வாசகர்கள் கருத்துகள் ( 1 )
this is only temporary, china cannot block this acquisition by BlackRock. china will loose it's hold on greenland
புதுடில்லி: அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான அடுத்த மோதல் களமாக அமைந்துள்ளது, பனாமா கால்வாய். அமெரிக்க அதிபராக தேர்வானதும் டிரம்ப் மேற்கொண்ட அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று, பனாமா கால்வாயை மீட்டெடுப்பது. இது, அமெரிக்காவின் பொருளாதார பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானது என, டிரம்ப் அப்போது கூறியிருந்தார்.இதையடுத்து, கடந்த ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்றதும், இதற்கான பணிகளை தீவிரப்படுத்தினார். தனக்கு நெருக்கமான, 'பிளாக்ராக்' எனும் அமெரிக்க முதலீட்டு நிறுவனத்திடம் இதற்கான பணிகளை ஒப்படைத்தார்.
பால்போவா (பசிபிக் பகுதி) கிறிஸ்டோபால் (அட்லாண்டிக் பகுதி)
அட்லான்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையேயான பயண தூரத்தை கணிசமாக குறைக்கிறது. இது இல்லாவிட்டால், அட்லான்டிக் கடல் பகுதியிலிருந்து பசிபிக்கிற்கு செல்ல, தென் அமெரிக்காவின் தெற்கு முனையைச் சுற்றி வர வேண்டும். அமெரிக்காவின் 40 சதவீத கன்டெய்னர் கப்பல்கள் இதன் வாயிலாகவே பயணிக்கின்றன
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அமைந்துள்ளது 1904 - 1914ல் அமெரிக்கா கட்டியது 1990கள் வரை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது அமெரிக்க தலையீட்டை பனாமா அரசு விரும்பவில்லை 1999ல் முழு கட்டுப்பாட்டையும் அமெரிக்கா விலக்கியது. தற்போது பனாமா கால்வாய் ஆணையம் நிர்வகிக்கிறது இருப்பினும், சீனாவின் ஆதிக்கத்தில் இருப்பதாக புகார் அமெரிக்காவின் 40% சரக்கு கப்பல்கள் பயணிக்கின்றன
முதலீட்டு ஆலோசனை நிறுவனம் 42 நாடுகளில் இயங்கி வருகிறது 19,000க்கும் அதிகமான பணியாளர்கள்
50க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது 24 நாடுகளில், 53 துறைமுகங்களை இயக்குகிறது 3 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள்
this is only temporary, china cannot block this acquisition by BlackRock. china will loose it's hold on greenland