உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மஹா கும்பமேளா: முஸ்லிம்களுக்கு தடை விதிக்க எதிர்ப்பு : மதமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு

மஹா கும்பமேளா: முஸ்லிம்களுக்கு தடை விதிக்க எதிர்ப்பு : மதமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்க உள்ள மஹா கும்பமேளாவின்போது, முஸ்லிம்களை அதிகளவில் மதமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, மூத்த முஸ்லிம் மதத் தலைவர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்கிடையே, கும்பமேளாவில் பங்கேற்க முஸ்லிம்களுக்கு தடை விதிக்கக் கூடாது என, வேறு சிலர் தெரிவித்துள்ளனர்.

அனுமதி

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பிரயாக்ராஜில், வரும் 13 முதல் பிப்., 26ம் தேதி வரை, 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நடக்க உள்ளது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 45 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏ.பி.ஏ.பி., எனப்படும் அகில பாரதிய அகாடா பரிஷத் என்ற ஹிந்து அமைப்பு, கடந்தாண்டு ஒரு கோரிக்கையை முன்வைத்தது. 'மஹா கும்பமேளாவில் பங்கேற்க முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. சனாதன தர்மத்தை கடைப்பிடிக்கும் ஹிந்துக்கள் மட்டுமே கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும்' என, அந்த அமைப்பு கோரியிருந்தது.அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் ராஸ்வி பரேல்வி என்ற மூத்த முஸ்லிம் மதத் தலைவர், மஹா கும்பமேளாவுக்கு முஸ்லிம்கள் யாரும் செல்லக் கூடாது என்று சமீபத்தில் கூறியிருந்தார்.இதற்கு முஸ்லிம்கள் இடையே எதிர்ப்பு எழுந்தது. அதே நேரத்தில், முஸ்லிம்கள் கடை வைப்பதற்கு தடை விதிக்கும் முயற்சி சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என, அவர் கூறியிருந்தார்.இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, பரேல்வி கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், 'மஹா கும்பமேளாவின்போது, பெருமளவு முஸ்லிம்களை ஹிந்துக்களாக மதம் மாற்றும் முயற்சி நடக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என, அவர் கூறியுள்ளார்.அவருடைய இந்த கருத்துக்கு, வேறு சில முஸ்லிம் மதத் தலைவர்கள், மத அமைப்பின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சகோதரத்துவம்

அதே நேரத்தில் முஸ்லிம்கள் கடை வைப்பதற்கு தடை விதிக்கும் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.ஜமாயத் உலேமா ஹிந்த் அமைப்பின் உத்தர பிரதேச பிரிவின் சட்ட ஆலோசகர் மவுலானா காப் ரஷீதி கூறுகையில், ''உலகின் மிகப் பெரிய மதச்சார்ப்பற்ற நாடாக உள்ள நம் நாட்டில், ஒரு பிரிவினர் கும்பமேளாவில் பங்கேற்க தடை விதிப்பது முறையானது அல்ல. ''மஹா கும்பமேளாவை, மதத்தின் அடிப்படையில் பார்க்கக் கூடாது. முஸ்லிம்களும் நம் நாட்டைச் சேர்ந்தவர்களே,'' என, குறிப்பிட்டார்.அகில இந்திய ஷியா முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலர் மவுலானா யாகூப் அப்பாஸ் கூறுகையில், ''தங்களுடைய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு கும்பமேளாவுக்கு முஸ்லிம்கள் செல்வதில் என்ன தவறு இருக்கிறது. ''கும்பமேளாவுக்கு செல்வதாலேயே, ஒரு முஸ்லிம் மதம் மாறிவிடுவார் என்று கூறும் அளவுக்கு இஸ்லாம் பலவீனமாக இல்லை,'' என, குறிப்பிட்டார்.உத்தர பிரதேச ஹஜ் கமிட்டி தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான மோஷின் ராஜா கூறியுள்ளதாவது:நான் பலமுறை கும்பமேளாவுக்குச் சென்றுள்ளேன். அதுபோல பல முஸ்லிம்களும் சென்றுள்ளனர். கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். அதனால், கும்பமேளாவில் முஸ்லிம்கள் கடை வைப்பதற்கோ, செல்வதற்கோ தடை விதிப்பது சனாதனமாகாது. நம் கலாசாரம், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போதிக்கிறது.கும்பமேளாவுக்குச் சென்றால், முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்துவிடுவர் என்று கூறுவது சரியல்ல.

அச்சம்

இவ்வாறு முதல்வருக்கு கடிதம் எழுதியவர்தான், சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார். அவ்வாறு சட்டவிரோதமாக மதம் மாறியவர்கள், மீண்டும் ஹிந்து மதத்துக்கு சென்றுவிடுவர் என்ற அச்சத்தில் கடிதம் எழுதியிருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, அகில பாரதிய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் மூத்த தலைவரும், இந்திய இஸ்லாமிய மையத்தின் தலைவருமான மவுலானா கலீத் ரஷீத் பாரங்கி மஹ்லி, ''மஹா கும்பமேளாவுக்கு முஸ்லிம்கள் போகக் கூடாது என்று எந்த உத்தரவையும் பிறப்பிக்க மாட்டோம்'' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Kumar
ஜன 07, 2025 15:22

அவனுங்க எந்த நாட்டுக்கும் விசுவாசமா இருக்க மாட்டானுங்க ஏன்னா அது என்னானே தெரியாது


Sivaraj C
ஜன 07, 2025 13:08

சவூதி மெக்காவில் இந்துக்கள் அனுமதி கிடையாது. அந்த இடத்தில் வேறு மத யாரும் போக கூடாது என்று இந்த முஸ்லீம் சட்டம் சொல்லுது. அப்போ இங்கமட்டும் நாங்கள் ஏன் அனுமதிக்க கொடுக்க வேண்டும்.


Shaikh Kadar
ஜன 07, 2025 14:55

அதை நாங்கள் எதிரு பார்க்க வில்ல


R K Raman
ஜன 07, 2025 10:27

வங்காளதேசத்தில் இந்துக்கள் அரசு வேலைக்கு தகுதியில்லை என்று சட்டம் வந்து விட்டது. இது சரியா?


PARTHASARATHI J S
ஜன 06, 2025 20:30

முஸ்லீம்கள் இந்திய தேசத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் இஸ்லாம் பின்பற்றுங்கள். வீட்டிற்கு வெளியே இந்தியனாக இருங்கள். நோ தாடி, நோ டோப்பி.


kantharvan
ஜன 07, 2025 22:33

இது என்னடா கிறுக்குத்தனமான பதிவு என்றைக்கு எல்லா ஹிந்துவும் பட்டை விபூதி கயிறு தாயத்து சாமி டாலர் கழுத்தில கொட்டை இதெல்லாம் இல்லாம இருக்கானுவளோ அன்னைக்கு முஸ்லீம பார்த்து நோ தாடி நோ தொப்பினு சொல்லுங்க? வீதியில எல்லோரும் இந்தியன்தானே அடங்கப்பா முதல்ல கோவில்ல மாரியம்மான்னு... தடை செய்யப்பட்ட மைக் செட்ட அலறவிடுறத நிறுத்துங்கள்?


அப்பாவி
ஜன 06, 2025 20:09

ஓ.. வடக்கே கூட பிரியாணி போட்டா மதம் மாறிடறாங்களா?


Saai Sundharamurthy AVK
ஜன 06, 2025 10:45

உருட்டு பேச்சு பலனளிக்காது !!!


mei
ஜன 06, 2025 10:38

இந்துக்கள் முஸ்லீம்கள் கடைகளில் பொருட்கள் வாங்க கூடாது


kantharvan
ஜன 07, 2025 22:35

ஹிந்துக்கள் முஸ்லிம்கள் விளைவித்த பொருட்களை உண்ணக் கூடாது நெய்த ஆடைகளை அணிய கூடாது?


mei
ஜன 06, 2025 10:37

தாய்மதம் திரும்பட்டுமே, அதனால் என்ன?


mei
ஜன 06, 2025 10:36

கல்யாணம் பண்ணும் இந்து பிராமண பொண்ணுங்க இருக்கிற அளவுக்கு இந்துமத பிராமனர்கள் பலவீனமாக இருக்கிறார்கள்


Kanns
ஜன 06, 2025 09:28

Nothing Wrong to Become Plural Hindu Secular Republic& ReConverting All Convertees back to their Original Native Religion& Culture that Too When PakBangla Was Created by British-Congress Traitor-Conspirators Exclusively for Muslims


புதிய வீடியோ