உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பழனிசாமியின் திண்டுக்கல் பேச்சு; தலித் தலைவர்கள் கடும் கோபம்

பழனிசாமியின் திண்டுக்கல் பேச்சு; தலித் தலைவர்கள் கடும் கோபம்

மதுரை : திண்டுக்கல்லில் நேற்றுமுன்தினம் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'முத்துராமலிங்க தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்; அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்' என வாக்குறுதி அளித்தார். இதற்கு தமிழக மக்கள் முன்னே ற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் புதிய தமிழகம் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல, தே வேந்திர இனத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், 'செப்., 11ல் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த அ.தி.மு.க., தரப்பில் யாரும் வரக்கூடாது' என தேவேந்திர பண்பாட்டுக்கழகம் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு தென் மாவட்டங்களில் கடும் நெரு க்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, பா.ஜ., - அ.தி. மு.க., கூட்டணியில் இருந்து பன்னீர்செல்வமும், தினகரனும் வெளியேறி உள்ள நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர், அ.தி.மு.க., தலைமை மீது கோபம் அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், அவ்விரு கட்சிகளும், விஜய் தலைமையில் அமையும் கூட்டணியில் இணைந்து, வரும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளலாமா என யோசிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

pakalavan
செப் 10, 2025 15:05

எடப்பாடி இப்படிதான் போற வர்ற இடமெல்லாம் ஆடு புளுக்க போட்டமாதிரி பேசுது


தமிழ்வேள்
செப் 10, 2025 12:48

மதுரை தமிழ்ச்சங்கம் விமான நிலையம் என்று பெயர் சூட்டுதல் பிரச்சினைகளை தவிர்க்கும் .


Sivagiri
செப் 09, 2025 23:48

முன்பு போக்குவரத்துக்கு கழகங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை ,, , ,இப்போ ஏர்போர்ட்டுக்கு . . .


Sivagiri
செப் 09, 2025 23:44

தேவர் பெயரை உச்சரித்தாலே கோபம் வருதா , , ,இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள ஜாதி கட்சியினர் , எந்தப்பக்கம் போனாலும் பிரச்சினைதான் , விஜயும் முத்துராமலிங்கத்தேவர் பெயரை உச்சரித்தால் , அங்கே இருந்தும் வெளியேறி விடுவார்களா , இங்கே எந்த கட்சியும் சேர்க்க விட்டால் , வேண்டுமானால் சிலோனுக்கோ , சிங்கப்பூர் மலேசியா இந்தோனேசியா என்று தேடி செல்ல வேண்டியதுதான் . . .


Modisha
செப் 09, 2025 23:01

தலித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி தாக்கப்பட்டபோது வராத கோபம் இப்போது தலித் தலைவர்களுக்கு வருவது ஏன் .


Sundar R
செப் 09, 2025 22:02

அந்த காலத்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரைக் கருதாது, தன்னலம் பாராது, தங்கள் வீடு, குடும்பத்தினரையும் மறந்து நம் பாரத தேசத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து போராடியிருக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஜாதி அடையாளம் கொடுப்பது, அவர்கள் தீவிரவாதப் போராளிகள், மிதவாதப் போராளிகள் என்று பிரித்துப் பார்ப்பது போன்றவை மிகவும் இழிவான செயல்கள். எல்லா சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் நோக்கம் ஒன்று தான். வெள்ளையர்களை விரட்டியடித்து நம் பாரத நாடு விடுதலை பெறவேண்டும் என்பது தான் அது. அதனால், அவர்களிடையே வித்தியாசம் பார்ப்பதற்கு நமக்கு அருகதையில்லை. அந்த வகையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்குப் பிறகும் ஏராளமான சுயநலமற்ற பணிகளை, மகத்தான சாதனைகளை செய்துள்ளார். தன்னுடைய சொத்துக்களையும் தமிழக மக்களுக்காக எழுதியுள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயரை வைப்பதற்கு மதுரை விமான நிலையம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வேறு ஒரு சிறந்த இடத்தில் அவரது புகழ் குறையாவண்ணம் அவரது பெயரைச் சூட்டலாம்.


M Ramachandran
செப் 09, 2025 21:43

முன் யோசனையில்லாத சுய நலத்தால் பேசு வதற்கு கூடஆட்கள் பஞ்சம். மன்னைய்ய காவ்வுவது நிச்சயாமியிடுச்சி.


Azar Mufeen
செப் 09, 2025 21:13

M. I (முத்துராமலிங்கம் இம்மானுவேல் சேகரன் )மதுரை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்


anonymous
செப் 09, 2025 23:32

what about naming to Thirumalai Naicker


முருகன்
செப் 09, 2025 20:00

ஒரு பிரிவுக்கு ஐஸ் வைப்பதாக நினைத்து இரு இடத்தில் அடி படும் நிலை இவருக்கு தேவை தான்.நாட்டில் அனைவரும் சமம்.இதுவே இன்றைய அரசியலுக்கு தேவை


ஈசன்
செப் 09, 2025 19:24

தேஜ கூட்டணியில் மேலும் விரிசல் விழ எடப்பாடி இப்படி பேசியதற்கு காரணம் அண்ணாமலைதான் என்று உருட்டுவார்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை