உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கால்டாக்சிகளை கட்டுப்படுத்த விதிமுறை இல்லை: இஷ்டப்படி கட்டண வசூலால் பொதுமக்கள் பாதிப்பு

கால்டாக்சிகளை கட்டுப்படுத்த விதிமுறை இல்லை: இஷ்டப்படி கட்டண வசூலால் பொதுமக்கள் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், கால்டாக்சிகளுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் இன்னும் உருவாக்கப்படாததால், கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில், 2001ல் கால்டாக்சி இயக்கம் அறிமுகமானது. சென்னையில் துவங்கிய கால்டாக்சி சேவை, படிப்படியாக மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் விரிவடைந்தது. மொபைல் போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், கால்டாக்சி சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பேச்சு

கார்களின் வகைக்கு ஏற்றார் போல, குறைந்தபட்சமாக 4 கி.மீ., துாரத்திற்கு, 200 முதல் அதிகபட்சமாக 400 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், கால்டாக்சிக்கான கட்டணம் நிர்ணயம் தொடர்பாக எந்த விதிமுறைகளும் அரசால் வகுக்கப்படவில்லை. அதனால், பண்டிகை நாட்கள், மழைக்காலம், தொடர் விடுமுறைகளின் போது, பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது.கால்டாக்சிகளுக்கான கட்டணம் நிர்ணயம், பயணியர் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான விதிமுறைகளை உருவாக்க, கால்டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் சங்கத்தினரிடம், 2016ல் தமிழக அரசு பேச்சு நடத்தியது. அதன்பின், எட்டு ஆண்டுகளாகியும், விதிமுறைகளை உருவாக்கி அமல்படுத்தவில்லை, இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:சென்னை போன்ற பெருநகரங்களில் பயணம் செய்ய, கால்டாக்சி வசதியாக உள்ளது. ஒவ்வொரு நாளும், நேரத்திற்கு ஏற்ற வகையிலும், போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற வகையிலும், மாறி மாறி கட்டணம் வசூலிக்கின்றனர்.

எதிர்பார்ப்பு

எந்த அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கின்றனர் என்பதும் தெரியவில்லை. எனவே, கால்டாக்சிகளுக்கான கட்டணம் நிர்ணயம் மற்றும் பயணியர் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக, அரசு விரைவாக விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், 'கால்டாக்சிகளுக்கு கட்டணம் நிர்ணயம், ஜி.பி.எஸ்., கருவி, தனி கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவை தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு தயாராக உள்ளன. தமிழக அரசு முடிவெடுத்து, விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.வழிகாட்டுகிறது டில்லிமத்திய மோட்டார் வாகன திருத்த சட்டம் - 2019ன்படி, மாநிலங்களில் ஓடும் கால்டாக்சிகளுக்கு விதிமுறைகளை உருவாக்க வேண்டும். கர்நாடகா, ராஜஸ்தான், டில்லி மற்றும் மும்பையில், விதிமுறைகள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ஆனால், தமிழகத்தில் அரசுடன் பேச்சு நடத்தி, எட்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், விதிமுறைகள் உருவாக்கப்படவில்லை. இதனால், பயணியரும், ஓட்டுனரும் அவதிப்படுகின்றனர். இந்த தொழிலை நம்பியுள்ள வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட, கால்டாக்சிகளுக்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். - ஜூட் கேத்யூமாநில பொதுச்செயலர்,தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Roy Richardson
செப் 24, 2024 23:15

I am from Tirunelveli, my personal experience is Call taxis are cheaper than Auto and the pricing is transparent.


Srprd
செப் 23, 2024 17:21

Autos and call taxis in Tamil Nadu are surviving with police and political support. There's no way they are going to listen to rules even if rules were formed. They will continue to loot the passengers and behave in an unruly manner in disregard of all regulations.


Nandakumar Naidu.
செப் 23, 2024 09:46

சென்னையில் கூட கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வாடிக்கையாளர்களை மிக அதிகமாக கொள்ளை அடிக்கிறார்கள். டாக்ஸி பதிவு செய்த பிறகு அதில் காட்டும் பணத்திற்கு மேல் கேட்கிறார்கள். நாம் இல்லை என்று சொன்னால் பதிவு செய்ததை கேன்சல் செய்கிரார்கள். அதிகமாக கேட்பது கால் டாக்சி டிரைவர்களுக்கு இது ஒரு போதை போல் ஆகிவிட்டது. இதே நான் பெங்களூருவில் ஒரு மாதம் இருந்தேன், அங்கு கால் டாக்ஸி பணமும் குறைவு, அதிகமாகவும் கேட்க மாட்டார்கள். இங்கு ஆட்சியாளர்கள் சரியில்லை. "எப்படி அரசனோ,அப்படி மக்கள்".


kannan sundaresan
செப் 23, 2024 05:48

கோவையில் OLA ஆட்டோவில், குறிப்பிட்ட கட்டணத்திற்கு மேல், 50% அதிகமாக ஓட்டுநர்கள் வசூல் செய்கிறார்கள். தமிழக. அரசு வாழ்க ?


முக்கிய வீடியோ