025 20:34

முழுமையாக முடியாத பணிக்கு திறப்பு விழா செய்த இருவருக்கும் கொஞ்சம் கூட கூச்சம், வெட்கம், மனசாட்சி இருக்காதா? மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவர்களின் பதில் தான் என்ன?


G Mahalingam
ஜூலை 03, 2025 19:46

சினிமாவிற்கு செட் போடுகிற மாதிரி இருக்கு. போன‌ வாரம் ஸ்டாலின் திறந்து வைத்த வேலூர் மருந்துவமனை‌ இப்போது பூட்டு போட்டாச்சு. திராவிட மாடல் ஆட்சி ஒரு கேடுகெட்ட ஆட்சி.


அப்பாவி
ஜூலை 03, 2025 16:31

இந்த மாதிரி பொழப்புக்கு... ச்சே.. அதிகாரிங்களே லூசாடா நீங்க?


என்றும் இந்தியன்
ஜூலை 03, 2025 16:22

தன்னை பற்றி டப்பா அடிக்காமல் விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றது இந்த திராவிட கும்பல்கள்


Ramesh Sargam
ஜூலை 03, 2025 13:17

வடிவேலு பட காமெடி ஐயா என்னுடைய கிணற்றை காணோம் என்கிற மாதிரி, எம்.பி. அம்மா நீங்க திறந்துவைத்த குடிநீர் குழாய் காணவிலையம்மா. நீங்கதான் அதை மீட்டுத்தரனும் என்று அந்த ஊர் வடிவேலு ஜனங்கள் புகார் அளிக்கவேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 03, 2025 12:55

தலைமைச் செயலகத்தில் செட்டிங் போட்டது மறக்குமா?.


கல்யாணராமன் சு.
ஜூலை 03, 2025 12:39

\பணிகள் முழுமையாகாத நிலையில் திறப்பு விழாவிற்காக தற்காலிக ஏற்பாடாக .... \ பணிகள் முடியாத நிலையில் எதற்க்காக திறப்பு விழா நடத்தவேண்டும் ? இரண்டு திறப்பு விழா நடத்தி இரண்டு கணக்கு எழுதுவதற்கா ?


புதிய வீடியோ