உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒரு மொழி கொள்கையே உன்னத கொள்கை; பா.ம.க., ராமதாஸின் புது கருத்து

ஒரு மொழி கொள்கையே உன்னத கொள்கை; பா.ம.க., ராமதாஸின் புது கருத்து

திண்டிவனம்: ''ஒரு மொழி கொள்கையே உன்னத கொள்கை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு, 9.5 சதவீத பிழிதிறன் உள்ள கரும்புக்கு கொள்முதல் விலை ரூ.3,151 அறிவித்துள்ளது போதாது. டன்னுக்கு கூடுதலாக 1,000 வழங்க வேண்டும். உற்பத்தி செலவு டன் ஒன்றுக்கு ரூ. 3,200 ஆகிறது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையை, தமிழக அரசும் வழங்குவது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் 7 பேர் இறந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தர தடை பெறுவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேணடும்.கோடைக்காலம் துவங்கி விட்ட நிலையில், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு துவங்கிவிட்டது. காலை, மாலை நேரத்தில் மின்வெட்டு ஏற்படுகின்றன. தற்போது பொதுத்தேர்வு நடப்பதால், தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுராந்தகம் ஏரியை துார் வாரி, கொள்ளளவை உயர்த்த திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 3 ஆண்டுகள் கடந்தும் 60 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. பணிகள் நடப்பதால், விவசாயிகளுக்கு பாசனத்திற்கு நீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ஏரி சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மும்மொழி கொள்கையை வலியுறுத்தி, பா.ஜ., கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளது. என்னைப் பொறுத்த வரை, மும்மொழி கொள்கை மோசடி கொள்கை: இருமொழி கொள்கை ஏமாற்று கொள்கை: ஒரு மொழி கொள்கையே உன்னத கொள்கை. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

தமிழ்வேள்
மார் 08, 2025 11:48

தைலாபுரத்து அடிமைகளுக்கு ஒரு ஒற்றை மொழி கூட தேவை இல்லை ...சைகை மொழி போதும் ...இல்லையா மருத்துவரே ? வன்னியர் என்னும் இனத்தை சுத்தமாக தற்குறிகளாக்குவதே அன்னாரின் திட்டம் போல


Ganesan
மார் 07, 2025 22:10

ஒரு மொழி படித்து விட்டு தமிழ்நாட்டை சுற்றி சுற்றி வாருங்கள்.வாழ்த்துக்கள்


PARTHASARATHI J S
மார் 07, 2025 21:04

"உலகமெங்கும் ஒரே மொழி, உள்ளம் பேசும் காதல் மொழி " என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளே ஞாபகத்திற்கு வருது.


abc
மார் 07, 2025 17:18

மொழியே வேண்டாம்....எல்லோரும் சைகை பாஷை படிக்கச்சொல்லுங்க...!


P. SRINIVASAN
மார் 07, 2025 16:42

இவரு எப்படி டாக்டர் ஆனார்...


bgm
மார் 07, 2025 13:44

ஒன்று உத்தமம் இரண்டு மத்திமம் மூன்று மோசம் நான்கு நாசம்...எங்கேயோ எப்போதோ கேட்டது


Venkatasubramanian krishnamurthy
மார் 07, 2025 12:57

ராம்தாஸ் வாழ்க என்பதற்கு பன்மொழிப் புலமை எதற்கு? தமிழில் கோஷமிடத் தெரிந்தால் மட்டும் போதாதா என நினைத்துவிட்டார்.


Muralidharan S
மார் 07, 2025 12:21

தைலாபுரத்துல, ரொம்ப வெயில் ஜாஸ்தியாயிடிச்சு போல இருக்கு.... திமுக, அதிமுக, பாமக , விசிக மாதிரி கட்சிகளில் படிக்காதவர்கள், நல்லது பற்றி யோசிக்கத்தெரியாதவர்களை மட்டும்தான் வெச்சு இருப்பானுங்க.. இவரோட பேத்திகளுக்கு தமிழ் மட்டும்தான் தெரியுமா ?? பித்தலாட்ட அரசியல் வியாதிகள்.. மரம் வெட்டி ஒரு தலைமுறையினரையே நாசமா செய்தவர்தான் இவர்...


Rajasekar Jayaraman
மார் 07, 2025 12:15

எழுத படிக்கவே தெரிய வேண்டாம் பேசத் தெரிந்தால் மட்டும் போதுமே அப்பதான் கொத்தடிமையாக இருப்பார்


vbs manian
மார் 07, 2025 12:14

கரெக்ட் எங்கும் எதிலும் தமிழ் மட்டுமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை