உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரசியல் பேசாமல் ஆன்மிகம்: அசத்திய நாகேந்திரன்

அரசியல் பேசாமல் ஆன்மிகம்: அசத்திய நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் அரசியல் எதுவும் பேசாமல், ஆன்மிகம் பேசி முருகன் பாடலை மனமுருக பாடி அனைவரையும் அசத்தினார்.மாநாட்டில் அவர் பேசியதாவது:குன்று இருக்கும் இடமெல்லாம் குமரக்கடவுள் இருப்பார். முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகா... முருகா.. எனச் சொன்னால் உருகாதோர் யாரும் இல்லை. முருகன் என்பதில் 'மு' என்றால் முகுந்தன். 'ரு' என்றால் ருத்ரன். 'க' என்றால் கமலத்தில் வீற்றிருக்கும் பிரம்மன் என பொருள். முருகா எனும் பெயரில் மெல்லினம், இடையினம், வல்லினம் இருப்பதால் முருகனை தமிழ்க் கடவுள் என்கிறோம். மதுரை மண்ணில் முருக பக்தர்கள் மாநாடு நடப்பது நமக்கெல்லாம் பெருமை. இம்மாநாட்டிற்கு எத்தனையோ தடைகள் வந்தன. தடைகளை ஏற்படுத்தியது தமிழக அரசுதான். அரசிடம் இருந்து நமக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால், நீதிமன்றம் வாயிலாக நீதியை பெற்றோம்.திருமுருகாற்றுப்படை, முருகனை வைத்து பாடப்பட்டது. அருணகிரிநாதர் பாடிய, 'முத்தைத் திரு...' பாடல் உருக வைக்கும். அவர் திருப்புகழ் உருவாக்கி தந்துள்ளார்.திருப்புகழை பாடினால் வாய் மணக்கும். இங்கு, 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளீர்கள். ஆதீனங்கள் மொத்தமாக அமர்ந்திருப்பதால் நல்ல 'வைபரேஷன்' உணர்கிறேன். தமிழ், தெலுங்கு என்பதால் கலாசாரம் மாறிவிடாது. ஏதாவது ஒரு மொழியை தான் படிக்க சொல்கிறோம். நம் கலாசாரம் ஒருமித்த கலாசாரம். அதை வளர்க்க தான் இந்த முருகன் மாநாடு நடைபெறுகிறது. ஆன்மிகம் நிறைந்து சொர்க்கபுரியாக, இந்த மேடை விளங்குகிறது.இவ்வாறு அவர் பேசினார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் மேற்கோள்கள் காட்டி தேர்ந்த ஆன்மிக பேச்சாளர் போல அவர் பேசினார். 'கோடிகள் குவிந்தாலும்...' எனும் மதுரை சோமு பாடலை பாடியும் அசத்தினார், நயினார் நாகேந்திரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

N Sasikumar Yadhav
ஜூன் 23, 2025 15:13

முருகர் மாநாட்டுக்கு தடைகளை ஏற்படுத்தியது இந்துமத துரோக திமுக தலைமையிலான மனநல குன்றிய இந்துக்களுக்கு மட்டும் விடியாத திராவிட மாடல் அரசு


ManiK
ஜூன் 23, 2025 10:36

நாகேந்திரனின் மெல்லிய பன்ச், அண்ணாமலையின் அதிரடி டேட்டா பன்ச்- இரண்டுமே திமுக அரசுக்கு எச்சரிக்கை அபாய மணி... ஆனால் மமதை திமுக தலைவர்கள் கண்களை மறைத்து பல மாதங்கள் கடந்துவிட்டன.


sambaivelan
ஜூன் 23, 2025 08:33

"இம்மாநாட்டிற்கு எத்தனையோ தடைகள் வந்தன. தடைகளை ஏற்படுத்தியது தமிழக அரசுதான். அரசிடம் இருந்து நமக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால், நீதிமன்றம் வாயிலாக நீதியை பெற்றோம்." இது அரசியல் இல்லையா?


ஆதிநாராயணன் ,குவைத்
ஜூன் 23, 2025 10:22

ஒருவரது உரிமை மறுக்கப்படும் போது அதை நீதிமன்றம் வாயிலாக பெற்றது எவ்வாறு அரசியலாகும் இந்த உலகிற்கே தெரியும் இதில் அரசியல் செய்வது யாரென்று


திகழும் ஓவியம்
ஜூன் 23, 2025 08:03

போலி முருகன், வழக்கம் போல ஆர்ட்டிஸ்ட் கதறல் அருமை


பேசும் தமிழன்
ஜூன் 23, 2025 07:46

திமுக ஆட்சியில்.... குண்டு வைக்கும் ஆட்களுக்கு ஊர்வலம்..... மாநாடு என்றால்.. எந்த விதமான நிபந்தனைகளும் இல்லாமல் உடனே அனுமதி கிடைக்கும்.. முதலில் இந்த அனுமதி வாங்க வேண்டும் என்பதே ஒரு ஏமாற்று வேலை.. யாருக்கு அனுமதி கிடைக்கிறது ஆளுங்கட்சி மற்றும் அதன் அல்லக்கை கட்சிகளுக்கு மட்டுமெ அனுமதி கிடைக்கிறது. அவர்கள் கூட்டம் போட்டு ஜால்ரா தட்டி விட்டு போவார்கள்.


Oviya Vijay
ஜூன் 23, 2025 07:30

நீங்கள் மட்டுமல்ல... மேடையில் பேசிய பலரும் நாங்கள் அரசியல் பேசவில்லை நாங்கள் அரசியல் பேசவில்லை என்று சொல்லிக்கொண்டே பயந்து பயந்து பேசிக்கொண்டிருந்தீர்கள்... காண கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வாரே வா... ஆக ஒரு ஆன்மீக மாநாட்டில் கூட உங்கள் மனம் நிம்மதியாக இல்லை என்பதை உணரமுடிந்தது. எங்கே அரசியல் பேசியதாக சொல்லி கோர்ட் நிபந்தனைகளை காரணம் காட்டி மேடைக்கே வந்து போலீஸார் ஏதேனும் பிரச்சனை செய்து விடுவார்களோ இல்லையெனில் வழக்கு தொடுத்து விடுவார்களோ என்பதனால் தான் அந்த பயம்... அந்த அளவிற்கு கோர்ட் கொடுத்த நிபந்தனைகள் உங்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது...


vivek
ஜூன் 23, 2025 07:46

கூட்டத்தை பார்த்தவுடன் தலைமறைவு....


vivek
ஜூன் 23, 2025 07:47

இனிமே 200 ரூபாய்க்கு....


சசிக்குமார் திருப்பூர்
ஜூன் 23, 2025 08:18

ஆனாலும் ஓவியா உன் கட்சியை அனைவரும் கழுவி ஊற்றியது கண்கொள்ளாக் காட்சி. மைதானத்தில் இரண்டு காவலர்கள் மட்டுமே இருந்தனர். ஐந்து லட்சம் பேர் இருந்தும் காவலர் இடுப்பை கிள்ளவில்லை குடித்து வேட்டி அவிழ கீழே யாரும் கிடக்கவில்லை


எஸ் எஸ்
ஜூன் 23, 2025 12:14

ஓவியா உன் புலம்பல் சுவாரஸ்யமாக இருக்கு. கீப் இட் அப்


முருகன்
ஜூன் 23, 2025 07:16

வந்த அனைவரும் பல கட்சிகளை சேர்ந்த தமிழ் கடவுள் முருகன் பக்தர்கள் ஆன்மீக மாநாட்டில் அரசியல் எதற்கு இவர்கள் கட்சி அடையாளம் எதற்கு


theruvasagan
ஜூன் 23, 2025 10:19

வழிபாட்டுத் தலங்களுக்கு வழிபாட்டுக்குத்தானே போகணும். அங்க இன்னாருக்கு ஆதரவு. இன்னாருக்கு எதிர்ப்பு என்று தேர்தல் பிரசார கூட்டம் போல அரசியல் பண்ணுவதை அரசியலை எதுக்கு அங்கே கொண்டுவரீங்கன்னு என்னிக்காவது கேட்டுருக்கியா. இல்லாட்டி திருமண விழாக்களில் கலந்து கொள்ளும்போது மணமக்களை வாழ்த்தாமல் அரசியல் பேசுகிற அநாகரிகத்தைத்தான் கண்டித்திருக்கிறாயா.


பழனி ராஜா
ஜூன் 23, 2025 06:41

நயினார் அவர்களின் பேச்சு மிகவும் சுவாரசியமான இருந்த்து


சமீபத்திய செய்தி