உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காரில் இருந்த யாரை மறைக்கிறார் இபிஎஸ்: தி.மு.க.,: ரெஸ்ட் ரூம் போனாலும் சொல்லணுமா: இபிஎஸ்.,

காரில் இருந்த யாரை மறைக்கிறார் இபிஎஸ்: தி.மு.க.,: ரெஸ்ட் ரூம் போனாலும் சொல்லணுமா: இபிஎஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடந்த 16ம் தேதி டில்லி சென்ற அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இது தொடர்பாக, தி.மு.க., - ஐ.டி., அணி ஐந்து கேள்விகளை எழுப்பியிருந்தது. சேலம், ஓமலுாரில் நேற்று பேட்டியளித்த பழனிசாமி, அதற்கு பதிலளித்தார். அதன் விபரம்: தி.மு.க., கேள்வி: அமித் ஷாவை சந்திக்க, அரசு வாகனத்தில் சென்றதாக சொல்லும் பழனிசாமி, சந்திப்பு முடிந்து வரும்போது, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள டி.எல்., 2 சி.ஏ.என்., 9009 பதிவெண் கொண்ட கருப்பு 'பென்ட்லி' ரக சொகுசு காரில் வந்தது எப்படி? பழனிசாமி பதில்: டில்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசு காரில் சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினோம்; என் எழுச்சி பயணம் குறித்து கேட்டார். அப்போது, 'முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும்' என கோரிக்கை வைத்தேன். தி.மு.க., கேள்வி: டில்லிக்கு செல்லும் போதெல்லாம், பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மர்மம் என்ன? பழனிசாமி பதில்: கார் இல்லாதவர்கள், வேறு காரில் தான் போக வேண்டும். அதை ஒரு குற்றச்சாட்டாக கண்டுபிடித்திருக்கின்றனர். ஸ்டாலின் வெளிநாடு சென்று வந்துள்ளார். அவரிடம் இப்படி கேள்வி கேட்பீர்களா? தி.மு.க., கேள்வி: கட்சி தொடர்பான சந்திப்பு என்றால், கட்சியினர் உடனிருக்க வேண்டும். அரசு அலுவல் என்றால், அதிகாரிகள் உடனிருக்க வேண்டும். தனிப்பட்ட குடும்ப நிகழ்வென்றால், குடும்பத்தினர் இருக்கலாம். ஆனால், அமித் ஷா வீட்டிலிருந்து வெளியே வந்த காரில், பழனிசாமி உடன் இருந்தது யார்? பழனிசாமி பதில்: அமித் ஷாவை சந்தித்தபோது நேரம் ஆனதால், என்னுடன் வந்த நிர்வாகிகளை அனுப்பி விட்டேன். சாப்பாட்டுக்காக அவர்கள் சென்று விட்டனர். தி.மு.க., கேள்வி: அமித் ஷா வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய பழனிசாமியுடன் காரில் இருப்பவர் யார்; அவர் ஏன் தன் முகத்தை மறைக்க வேண்டும்? அமைச்சருக்கு நிகரான கண்ணியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் பழனிசாமி தன் முகத்தை மறைத்து, அமித் ஷா வீட்டிலிருந்து வெளியேறுவது ஏன்; என்ன அவசியம்; என்ன நிர்ப்பந்தம்; எதை மறைக்கிறார்; யாரை மறைக்கிறார்? பழனிசாமி பதில்: அமித் ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது, முகத்தை துடைத்தபடி வந்ததை, வேண்டுமென்றே திட்டமிட்டு, சிலர் முகத்தை மூடிச் செல்வதாக பொய் செய்தி பரப்பினர். இது வருத்தம் அளிக்கிறது. ஊடகங்களும் நடுநிலையோடு செயல்பட வேண்டும். இனி, 'ரெஸ்ட் ரூம்' சென்றாலும், உங்களிடம் சொல்லி விட்டுத்தான் செல்ல வேண்டும் போல் உள்ளது. இதை, அச்சத்தின் அடிப்படையில் கூறுகிறேன். அமித் ஷாவை இந்த நாளில், இந்த நேரத்தில் சந்திக்கப் போகிறேன் என தெரிவித்து விட்டு தான் சென்றேன். முகத்தை மூடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது குறித்து கேலியும் கிண்டலுமாக பேசி, முதல்வர் ஸ்டாலின் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ManiMurugan Murugan
செப் 20, 2025 00:21

அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி தி மு கா கூட்டணி யிடம் கேள்வி டெல்லி முதலமைசசர்கள் மாநாட்டிற்கு இதுவரை செல்லாதவர் மம்தா போனதை கணடித்தவர் ஏன் ஓடினார் கூட்டம் முடிந்ததும் தமிழகம் வந்த பிரதமரை அமித்ஷாவை வைவேற்காத பார்க்காதவர் அரசு அதிகாரிகளோடு போய் பார்த்தாரா கட்சி நிர்வாகிகளோடு இல்லை குடும்பத்தாரோடு இல்லை ஏன் தனியாக சென்று சந்தித்தார் பழனிசாமியாவது பொதுகூட்டத்தில் சொன்னார் ஊழல் கட்சி முதல்வர் இதை தான் சொல்லாமல் செய்வது என்கிறாரா


Vasan
செப் 19, 2025 15:56

யார் அந்த சார் ? யாரது அந்த கார் ? சொல்லுங்கண்ணே சொல்லுங்க.


Vasan
செப் 19, 2025 15:54

அவரை "உண்மை அறியும் சோதனை" க்கு உட்படுத்துங்கள். உண்மை வெளி வரும்.


SS
செப் 19, 2025 11:37

நேற்று நிதிஷ் குமாரை சந்தித்த புகைப்படத்தை அமித்ஷா தன்னுடைய டிவிட்டரில் வெளியிடுகிறார். ஆனால் பழனிசாமி உடனான சந்திப்பு குறித்து அமித்ஷா எந்த செய்தியும் வெளியிடவில்லை


Haja Kuthubdeen
செப் 19, 2025 10:19

ஆர் எஸ் பாரதி ஊடகங்கள் என்றுமே நடுநிலையாக இருந்ததே இல்லை. அவர்களுக்கு எடப்பாடி செய்தி இல்லை என்றால் பிழைப்பில்லை...அஇஅதிமுக பற்றி மட்டுமே 4பேரை வச்சு விவாதம் நடத்தும்.


V pravin
செப் 19, 2025 09:52

எந்த ஊடகமும் ஆளுங்கட்சியின் அவலங்களை பேசுவதில்லை மேலும் தமிழ்நாட்டின் பல பிரச்சனைகள் உள்ளது அதவையும் பேசுவதில்லை எப்பொழுது பார்த்தாலும் எடப்பாடி எடப்பாடி எடப்பாடி என்று கூப்பாடு போடுவதில் அனைத்து ஊடகமும் தீவிரமாக இருக்கிறது


raja
செப் 19, 2025 08:07

எந்த மக்களின் வரி காசில் குடும்பத்தோட உலகம் சுற்றியதை பற்றி வெள்ளை அறிக்கை குடுங்கடான்னு கேட்டா கற்சிப்புன்னு மடை மாத்துறீங்க...


kamal 00
செப் 19, 2025 07:49

கொத்தடிமை மீடியாக்களுக்கு கண்ணீர் அஞ்சலி


T.sthivinayagam
செப் 19, 2025 07:46

திமுகா பெரிதாக்க வில்லை பாஜாக கூட்டணி கட்சியான அமுக தினகரன் தான் பெரிதாக்கி யார் தழினவிரோத அட்டை பூச்சிகள் தான் திமுக என்று அலகின்றனர்


S Balakrishnan
செப் 19, 2025 05:26

உப்பு சப்பில்லாத ஒரு சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்க திமுக திராவிட மாடல் தலைவருக்கு இருக்கும் அக்கறையை பாராட்டி ஒரு தனி விழா எடுத்து கொண்டாடலாம்.


Haja Kuthubdeen
செப் 19, 2025 14:07

அதற்கு ரஜினி கமல் போன்றவர்களை சிறப்பு விருந்தினரா அழைத்து டிவியில் ஒளிபரப்பலாம்.


சமீபத்திய செய்தி