உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக பக்தர்களுக்கு புதிய வசதி: காசியில் 10 மாடி கட்டடம் தயார்!

தமிழக பக்தர்களுக்கு புதிய வசதி: காசியில் 10 மாடி கட்டடம் தயார்!

காசி: உ லகில் உள்ள அனைத்து ஹிந்துக்களுக்கும், வாழ்க்கையில் ஒருமுறையாவது புனித இடமான காசிக்கு சென்று கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு வர வேண்டும் என்ற ஆசை உண்டு. இங்கு, தமிழர்கள் தங்குவதற்கு பல மடங்கள் உள்ளன. தற்போது புதிய, 10 மாடி கட்டடம் ஒன்று, நாட்டுக்கோட்டை செட்டியார்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இந்த மாத இறுதியில், இந்த புதிய சத்திரத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 2003லேயே இங்கு கட்டடம் கட்ட திட்டமிட்டாலும், இந்த இடம் சமாஜ்வாதி கட்சியினர் சிலரின் ஆக்கிரமிப்பில் இருந்தது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடைய முயற்சியால், இந்த இடம் மீட்கப்பட்டு, 2024ல் கட்டட வேலைகள் துவங்கப்பட்டன.காசிக்கு வரும் தமிழர்கள் மட்டுமன்றி, தென் மாநிலத்தவ்ர் அனைவரும் இங்கு தங்கலாம். ஏற்கனவே காசியில் நகரத்தாரின் சத்திரம் உள்ளது. கிட்டத்தட்ட, 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய சத்திரத்தில் 135 அறைகள், டார்மெட்ரி, உணவு ஹால் என, பல வசதிகள் உள்ளன.'இந்த இடத்தை மீட்டுக் கொடுத்து, பிரமாண்டமான கட்டடம் வர உதவிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவசியம் திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும்' என, நாட்டுக்கோட்டை நகர சத்திரம் மேனேஜிங் சொசைட்டி தலைவர் நாராயணன் கேட்டுக்கொண்டுள்ளார்.பிரதமர் மோடியின் தொகுதியான, காசியில் நடக்கும் இந்த கட்டட திறப்பு விழாவில், பிரதமர், உ.பி., முதல்வர் யோகி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா ஆகியோர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
அக் 13, 2025 00:57

ஆனால் இடம் கிடைக்காது. ஒன்று சிபாரிசு இருக்கணும். அல்லது அங்குள்ள ப்ரோக்கருக்கு காசு வெட்டணும்.


Saai Sundharamurthy AVK
அக் 12, 2025 17:47

செட்டியார் என்பது ஜாதி பெயர். ஆகவே அது நாட்டுக்கு கோட்டையால் கட்டப்பட்டுள்ளது என்று சொன்னால் தான் இங்குள்ள திமுக கட்சிக்கு சந்தோசமாக இருக்கும். அப்போது தான் நாட்டுக்கோட்டை என்பவர் யார் என்று கேட்பதற்கு சௌகரியமாக இருக்கும்.


இளந்திரையன் வேலந்தாவளம்
அக் 12, 2025 11:46

அளப்பரிய சேவை போற்றுதலுக்கு உரியது...


Rathna
அக் 12, 2025 11:25

நாட்டு கோட்டை செட்டியாருக்கு பாராட்டுக்கள். செல்வத்தை நற்செயல்களில் பயன்படுத்துவதில், சிவ தொண்டு செய்வதில் அந்த சமூகம் முன்னோடியாக உள்ளது.


ஆரூர் ரங்
அக் 12, 2025 11:22

நாட்டுக்கோட்டை நகரத்தார் பிரிய தெய்வம் முருகன். மத்திய அமைச்சர் முருகன் அவர்களையும் அழைக்கலாம்.


sankaranarayanan
அக் 12, 2025 10:37

துர்க்கா ஸ்டாலின் காசி யாத்திரை சென்றால் இந்த புதிய விடுதியில் தாராளமாக தங்கலாம் உணவு உண்ணலாம் சாமி கரிசனம் கங்கையில் ஸ்நானம் செய்யலாம் கூடவே கணவனையும் ...அழைத்துச்செல்லலாம்


aaruthirumalai
அக் 12, 2025 09:56

மகிழ்ச்சி திருப்தி நிறைவு.


sesha chari
அக் 12, 2025 08:27

தொண்டு நிறுவனத்திற்கு கோடி வணக்கங்கள். மேலும் சிறக்க இறைவன் அருள் தர வேண்டுகிறேன்.


s. mani
அக் 12, 2025 07:40

தென்னாடுடைய சிவனே போற்றி!. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!.. போற்றி!!!..


manu putthiran
அக் 12, 2025 07:33

வாழ்க சனாதன தர்மம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை