உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  கைவிட்டு போகும் அந்தஸ்து; பரிதவிக்கும் பழனிசாமி

 கைவிட்டு போகும் அந்தஸ்து; பரிதவிக்கும் பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை அ.தி.மு.க., என்பது பெயரளவுக்கு இருப்பதால், அதன் பொதுச்செயலர் பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: 'தமிழகத்தில் பழனிசாமிதான் தே.ஜ., கூட்டணியின் தலைமை' என, மேடைதோறும் சொல்கின்றனர். ஆனால், உண்மை நிலை அப்படியில்லை. அ.தி.மு.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக, 'நீங்கள்தான் கூட்டணிக்கு தலைமை' என்று கூறி, பழனிசாமியை கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தது பா.ஜ., மேலிடம். ஆனால், பா.ஜ., மேலிடம், பழனிசாமி தான் கூட்டணிக்கு தலைமை என எங்கும் கூறுவதில்லை. ஏனென்றால், கூட்டணி அமைக்கும் பணியை, பழனிசாமியிடம் தான் டில்லி மேலிடம் முதலில் ஒப்படைத்தது. ஆனால், கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகளில், பழனிசாமி கறாராக நடந்து கொண்டதால், கூட்டணி கட்சியினர் அதிருப்தியுடன் இருந்தனர். எனவே, கூட்டணி விஷயங்களை பா.ஜ., மேலிடமே நேரடியாக பார்க்கத் துவங்கியது. பிரதமர் வருகைக்கு முன்பாக, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் சென்னைக்கு வந்து, விறுவிறுவென கூட்டணியை கட்டமைத்தார். தனக்கான ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக, அன்புமணி மட்டும் தான், பழனிசாமியிடம் நேரடியாக கைகோர்த்தார். இல்லையென்றால், அவரும் பா.ஜ., தலைவர்களை சந்தித்துத்தான், கூட்டணியில் இணைந்திருக்க முடியும். புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தியை தவிர, பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்புவதும், பழனிசாமியின் கறாரான செயல்பாடுகளால் தான். அதுமட்டுமல்ல, பன்னீர்செல்வம், ராமதாஸ், கிருஷ்ணசாமி, மற்றும் தே.மு.தி.க.-,வை கூட்டணிக்குள் கொண்டு வர, பா.ஜ.,தான் முயற்சி எடுக்கிறது. அ.தி.மு.க., இப்பணிகளை கண்டுகொள்ளவில்லை. எனவே, தமிழக தே.ஜ., கூட்டணிக்கு, பா.ஜ., தலைமை தாங்கும் நிலை இயற்கையாக அமைந்து விட்டது. இதனால்தான், மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் மோடி, அ.தி.மு.க., குறித்து பெரிதாக எதுவும் குறிப்பிடவில்லை. கூட்டணிக்கான தலைமை என்ற அந்தஸ்து, தன் கையை விட்டு நழுவுவதால், பழனிசாமி பரிதவிப்பில் உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

SRIRAMA ANU
பிப் 08, 2026 08:54

மதவாத பிரிவினை பாஜக இப்படி தான் வளர்கிறது. அடுத்தவர்களை கெடுத்து வாழ்பவர்கள் ஒரு நாளும் நீண்ட நாட்கள் வாழ மாட்டார்கள் இவர்களுக்கான மிகப்பெரிய வீழ்ச்சி மிக விரைவில் இருக்கிறது. இப்பொழுது அனைத்து ரஸ் நாய்களும் தெறித்து ஓடும்... காலம் மிக விரைவில் வரும்


தமிழ்வேள்
ஜன 29, 2026 20:45

திருட்டு திமுக & அதிமுக இடையே சின்னம் ஒன்றைத் தவிர வேறு எதிலும் வேறுபாடு இல்லை...அதிமுக பழனி பிடியில் இருப்பதைத்தான் திமுகவும் விரும்புகிறது..பாஜக சின்னத்தில் மற்ற உதிரி கட்சிகள் பாஜக சின்னத்தில் போட்டியிடுவது மட்டுமே திமுகவின் மரண சாசனத்தை எழுதும் வழி....பாஜக சின்னத்தில் நிற்கும் தொகுதிகளில் பழனி கும்பலின் ஓட்டு திமுகவுக்கு போகும் வகையில் உள்ளடி வேலை நிச்சயம் நடக்கும்...பழனி நம்பத்தகுந்த தலைவர் அல்ல..இது பாஜக வுக்கு நன்றாகவே தெரியும்....


Palanisamy Narayanasamy
ஜன 29, 2026 16:23

வினை விதைத்தவன் வினையை மட்டுமே அறுவடை செய்வான்..


Akrmn
ஜன 29, 2026 11:32

இனிமேல் தமிழ்நாட்டில் இடமில்லை விரட்டி அடிப்பார்கள்


RRR
ஜன 29, 2026 11:30

எடப்பாடியை பாஜக தலைமை நம்புவது... பரிதாபம்...


Appandairajan p
ஜன 29, 2026 10:05

எட்டப்பன் பழனிச்சாமிக்கு தன் வினை தன்னை சுடும் என்பது நடைமுறையில் அனுபவிக்கிறார் அன்று நல்லவர் ops குரூப் வெளியேற்றினார் இன்று மறைமுகமாக அழைப்பு வீட்டுக்கிறார் தேர்தலுக்கு பின்பு அவரை கிம் ஆக்கமாட்டார்கள் என்பது உறுதி


Priyan Vadanad
ஜன 29, 2026 03:40

பேசாமல் திமுகவோடு கூட்டணி வைக்கலாம். அதைவிட தமிழ்நாட்டு நலன் கருதி திமுகவும் அதிமுகவும் இணைந்து விடலாம். பேரைக்கூட ஆதி திமுக, அதாவது ஆதிமுக என்று மாற்றிவிடலாம். எதற்காக பாவக்காவை தோளில் சுமக்கவேண்டும்?


Mohamed Atha
ஜன 29, 2026 07:45

அருமையான யோசனை. தமிழ்நாடு நல்ல வளர்ச்சி பாதையில் செல்லும்


ramesh s
ஜன 28, 2026 20:44

ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம்.


Ms Mahadevan Mahadevan
ஜன 28, 2026 19:35

தி மு க மட்டும் தான் ஊழல் செய்தது போல் அநேகபெர் கருத்து சொல்லுகிறர்கள் . அதிமுக காங்கிரசு பி ஜே பி என்று எல்லாக்கட்சிகளும் ஜாதி கட்சிகள் உட்பட அனைத்தும் ஊழல் கட்சிகள் தான். பி ஜே பி எம் பி, எம் எல். எ. நிறைய கிரிமினல் வழக்கு உள்ளது. விஜய் வரி கட்ட கருப்பு பணம் சம்பாதிப்பவர் .மக்களே நீங்கள் நேர்மையாக இருந்து நல்ல வரிகளை தேர்ந்து எடுக்கங்கள். இல்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களியுங்கள்


HoneyBee
ஜன 28, 2026 21:44

அடிமைகள் நல்லா கதறுது


vivek
ஜன 29, 2026 00:26

நாங்கள் ஊழலை ஒளித்து வாஷிங் மெஷினில் போட்டு வெளுத்து விடுவோம். நாங்க ரொம்ப நல்லவங்க. எங்க கட்சிக்கு வந்துட்டா எல்லாரும் புனிதர்ஆயிடுவாங்க.


Venkatachalapathy
ஜன 28, 2026 18:55

அரசு ஊழியர்களை கேவலமாக பேசிய பழனிச்சாமிக்கு இது மிகவும் குறைவான ஆப்பு தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை