உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கிளர்ச்சியாளர்களால் பாகிஸ்தான் கிலி: பலுசிஸ்தான் தனி நாடு என அறிவிப்பு

கிளர்ச்சியாளர்களால் பாகிஸ்தான் கிலி: பலுசிஸ்தான் தனி நாடு என அறிவிப்பு

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு அடுத்த அடியாக, தனி நாடு பிரகடனத்தை பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் அறிவித்ததோடு, அரசு அலுவலகங்களில் பாக்., கொடியை அகற்றி விட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றி வருகின்றனர். தங்களை தனி நாடாக அங்கீகரிக்கும்படி, இந்தியா மற்றும் ஐ.நா.,வுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் நடக்கிறது. சமீபத்தில், பாக்., ராணுவத்தினர் சென்ற ரயிலை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்று ஏராளமான பாக்., ராணுவத்தினரை கொன்று குவித்தனர்.தற்போது இந்தியாவின் தாக்குதல்களால் பாக்., திணறும் சூழலில், பலுசிஸ்தானில், பாக்., ராணுவம் மீது, 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' என்ற கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகர் குவெட்டா மற்றும் பைசாபாத், சிப்பி, கெச், மஸ்துங், கச்சி உள்ளிட்ட ஏராளமான இடங்களில் குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்பதாக, அங்குள்ள 'ஜ்ரும்பேஸ்' என்ற வானொலி தெரிவித்தது.

பலுசிஸ்தான் கொடி

பலுசிஸ்தானின் பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதோடு, அரசு அலுவலகங்களில் பாக்., கொடியை அகற்றி விட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர். இதையடுத்து, பலுசிஸ்தானை தனி நாடாக கிளர்ச்சியாளர்கள் குழுவினர் அறிவித்து வெளியிட்ட அறிக்கை:பாகிஸ்தான் சரிவை சந்தித்து வரும் பயங்கரவாத நாடு. எனவே, நாங்கள் சுதந்திர நாடாக பலுசிஸ்தானை அறிவிக்கிறோம். பலுசிஸ்தான் ஜனநாயக குடியரசின் இடைக்கால அரசு விரைவில் அறிவிக்கப்படும். அதில், பலுசிஸ்தானை சேர்ந்த பெண்களும் அங்கம் வகிப்பர். எங்கள் நாட்டை அங்கீகரிக்கும்படி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை கேட்டுக் கொள்கிறோம். டில்லியில் எங்கள் துாதரகத்தை திறக்க அனுமதிக்கும்படி இந்தியாவை வேண்டுகிறோம். பலுசிஸ்தான் ஜனநாயக குடியரசை ஐ.நா., சபை அங்கீகரித்து, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் புதிய கரன்சி அச்சிடுவதற்கு தேவையான நிதியுதவி கிடைக்கச் செய்யும்படி கோரிக்கை விடுக்கிறோம்.

சுதந்திர தினம்

மேலும், பலுசிஸ்தானின் வான், கடல், நிலம் ஆகிய எல்லைக்குள் இருக்கும் ஆயுதங்கள் மற்றும் சொத்துக்களை அப்படியே விட்டு விட்டு, பாக்., படையினரை வெளியேற்றவும், அமைதி காக்கும் படையை அனுப்பி உதவும்படியும் ஐ.நா., சபையை கேட்கிறோம். விரைவில் பலுசிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் பேரணி நடைபெறும். அதில், பங்கேற்குமாறு நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்போம். பலுசிஸ்தான் மக்களிடம் எங்களுக்கு வலுவான ஆதரவு உள்ளது. தற்போது, இங்கு முகாமிட்டுள்ள பாக்., ராணுவத்தினரை எதிர்கொள்ள சர்வதேச நாடுகள் உதவ வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rathna
மே 11, 2025 19:02

பாகிஸ்தானில் பஞ்சாபி ஜிஹாதிகளை தவிர மற்ற இன மக்கள் - சிந்திகள், பஷ்ட்டூன், ஷியாக்கள், பலூச் மக்கள் அதிகாரம் பறிக்கப்பட்டு அவர்கள் உணவுக்கும், வளர்ச்சிக்கும் போராடி வருகிறார்கள். இது தவிர சீனர்களின் ஆதிக்கம் வேறு. சீனர்கள் பலோச் மாகாணத்தில் கனிம கொள்ளையை நடத்தி வருகிறார்கள். இதனால் ஒரு மதத்திற்காக ஆரம்பிக்க நாடு 3-4 ஆக பிரியும் நிலையில் உள்ளது.


selvaraj kandhaswamy
மே 11, 2025 15:33

வேண்டும்


selvaraj kandhaswamy
மே 11, 2025 15:32

பலுசிஸ்தானை உடனே அங்கீகரிக்க வேண்டும்


ramesh
மே 11, 2025 15:24

ஒரு நல்ல மருத்துவம் கல்வி, ஆகியவற்றை வழங்க துப்பில்லாத பாகிஸ்தான் நாடு. பெருமை பீத்தி கொள்வதில் சிறந்தவர்கள், பயங்கரவாதிகள், ஒரு ஆபரேசன் பண்ணனும்னாலும் இந்தியாவுக்கு ஓடி வரணும். அப்படிபட்ட ஒரு நாடு இருந்தால் என்ன இல்லனா என்ன?


prakash A
மே 11, 2025 15:24

சுதந்திரம் கேட்பது அவர்கள் உரிமை


c.mohanraj raj
மே 11, 2025 14:11

பாகிஸ்தானை நான்காக உடைத்து விட்டால் நமக்கு பிரச்சனை குறையும் அதேபோல் பங்களாதேஷையும் ஒரு கை பார்க்க வேண்டும்


Kanns
மே 11, 2025 08:55

Infact, Instead of War And to Save World& Humanity, India & World Must Encourage Balkanisation of FundamentalistTerroristPak into Baluch, Sindh, NWFP, W.Punjab PoK belongs to India


E. Mariappan
மே 11, 2025 08:01

பலுசிஸ்தான் அரசு அமைத்து 1971 போல பாகிஸ்தான் நாட்டை துண்டாட வேண்டும்


Kasimani Baskaran
மே 11, 2025 07:32

தீவிரவாதிகளின் மரணத்தில் சோகமடைந்துள்ள பாகிஸ்தானிய அரசியல் வாதிகள் மற்றும் இராணுவம் பொது மக்களை பாதுகாக்க எந்த திட்டமும் இல்லை. அவர்களுக்குத்தேவை காஷ்மீர் முழுவதுமாக. அது நன்றாக இருந்தால் பலருக்கு பிடிக்கவில்லை. ஆகவே தனி நாடாக பலுசிஸ்த்தானை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்.


N Annamalai
மே 11, 2025 07:12

இதுவே ரொம்ப தாமதம் .பாக்கிஸ்தான் ஒரு அசைவுக்கும் புது நாடு பிறக்கிறது .


முக்கிய வீடியோ