உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இந்தியா, ஜப்பானில் ஒரே நேரத்தில் புதிய வகை புல்லட் ரயில் அறிமுகம்

இந்தியா, ஜப்பானில் ஒரே நேரத்தில் புதிய வகை புல்லட் ரயில் அறிமுகம்

புதுடில்லி; இந்தியாவிலும், ஜப்பானிலும் ஒரே நேரத்தில் புதிய வகை புல்லட் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜப்பான் கடனுதவியுடன் மும்பை - ஆமதாபாத் இடையிலான நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை திட்டத்துக்கு 2017ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய அரசு (50 சதவீதம்), மஹாராஷ்டிரா (25%), குஜராத் (25%) இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்காக ஜப்பான் அரசு 50 ஆண்டுக்கு 0.1 சதவீத வட்டியில் ரூ. 88 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது.குஜராத்தில் 353 கி.மீ., துாரம், மகாராஷ்டிராவில், 156 கி.மீ., துாரத்துக்கு இதற்கான ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மலைக்குள் சுரங்கப்பாதை, கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைக்கப்படுகிறது.இப்பணியை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்.,) மேற்கொள்கிறது. மும்பை, தானே, விரார், பாய்சார், வாபி, பிலிமோரா, சூரத், பரூச், வதோதரா, ஆனந்த், ஆமதாபாத், சபர்மதி ஆகிய 12 இடங்களில் ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது.இத்திட்டம் பிரதமர் மோடியின் கனவு திட்டம். இதற்காக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தலைமையிலான அதிகாரிகள் குழு 2024 செப்., டிச., என இருமுறை ஜப்பான் சென்று அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.இந்நிலையில் 'ஷின்கான்சென் இ10', 'ஷின்கான்சென் இ5' என இரு புல்லட் ரயில்களை ஜப்பான் வடிவமைக்கிறது. இது 2026 - 2027ல் தயாராகி விடும். பின் 2027ல் இருந்து மும்பை - ஆமதாபாத் வழித்தடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 'இ5' மணிக்கு 320 கி.மீ., வேகத்திலும், 'இ10' மணிக்கு 400 கி.மீ., வேகத்திலும் செல்லும்.உலகில் முதன்முறையாக புல்லட் ரயிலை தயாரிக்கும் ஜப்பான், அந்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஒரே நேரத்தில் இந்த புதிய வகை ரயிலை அறிமுகம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கா, தைவான் நாடுகளும் இந்த ரயில் மாடலை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளன என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கிடையே இந்தியாவின் ஐ.சி.எப்., நிறுவனம், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இரண்டு செமி புல்லட் ரயில் பெட்டிகளை தயாரிக்க ரூ. 867 கோடியில் 2024ல் ஒப்பந்தம் பெற்றது. இதற்கான பணி 2026ல் நிறைவு பெறும். இந்த ரயில் மணிக்கு 249 கி.மீ., வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SANKAR
ஜன 23, 2025 09:59

400.. 320...249...kazhuthai theynthu katterumbu aavutha?!


அப்பாவி
ஜன 23, 2025 09:02

ஒன்றிய அரசு கடனே வாங்கலைன்னு உருட்டுனவங்க வரிசையில் வந்து பெருமிதப் பட்டுட்டு போங்க. அப்படியே ஆத்மநிர்பார் ஆளுங்களும் வந்து மெடல்.குத்திக்குட்டுப் போங்க.


Anvar
ஜன 23, 2025 11:35

அறியாமை பொத்தாம் பொதுவா கமெண்ட் போடறது திராவிட மாடல் டுமீளர்களுக்கு அதிகம் கடன் வாங்கி ஒரு பதோளில் தொடக்கி அந்த தொழில் வரும் வருமானத்தை வைத்து கடனை கட்டுவது வேறு .. கடன் வாங்கி கருணா பெயரில் வெட்டி செலவு செய்வது வேறு அந்த கடனை அடைக்க நம்ம தலையில இடி விழும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை