உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை: தீபாவளி நெரிசலை தவிர்க்க அரசு ஏற்பாடு

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை: தீபாவளி நெரிசலை தவிர்க்க அரசு ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளி நெரிசலை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம் என, ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் உள்ள 6,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகளில், 65 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை நிர்வகிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. பண்டிகை காலங்களில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்லும்போது, சுங்கச்சாவடிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கட்டணம் செலுத்த பல மணி நேரம், சில கி.மீ., துாரத்திற்கு வரிசை கட்டி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது, வாகன ஓட்டிகளுக்கு எரிச்சலை தருவதுடன், கால விரயத்தை ஏற்படுத்துகிறது. இம்மாதம் விஜயதசமி விடுமுறை முடிந்து, மக்கள் சென்னை திரும்பியபோது, ஆத்துார், பரனுார் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதிகாரிகள் உத்தரவை தொடர்ந்து, சுங்க கட்டணம் செலுத்தாமலே செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.இந்த சூழ்நிலையில், வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைப்பதால், சென்னை மற்றும் பெரிய நகரங்களில் இருந்து, சொந்த ஊருக்கு அதிகம் பேர் செல்ல உள்ளனர். ஆயிரக்கணக்கில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டாலும், டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் முடிந்துவிட்டது. இதனால் கார், வேன்களை மட்டுமே பயன்படுத்தும் கட்டாயம் நேர்ந்துள்ளது. எனவே, 29, 30ம் தேதிகளில், பல லட்சம் மக்கள் வெளியேறும்போது சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, பொது மக்களும், பல்வேறு அமைப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதை தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றது. அதன் தொடர்ச்சியாக, சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டால், சுங்க கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுமதிக்கும்படி, சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
அக் 27, 2024 22:10

தீபாவளி முடிந்தபிறகு இழந்ததை மீட்க கட்டணத்தை உயர்த்தக்கூடாது, ஆமாம், சொல்லிப்புட்டேன்.


Balasubramanian
அக் 27, 2024 05:47

நல்ல ஏற்பாடு சென்றமுறை தீபாவளி வாரத்தில் பெங்களூரில் இருந்து கோவை செல்லும் போது கிருஷ்ணகிரி சுங்க சாவடியில் மட்டும் ஒண்ணரை மணிநேரம் என்று மொத்தமாக நாலைந்து மணி நேரம் சுங்க சாவடியில் கழிந்தது நினைவுக்கு வருகிறது!


நிக்கோல்தாம்சன்
அக் 27, 2024 03:45

வரவேற்க வேண்டிய ஏற்பாடு , அங்கிருக்கும் ஊழியர்களின் குளறுபடியால் தான் எவ்வளவு விரயங்கள் என்பதனை அரசு உணர்ந்துள்ளது


SUBBU,MADURAI
அக் 27, 2024 05:59

தாம்சன் நீங்கள் இதை கவனமாக படிக்கவில்லை அதாவது முழுவதுமாக சுங்க கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படவில்லை அதனால் டோல்கேட் கட்டண வசூல் தொடரும் எப்போது வாகன வரிசை நெரிசல் ஏற்படுகிறதோ அப்போது மட்டும் கட்டணம் வசூலிக்காமல் கேட்டை திறந்து விட்டு நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். 29,30 ஆகிய இரண்டு நாட்களுக்கு சுங்க வரி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அவர்கள் அறிவிக்கவில்லை.


நிக்கோல்தாம்சன்
அக் 30, 2024 06:08

நன்றி சுப்பு சார் , நீங்க சொன்னது சரி , வாகன நெரிசல் இருந்தாலும் நேற்று சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கறாராக கூறிவிட்டனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை