உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பழனிசாமியால் தான் எல்லாம் கிடைத்தது; பட்டியல் போட்டு பேசுகிறார் உதயகுமார்

பழனிசாமியால் தான் எல்லாம் கிடைத்தது; பட்டியல் போட்டு பேசுகிறார் உதயகுமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர், : தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி கிடைத்திடவும், பாலியல் வன்கொடுமைகளை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தி.மு.க., அரசைக் கண்டித்தும், தஞ்சாவூரில் நேற்று அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:

பாழாய் போன தி.மு.க., ஆட்சிக்கு பாலியல் சம்பவங்களே சாட்சி. முதல்வர் கையில் உள்ள போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை. பிறகெப்படி அவர் தமிழகத்து பெண்களை காப்பார். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவரை, 18,200 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., கரைவேட்டி கட்டியவர்கள் பலரே, கொடூரமான பல காரியங்களை செய்கின்றனர். தி.மு.க.,வில் 39 எம்.பி.,க்கள் உள்ளனர். ஆனால், 100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளத்தைக் கூட முதல்வர் ஸ்டாலினால், மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை.

ஆனால், பழனிசாமி டில்லிக்குச் சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களிடம் பேசி, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி, கல்விக்கான நிதி, மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஏற்பாடு எல்லாவற்றையும் பேசி, சாதித்துக் காட்டி உள்ளார். ஒரே வாரத்தில், அவர் வைத்த பல கோரிக்கைகளுக்கும் பலன் கிடைத்துள்ளன. இப்படி தமிழக நலன்களுக்கான எல்லா நல்ல காரியங்களும் பழனிசாமியால் மட்டுமே நடந்துள்ளன. தமிழக முதல்வர்களில் சிறந்த முதல்வராக பழனிசாமி இருந்துள்ளார்; இனியும் இருப்பார்.நிடி ஆயோக் கூட்டத்தில் மூன்று ஆண்டுகளாக கலந்து கொள்ளாத முதல்வர், திடுமென இம்முறை கலந்து கொண்டிருக்கிறார். தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது; அதனால், தன்மானம் உள்ள நான் அங்கு செல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது மட்டும் தன்மானத்தை விட்டு விட்டாரா?முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த 26 வயது தம்பி, இரண்டே ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளையடித்திருக்கிறார்; அதை, சினிமா துறையில் முதலீடு செய்திருக்கிறார். பழனிசாமி மீண்டும் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
மே 24, 2025 07:39

அதுக்குன்னு போனவங்கல்லாம் திரும்ப முதல்வரா வர முடியுமா?


Padmasridharan
மே 24, 2025 06:12

பழனிச்சாமியின் வோட்டு சின்னம் என்னது சாமி. நாட்டுல நடக்கிற எல்லா கொடுமைகளுக்கும் அரசை பழி சொல்வது மற்றவர்களுக்கு அழகல்ல. ஒவ்வொரு இடத்திலும் குற்றங்களை தடுக்கத்தான் காவல் நிலையங்கள் இருக்கின்றன. எத்தனை Public Officers நியாமா வேலை பார்க்கிறாங்க. இவங்க எந்த ஊரு, குடும்பங்கள் இருக்கும் இடம் என்ன என்பது தெரியாது என்பதற்காக அவர்களுக்கு கொடுத்த உடையை பயன்படுத்தி அவர்கள் செய்யும் பாலின கொடுமைகள் வெளியில் வராமல் இருக்கின்றன. மத்தவங்களோட விலாசம், மொபைல் எண் மிரட்டி கேட்கும் இவங்களுக்கு CCTV எங்கெங்கு இருக்கிறதென்று தெரியும் அதனால் அவை இல்லாத இடத்திலுருந்து தங்கள் வண்டியில் இளைஞர்களை ஏற்றி அறைக்கு அழைத்து செல்கின்றனர். இலஞ்சப்பணத்தையும் வாங்குகின்றனர். இவங்க பாதுகாப்ப மட்டுமே பார்க்கிறாங்க. இவங்க செய்யிற பொய் குற்றங்கள்தான் பணத்துக்காக மறைப்பது கர்மாவாக இவங்க குடும்பத்துக்கும் அமைகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை