உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ.,வுக்கு 25 தொகுதிகள், 10ல் வெற்றிக்கு உத்தரவாதம்; அமித் ஷாவிடம் பழனிசாமி உறுதி

பா.ஜ.,வுக்கு 25 தொகுதிகள், 10ல் வெற்றிக்கு உத்தரவாதம்; அமித் ஷாவிடம் பழனிசாமி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'வரும் தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு, 25 தொகுதிகள் ஒதுக்கப்படும்; 10 தொகுதிகளில் உறுதியான வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கிறோம்' என உறுதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

வரும் சட்டசபை தேர்தலில், அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு தொகுதி என, மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிட பா.ஜ., விரும்புகிறது. இந்த சூழலில், டில்லியில் அமித் ஷாவை, சில தினங்களுக்கு முன்னர் பழனிசாமி சந்தித்து பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qtlq98ou&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, 'தி. மு.க., வை வீழ்த்து வதற்கு, அ.தி.மு.க., பலம் பெற வேண்டும்' என்ற கருத்தை அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், அமித் ஷா தரப்பில், 'தேர்தல் பணிகளில் 1 சதவீதம் கூட தொய்வு ஏற்படாமல் இருப்பதற்கு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இந்தாண்டு இறுதிக்குள் முடித்து, தேர்தல் பிரசார பணிகளில் வேட்பாளர்களையே களமிறக்க வேண்டும்' என, ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு பழனிசாமி தரப்பில், 'தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள், 200 தொகுதிகளில் வெற்றி பெறப் போவதாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. தி.மு.க.,வை வீழ்த்த, அதிக தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட வேண்டும். 'எனவே, 175 - 200 தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட வேண்டியுள்ளது. பா.ஜ.,வுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்படும்; அந்த தொகுதிகளின் செலவை அ.தி.மு.க., பார்த்துக் கொள்ளும். உறுதியாக 10 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற, அ.தி.மு.க., பாடுபடும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமித் ஷா தரப்பில், 'தமிழகத்தில் எங்களின் இலக்கு, 2029 லோக்சபா தேர்தல்; தி.மு.க., ஆட்சிக்கு வருவதை தடுக்க, பா.ஜ., அனைத்து வகையிலும் அ.தி.மு.க.,வுக்கு உறுதுணையாக இருக்கும்; புதிய கட்சிகளை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., கவனம் செலுத்த வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

selva m
செப் 26, 2025 12:21

100% உண்மை


Sangi Mangi
செப் 21, 2025 13:25

25 இல் போட்டி இட்டு 45இல் வெற்றி பெறுவீர்கள், காசா பணமா, வாயில வடை சுட வேண்டியது தானே? பிஜேபி கட்சிக்கு பொக்கோடா, வடை எல்லாம் ரெம்ப பிடிக்கும், அவங்க தலைவாரி அது உட்டு விக்க சொல்லியிருக்கார்?/


Balasubramanian
செப் 20, 2025 22:07

தனித்து போட்டி, அண்ணாமலை முதல்வர், வெற்றி நிச்சயம் -


SP
செப் 20, 2025 13:43

இந்த கேவலம் தேவையா? அண்ணாமலை தலைமையில் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தால் இதைவிட சிறப்பான வெற்றி பெறலாம் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் கௌரவமாக இருக்கும்.


Oviya Vijay
செப் 20, 2025 09:49

பழனிச்சாமிக்கு இருப்பது செல்வாக்கா இல்லை அவர் ஒரு செல்லாக்காசா என்பதை தேர்தல் முடிவுகள் வந்தபின் இவ்வுலகம் அறியப் போகிறது... இவருக்கா இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோம் என கூட்டணித் தலைவர்களும், உட்கட்சி நிர்வாகிகளும் தங்களையே அசிங்கமாகப் பார்த்துக் கொள்வர்... தேர்தல் முடிவுகள் வரும் நாளில் மிகப்பெரிய களேபரம் ஏற்படப் போகிறது அதிமுக தலைமைக் கழகத்தில். எடப்பாடி அங்கிருந்து விரட்டப்படவும் வாய்ப்பிருக்கிறது... ஜெயலலிதா கட்டிக் காத்த கோட்டையை தங்களின் சுயநலத்திற்காக தகர்த்தெறிய முற்படுகின்றனர் என்றால் நெடுங்கால அதிமுக தொண்டர்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்... பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... அந்த பொறுமை 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் அதிமுக தொண்டர்களிடத்தில் பீறிட்டு எழப் போகிறது... தான் போட்ட ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிப் போய் விட்டதே என எடப்பாடி புலம்பப் போகும் திருநாள் 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகப் போகும் நன்னாள்...


vivek
செப் 20, 2025 14:22

பாவம் ஓவியர் ....திருட்டு திராவிட அகதியாகவே மாறிவிட்டார்... இதயம் பத்திரம்


Subburamu K
செப் 20, 2025 09:20

The great success of Amit Shaw- Desimated the BJP once for ever from tamizhagam. Both the national parties headed by Italian barmaid and Amit Shaw never respect the state workers feelings and views. Their dictatorship is helping the regional parties survival. Now it is very clear national parties will never take a central stage in state, they are just slaves to regional looters. BJP is encouraging corruption in states for their survival


pakalavan
செப் 20, 2025 09:19

மிஸ்டுகால் சங்கி எல்லாம் இனி மிஸ்ஸீங்தான்


suresh Sridharan
செப் 20, 2025 08:43

இங்க ஒருத்தர் யார் யாரு எங்க எங்க எப்படி ஜெயிப்பாங்க அப்படின்னு சொல்லிட்டாரு நம்ம எல்லாம் வேற வேலையே பாத்துட்டு போ சொல்றாரு கேட்டீங்களா இன்னும் ஆறு மாதம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் வெயிட் அண்ட் சீ


பாலாஜி
செப் 20, 2025 08:18

தமிழ்நாடு 2026 தேர்தலில் பாஜகவுக்கு எந்த தொகுதியிலும் வெற்றி கிடைக்காது. அதிமுகவுக்கு ஒரு தொகுதியில் வெற்றி கிடைக்கும். திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சி செய்யும். விஜயின்" தவெக இரண்டாம் இடம் பெற்று எதிர் கட்சியாக தமிழ்நாடு சட்டசபையில் இடம் பெறும்.


பேசும் தமிழன்
செப் 20, 2025 08:29

ஒரு அளவில்லையா..... தேர்தல் முடிந்த பிறகு தானே தெரியும் யார் ஆளுங்கட்சி.... யார் எதிர்கட்சி.... யார் நோட்டாவுக்கு கீழ் என்று ??


pakalavan
செப் 20, 2025 09:17

உன்மை


Veera
செப் 20, 2025 07:31

BJP need not contest in morethan 10-12 seats. They should contest 2 seats in Chennai


முக்கிய வீடியோ