உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தென்மாவட்ட பணியிடம் கேட்கும் நர்ஸ்கள்; சென்னையிலிருந்து வெளியேற விருப்பம்

தென்மாவட்ட பணியிடம் கேட்கும் நர்ஸ்கள்; சென்னையிலிருந்து வெளியேற விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு மருத்துவமனை நர்ஸ்கள் பணியிட மாறுதலுக்கான பொது கவுன்சிலிங், நேற்று துவங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தென் மாவட்டங்களுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர்.அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் நிரந்தர நர்ஸ்களுக்கான, இரண்டு நாள் பொது கவுன்சிலிங், அந்தந்த சுகாதார மாவட்டங்களில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று துவங்கியது. முக்கிய பணியிடங்கள் விற்பனை செய்யப்பட்டு, கண்துடைப்புக்காக கவுன்சிலிங் நடத்தப்படுவதாக நர்ஸ்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பான செய்தி, நம் நாளிதழில் வெளியானது.இதையடுத்து, 1,228 இடங்கள் காலியாக இருப்பதாக, மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும், 190 இடங்கள் காட்டப்பட்டுள்ளன. அரியலுார், கரூர், கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், காலி இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பணியாற்றும் நர்ஸ்கள் பலர், தென்மாவட்டங்களுக்கு மாறுதல் பெற முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து மட்டும், 100க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், தென்மாவட்டங்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து, நர்ஸ்கள் கூறியதாவது:

இந்த கவுன்சிலிங்கில், 1,300க்கும் மேற்பட்ட நர்ஸ்கள் பங்கேற்றுள்ளனர். பெரும்பாலானோர் தென்மாவட்டங்களுக்கு செல்வதற்காக, மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதற்கு காரணம், அவர்கள் அனைவரும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள். பணி நிமித்தமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு வந்தவர்கள்.பல ஆண்டு பணிக்கு பின், சொந்த ஊர்களுக்கு சென்று, 'செட்டில்' ஆக விரும்புகின்றனர். அதன் காரணமாகவே, சென்னையில் பணிபுரியும் நர்ஸ்கள், தென் மாவட்டங்கள் கேட்கின்றனர்.சென்னையை பொறுத்தவரை, 24 மணி நேரமும் நோயாளிகள் வந்து கொண்டிருப்பர். குறிப்பாக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தினமும், 18,000 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர். அவ்வளவு பேருக்கு சிகிச்சை அளிக்க, போதியளவில் நர்ஸ்கள் இல்லை. அதே நிலை தான், சென்னையில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது.எனவே தான், சென்னையில் பணியாற்றும் நர்ஸ்கள், தங்களது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு சென்றால், சென்னையில் காலி இடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதை தவிர்க்க, சென்னையில் நர்ஸ் பணியிடங்களை அரசு அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
நவ 12, 2024 18:18

மதுரை எய்ம்சில் வேலை கேளுங்க. ஆஸ்பத்திரி, நோயாளிகள் இல்லாமலெர்யே சிலர் சம்பளம் வாங்கிட்டிருக்காங்க. 2047 ல கட்டி முடிச்சு கும்பாபிஷேகம் நடத்திருவாங்க.


ஆரூர் ரங்
நவ 12, 2024 08:30

மாவட்ட அல்லது மண்டல அளவில் ஒதுக்கீடு முறையில் நர்ஸ்களை தேர்வு செய்யலாம். குறைந்த சம்பள ஊழியர்கள் நெடுந்தொலைவிலுள்ள ஊர்களில் பணியாற்றத் தயங்குவதுண்டு.


Matt P
நவ 11, 2024 23:51

சம்பளம் கொடுக்க அரசாங்கத்திடம் பணம் இல்லாமலிருக்கலாம். இலவசமா கொடுக்க தான் பணம் இருக்கும். இலவசமா எடுக்கவும் பணம் இருக்கும். தேர்தல் வரும்போது மக்களுக்கு இலவசமா கொடுக்கணும் அதுக்கும் பணம் சேர்க்கணுமே. திராவிட கட்சி அரசாங்கத்துக்குதான் எவ்வளவு பிரச்னைகள். எப்படி தான் நம்ம முதல்வர் ஸ்டாலின் இதையெல்லாம் சமாளிக்க போகிறாரோ. எல்லா அடிகளையும் இடியையும் தங்கி உயர்ந்தவர். நல்லதே நடக்கும் நம்புவோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை