உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓடும் கார் பானெட் மீது நின்றபடி ஆட்டம்; மும்பை பெண்ணுக்கு போலீஸ் வலை

ஓடும் கார் பானெட் மீது நின்றபடி ஆட்டம்; மும்பை பெண்ணுக்கு போலீஸ் வலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தானே: மஹாராஷ்டிராவின் நவிமும்பையில், ஓடும் காரின், 'பானெட்'டில் நின்று நடனமாடிய இளம்பெண் மற்றும் காரை ஓட்டிச்சென்ற இரு இளைஞர்கள் மீது வழக்கு பதிந்த போலீசார், அவர்களை தேடி வருகின்றனர்.சமீபமாக இணையத்தில், 'ஆரா பார்மிங்' என்ற வார்த்தையும், அதுதொடர்பான நடனமும் கவனம் ஈர்த்து வருகிறது. வேகமாக நகரும் கார் மீது நின்று, அச்சமோ, பதற்றமோ இன்றி மென்மையான நடன அசைவுகளை வெளிப்படுத்துவதையே இணையவாசிகள், 'ஆரா பார்மிங்' என்று அழைக்கின்றனர்.இந்த செயலை படம்பிடித்து, சமூக ஊடகங்களில் பதிவிடுவது உலகம் முழுதும், 'டிரெண்ட்' ஆகி வருகிறது. அந்த வகையில், நவிமும்பையின் கார்கர் பகுதியில் பரபரப்பான சாலையில், 'மெர்சிடிஸ் பென்ஸ்' காரில் இளம்பெண் ஒருவர், இந்த, 'ஆரா பார்மிங்' நடனத்தை ஆடியபடி சென்றார்.ஓடும் காரின், 'பானெட்'டில் நின்றபடி சாவகாசமாக அவர் ஆடியதை சாலையில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். பலர் இதை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்தனர்.இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் சம்பந்தப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், காரை ஓட்டிய அல்பேஷ் அசாம் ஷேக், ரபீக் சுல்தே என்ற இரு இளைஞர்கள் மற்றும் நடனமாடிய பெண் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சாரதி
ஜூலை 26, 2025 16:59

இந்த மாதிரி ஜென்மங்கள புடிச்சு குடிசை வாழ் மக்கள் இருக்கும் பகுதியில அந்த மக்களோட 1 மாதம் அவர்கள் உணவை உண்டு,அவர்களின் உடையை உடுத்தி அவர்களுடன் படுத்து வாழ சொல்ல வேண்டும், இதுதான் சரியான தண்டனை, அப்போதான் தெரியும் நாம எவ்வளவு பணதிமிரோட வாழறோம் அப்படின்னு. 3 வேளை சோறு கெடைக்கலான இப்படியெலாம் யோசிக்க தோணாது. நீதிபதிகள் இந்தக் கருத்தை சற்று யோசிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.


SANKAR
ஜூலை 26, 2025 21:08

Such a law exists in US and at times judges order what is called COMMUNITY SERVICE as punishment. in Sukk communities too VIPs are punished by asking them to clean footwear of devotees entering Golden Temple and cleaning food plates used. Iam not sure Indian legal system is anything similar to US


D.குருநாதன், மதுரை
ஜூலை 26, 2025 14:57

அவர் யாராவது அரசியல்வாதியின் மகளாக இருப்பார்.


T. சங்கரநாராயணன் ஈரோடு
ஜூலை 26, 2025 14:51

பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். இது போன்ற குற்றங்களை தண்டிக்க இப்போது இருக்கும் சட்டங்கள் போதாது


பிரேம்ஜி
ஜூலை 26, 2025 16:51

சட்டங்கள் இருந்தாலும் அதை செயல் படுத்த நல்ல எண்ணம் தைரியம் இருக்காது! அதைக் காட்டி மிரட்டி பணம் சம்பாதிக்க தெரியும். இல்லை என்றால் ஜாமீன் கொடுத்து மன்னித்து திரும்பவும் தப்பு செய்ய வைப்பார்கள்.


சமீபத்திய செய்தி