உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: ரஜினிக்கு ஹிந்து முன்னணி அழைப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: ரஜினிக்கு ஹிந்து முன்னணி அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெ.நா.பாளையம் : மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள எல்லையில் உள்ள ஆனைகட்டியில் படப்பிடிப்பில் உள்ள ரஜினிக்கு, ஹிந்து முன்னணியினர் அழைப்பு விடுத்தனர்; அதற்கான அழைப்பிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 22ம் தேதி, 'குன்றம் காக்க, கோவிலை காக்க' என்ற தலைப்பில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடக்கிறது. இம்மாநாட்டில் நடிகர் ரஜினியை கலந்து கொள்ள வைக்கும் தீவிரத்தில் ஹிந்து முன்னணி களம் இறங்கி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=78ez3usq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்காக, ரஜினியை சந்தித்து, அவருக்கு மாநாட்டு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். தற்போது, கோவை அருகே கேரளாவுக்கு உட்பட்ட ஆனைகட்டியில் சோலையூர் பகுதியில் நடக்கும் படப்பிடிப்பில் உள்ளார் நடிகர் ரஜினி. இதை அறிந்த ஹிந்து முன்னணியினர், கோவை வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்தி தலைமையில், சோலையூர் பகுதிக்குச் சென்று நடிகர் ரஜினியை சந்தித்தனர். பின், மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து, அழைப்பிதழ் வழங்கினர். கோவை வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணி செய்தி தொடர்பாளர் கார்த்தி கூறுகையில், ''தொடர் முயற்சிகளுக்குப் பின், படப்பிடிப்புக்காக சோலையூர் பகுதிக்கு வந்திருக்கும் நடிகர் ரஜினியை சந்தித்துப் பேசி, முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக விளக்கம் அளித்தோம். ''மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என கூறியதும், கட்டாயம் வருகிறேன் என தெரிவித்தார். அவரும் முருக பக்தர் தான் என்பதால், கட்டாயம் வருவார் என நம்புகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Oviya Vijay
ஏப் 21, 2025 14:21

முருக மாநாடு என்றால், அமைதி மார்க்கத்துக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது...


naranam
ஏப் 21, 2025 13:33

அப்படியே அவரு வந்துட்டாலும்!


Ramesh Sargam
ஏப் 21, 2025 12:43

முருகனுக்கு அரோஹரா.


மோகனசுந்தரம் லண்டன்
ஏப் 21, 2025 12:27

எதற்காக பொய்காரனை எல்லாம் விழுந்து விழுந்து வரவேற்கிறீர்களோ. .


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 21, 2025 11:54

ஹிந்துக்கள் நடத்தும் மாநாட்டுக்கு திமுக காரரை அழைக்க வேண்டுமா? ஆண்டவனே வந்தாலும் இவர்களை திருத்த முடியாது


அப்பாவி
ஏப் 21, 2025 09:02

கூத்தாடிகளுக்குத்தான் முதல் மரியாதை. நன்கொடைன்னு ஏதாவது குடுப்பாங்க.


Palanisamy T
ஏப் 21, 2025 08:01

1. ஹிந்து முன்னணியினர் முருகக் கடவுள் மாநாடா? மாநாட்டில் அப்படியென்ன பேச போகின்றார்கள்? முருகக் கடவுள் தமிழ் கடவுள், முழுமுதற்றெய்வம், பரம்பொருள் வழிப்பாடு. முருகனென்றால் நம் நெஞ்சத்திலிருந்து வெளிவரும் உணர்வுகள் நமக்குச் சொல்வது அவன் ஒருவன்தான் உண்மை. அவனுக்கு மேலான உண்மையில்லை வழிப்பாடுமில்லை. முருகக் கடவுள் வழிப்பாடும் சிவ வழிப்பாடும் ஒன்றுதான். 2. தமிழ் கடலென்றுப் போற்றப்படுகின்ற மறைமலை அடிகளார் அவர்கள் தன் தொல்காப்பிய நூலின் ஆய்வில் சொல்லப் படுகின்ற உண்மைகள் சுமார் 6000 ஆண்டுகள் காலமாகயிருக்கலாமென்று குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியனார் காலம் சுமார் 3000 ஆண்டுகளென்று புலிகேசி அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார். அப்போது மலைகளிலும் குகைகளிலும் காடுகளிலும் வாழ்ந்த நம் முன்னோர்கள் மிருகங்களை வேட்டையாடி பன்றியிறைச்சிகளையும் புலித் தோலையும் படைத்து இறைவனை வழிப்பட்டார்களென்றும் சிவன் புலித் தோலை அணிந்திருப்பது இதுதான் உண்மையென்றும் அடிகளாற் குறிக்கின்றார். 3. மாநாடென்றால் வெறும் மாநாடாகயிருந்து அரசியல் லாபத்திற்காக செயல்படக் கூடாது. நாளைய தலைமுறையினருக்கு பலனளிக்கும், பயணிக்கும் வகையில் பல சரித்திர, சமய உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும். அவர்கள் அதையெல்லாம் உணரச் செய்ய வேண்டும். அவர்கள்தான் நம் நாளைய சரித்திர தலைவர்கள். அப்படித்தான் மாநாடும் இருக்கவேண்டும்


ஆரூர் ரங்
ஏப் 21, 2025 10:40

ஒரு பழத்திற்காக உலகையே சுற்றி வந்தவர் முழுமுதற்கடவுளா? அல்லது அவரைப் பெற்ற சிவனே பெரியவரா? முதலில் இந்த தமிழ்க் கடவுள், ஹிந்தி கடவுள்ன்னு பேதம் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 21, 2025 11:11

ஒரு பழத்திற்காக உலகையே சுற்றி வந்தவர் முழுமுதற்கடவுளா? அல்லது அவரைப் பெற்ற சிவனே பெரியவரா? முதலில் இந்த தமிழ்க் கடவுள், ஹிந்தி கடவுள்ன்னு பேதம் பார்ப்பதை நிறுத்த வேண்டும். WELL SAID. முருகனுக்கு கும்மிடிபூண்டிக்கு வடக்கே எத்தனை கோயில்கள் உண்டு? வடக்கேபோய் இதை சொல்லி சில முருகன் கோயில்களையாவது எழுப்ப முயற்சிக்கணும்.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 21, 2025 07:52

கூட்டத்தைக் கூட்ட இவரை பிடிக்கிறார்கள். பார்க்க வரவங்களெல்லாம் இந்துவா இருக்கணுமே? அரசியலுக்கு முழுக்கு போட்டார். படப்பிடிப்பு வேலைன்னு சொல்லி தப்பிக்க வாய்ப்புள்ளது. ஆதாயமில்லாமே செட்டி ஆத்தைக் கட்டி இறைப்பானான்னு ஒரு பழமொழி. இது ஆன்மீகம்னு சாக்கு சொல்லிட்டு வரலாம். வந்து என்ன சொல்லவராரனே புரியாதபடி ஸ்க்ரிப்ட் இருக்கலாம்.


Oviya Vijay
ஏப் 21, 2025 07:06

இவரையாவது நிம்மதியா இருக்க விடுங்கப்பா... உங்களுக்கு இருக்குற அழுக்கு மனசோட போயி அவரோட மனசையும் கெடுக்காதீங்க...


நிமலன்
ஏப் 21, 2025 08:42

oviya, ரஜினி பாஜகவிற்கு ஆதரவாக இருந்தால் அவரை இப்படி புகழ்வீர்களா? எல்லாம் 200 செய்யும் வேலை.


vivek
ஏப் 21, 2025 10:53

நீ அர்டிஸ்டா இல்ல போஸ்டர் ஒட்டுர் பார்ட்டியா


vivek
ஏப் 21, 2025 10:55

முதலில் உங்க ஆளு குருமாவை சமாதானபடுத்து


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 06:58

காசு கொடுத்தா வருவார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை