உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நிர்மலா சீதாராமனை சந்திக்க பன்னீர், தினகரன், செங்கோட்டையன் திட்டம்

நிர்மலா சீதாராமனை சந்திக்க பன்னீர், தினகரன், செங்கோட்டையன் திட்டம்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்குமாறு குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பொறுப்புகளை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பறித்துள்ளார். எனினும், செங்கோட்டையன் முயற்சிக்கு, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் முழு ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகியதாக அறிவித்த பன்னீர்செல்வம் மற்றும் தினகரனை சமரசப்படுத்தி, மீண்டும் கூட்டணியில் சேர்க்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விருப்பம் தெரிவித்துள்ளார். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் பீஹாரில், தேர்தல் பணிகளில் அமித் ஷாவின் முழு கவனம் இருக்கிறது. எனவே, தமிழகத்தில் பா.ஜ., சார்பாக நடைபெறும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் பொறுப்பு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 21ம் தேதி, திண்டுக்கலில் நடக்க உள்ள பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க, நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகிறார். அப்போது, அவரை பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் ஆகிய மூவரும் சந்திக்க திட்டமிட்டு உள்ளனர். அந்த சந்திப்பின்போது, நிர்மலாவுடன் மூவரும் பேசி, முக்கிய முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. - நமது நிருபர் - - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Haja Kuthubdeen
செப் 11, 2025 21:38

யாரை வேணுமானாலும் சந்தித்து கொள்ளட்டும்..எவனும் அஇஅதிமுகவை அசைக்க முடியாது...விரைவில் செங்கிஸ் கட்சியை விட்டே நீக்கப்படுவார்..


Durai Kuppusami
செப் 11, 2025 19:23

அவர், ஒரு கட்சியின் ஸ்லீப்பர் செல் .யோக்கியதை இல்லாதவர்..


ஈசன்
செப் 11, 2025 16:47

ஆம். நிதி அமைச்சர் பொருளாதாரத்தில் வல்லவர். மற்ற படி தமிழ் நாட்டு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. அமித்ஷா எதற்காக இந்த பணியை இவரிடம் ஒப்படைத்தார் என்று தெரியவில்லை.பாஜக மேலிடம் மேலும் மேலும் அண்ணாமலை அவர்களை வெறுப்பேற்றி கொண்டு இருக்கிறார்கள் என்று தெளிவாக புரிகிறது. ஒன்று மட்டும் நிச்சயம். கடந்த 4 வருடங்களில் தமிழக பாஜக வேகமாக வளர்ச்சி பெற்றது போன்று, அதே வேகத்தில் சரிந்து கொண்டு வருகிறது. காரணம் அண்ணாமலை ஆதரவாளர்களின் விரக்தியில். மேலும் அண்ணாமலை ஆதரவாளர்கள் அவருக்காக தொண்டர்களாக வந்தார்களே அன்றி பாஜகவுக்காக வரவில்லை. 2026 இல் இவர்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்றால் அதிசயம். அண்ணாமலை அவர்களும் தீவிர ஆன்மீக பேச்சாளராக மாறிவிட்டார், உங்கள் பைத்திய காரதனமான முடிவுகளால்.


pakalavan
செப் 11, 2025 16:35

நாட்டை சீரழிச்ச நிம்மி இப்போ அதிமுகவை சிதறடிக்க வருதாமாம்


Vijay D Ratnam
செப் 11, 2025 14:07

உலகின் மூன்றாவது பொருளாதாரமாக உருவெடுத்துவரும் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இரண்டு ஆண்டுகள் கொரோனா வைரஸ் கால முடக்கத்தையும், உலக பொருளாதார வீழ்ச்சியையும் தாண்டி ஐந்து ட்ரில்லியன் டாலர் இலக்கை நோக்கி இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் திறமை மிக்க இரும்பு பெண்மணி. இதைவிட உயரமான பதவிக்கெல்லாம் வரக்கூடிய தகுதி படைத்த நிர்மலா சீதாராமன் அவர்கள், அப்படிப்பட்டவர் தமிழ்நாட்டில் ஒரு மாநில கட்சியில் இருந்து பத்திவிட்ட ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், இன்னும் பத்திவிடாமல் இருக்கும் செங்கோட்டையன் போன்றவர்களை அழைத்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு நல்லதல்ல. அந்தளவுக்கு இவிங்க வொர்த்தும் இல்ல. இந்த நாலு நரிகளையும் உசுப்பிவிட்டு அனுப்பும் பல்லு புடுங்குன சிங்கத்தை கூப்பிட்டு வெளுத்தால் இது போன்ற அக்கப்போருலாம் வராது. பொறவு செல்லூர் ராஜு, புகழேந்தி, தீபா போன்ற மேதைகள் பஞ்சாயத்துக்கு டெல்லி கெளம்பி வர ஆரம்பிச்சிடுவாய்ங்க.


pakalavan
செப் 11, 2025 16:39

எப்படி நா கூசாம இப்படி பொய்யா பேசுதுங்க, பாருங்க”” பொருளாதாரம் மிகவும் மோசமா இருக்கு, ஜி எஸ் டி அது இது ன்னு ட்ராமா பன்றது எல்லாம் பித்தலாட்டம்


venugopal s
செப் 11, 2025 11:03

அதிமுக வை அழிக்கும் பாஜகவின் முயற்சியை இவர்கள் எல்லோரும் சேர்ந்து சுலபமாக்கி விடுவார்கள் போல் உள்ளதே!


பாலாஜி
செப் 11, 2025 10:01

நிர்மலாசீதாராமனை சந்திப்பதைவிட......


பிரேம்ஜி
செப் 11, 2025 07:31

வெட்டிப் பசங்க! வெட்டி வேலை! நாடு ரொம்ப முன்னேறிவிட்டது! கவுண்டமணி - செந்தில் இல்லாத குறையை இந்த மாதிரி நியூஸ் போட்டு நிரப்புகிறீர்கள்! நன்றி!


Sun
செப் 11, 2025 07:31

அ.தி.மு.க வின் பொதுச் செயலாளர் அமித்ஷாவோ, நிர்மலா சீத்தாராமனோ இல்லை. தலைமை அலுவலகம் டெல்லியிலும் இல்லை. இதை இம் மூவரும் உணர்ந்தால்தான் அ.தி.மு.கவில் மீண்டும் இடம் பெறுவதற்கான தகுதி கிடைக்கும்.


Manaimaran
செப் 11, 2025 06:23

எல்லாம் முத்தி போயி திரியராங்க


முக்கிய வீடியோ