உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாம்பன் பாலத்தின் வயது 111: துருப்பிடித்து எலும்பு கூடானது

பாம்பன் பாலத்தின் வயது 111: துருப்பிடித்து எலும்பு கூடானது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியர் ரயிலில் செல்லும் வகையில், 1911ல் ஆங்கிலேயர்கள் பாம்பன் கடலில் ரயில் பாலம் கட்டும் பணியை துவக்கினர்.பின், 1914 பிப்., 24ல் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கியது. அன்று முதல் 2022 வரை ரயிலில் பயணித்த பல கோடி மக்களை சுமந்த சுமைதாங்கி பாம்பன் பாலம். கடந்த 2018 முதல் பாம்பன் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலமிழந்ததால், பராமரிப்பு செய்து தொடர்ந்து ரயிலை இயக்கினர். ஆனால், 2022 டிச., 23ல் துாக்கு பாலத்தில் உள்ள துாண் சேதமடைந்ததால் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.பின், இரு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கப்படாத நிலையில் புதிய பாலம் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.இரு ஆண்டுகளாக பழைய ரயில் பாலத்தில் உப்புக்காற்றில் துருப்பிடிப்பதை தடுக்க அலுமினிய பெயின்ட் பூசாமலும், ரயில்வே ஊழியர்களின் பராமரிப்பின்றியும் உள்ளதால், தினமும் வீசும் உப்பு காற்றால் துாக்கு பாலத்தின் இரும்பு துாண்கள், பிளேட்டுகள் துருப்பிடித்து எலும்பு கூடாக மாறியுள்ளன.ராமேஸ்வரம் தீவின் அடையாள சின்னமாக விளங்கும் 111 வயதான இந்த ரயில் பாலத்தை வரலாற்று நினைவு சின்னமாகவும், இளம் தலைமுறையினருக்கு நினைவு கூறும் வகையில், இதை பாதுகாத்து பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SRINIVASARAGHAVAN.S
ஜன 20, 2025 12:09

பழைய பாம்பன் ரயில் பாலத்தை, வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாப்பது அத்யாவஶ்யம். விவேகிகள் அதிகம் உள்ள மத்ய அமைச்சரவை, கூடிய விரைவில் இந்தப் பழைய பாலத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து, மராமத்துப் பணிகளை மேற்கொண்டு தொடர்ந்து பேணிப் பராமரிக்க வேண்டும். மழை, காற்று , கடல் சீற்றம் போன்ற நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பாதுகாப்பான முறையில் சுற்றுலாப் பயணிகளை "கட்டணத்துடன்" அநுமதிக்கலாம். தினமலர் போன்ற மக்கள் சேவை நிறுவனங்கள் மத்ய அரசுடன் தொடர்பு கொண்டால் நிச்சயம் நல்லது நடக்கும். சுற்றுலா


Bhaskaran
ஜன 20, 2025 08:22

அருகிலேயே காயலான்கடைக்காரர்களின் ஊர் ரயில்வே சிரமப்படவேண்டாம்


JeevaKiran
ஜன 19, 2025 12:14

ஆம் . தொழில் நுட்பம் டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே கட்டிய பாலம். இதை நினைவு சின்னமாக்கணும்.


முக்கிய வீடியோ