உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பன்னீர்செல்வம் மாநாடு தள்ளிவைப்பு; பாதயாத்திரை துவக்குகிறார் ரவீந்திரநாத்

பன்னீர்செல்வம் மாநாடு தள்ளிவைப்பு; பாதயாத்திரை துவக்குகிறார் ரவீந்திரநாத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அடுத்த மாதம் 4ல், மதுரையில் நடத்துவதாக அறிவித்துள்ள மாநாட்டை தள்ளி வைக்க, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9m8od7d7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநாட்டிற்கு முன்னதாக, அவரது மகன் ரவீந்திரநாத் தலைமையில், 500 பேர், அ.தி.மு.க., மீட்பு எழுச்சி பயணத்தை கன்னியாகுமரியில் துவக்கி, கும்மிடிப்பூண்டியில் நிறைவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஏற்பட்ட பின், தனக்கு முக்கியத் துவம் அளிக்கப்படாதது, பிரதமர் மோடியை வரவேற்க அனுமதிக்காதது போன்ற காரணங்களால், தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்பின் முதல்வர் ஸ்டாலினை, ஒரே நாளில் இரு முறை சந்தித்து பேசினார்; தொடர்ச்சியாகவும் சந்தித்து வருகிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை; நண்பர்களும் இல்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்,'' என்றார். முன்னதாக, 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில், மதுரையில் செப்., 4ம் தேதி மாநாடு நடத்தப்படும். 'அது, அரசியல் வரலாற்றில் பதிவு செய்யப்படும் மாநாடாக அமையும்' என பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின், செப்., மாதத்தில் மாநாடு நடத்த பன்னீர்செல்வம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தி.மு.க.,வின் முப்பெரும் விழா செப்., மாதத்தில் நடக்க உள்ளது. எனவே, அடுத்த ஆண்டு பிப்., 24ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளன்று மாநாடு நடத்தி, தேர்தல் கூட்டணி முடிவை அறிவிக்கலாம் என,பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அ.தி.மு.க.,வை தீய சக்திகளிடமிருந்து மீட்கும் பாதயாத்திரையை துவக்க, பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.,யுமான ரவீந்திரநாத் திட்டமிட்டுள்ளார். அவர் கன்னியாகுமரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். அவருடன் பாதயாத்திரையில், 500 பேர் பங்கேற்கின்றனர். பாதயாத்திரை ஒரு வருவாய் மாவட்டத்தை கடக்கும்போது, அதன் எல்லையில் பொதுக்கூட்டம் நடத்தவும், அதில் பன்னீர்செல்வம் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வுக்கு எதிராக களம் இறங்கவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வகையிலும், பாதயாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளதாக பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

மணி
ஆக 02, 2025 13:15

இப்ப இது அரசியலில் ஒரு . நோய்


Siva Balan
ஆக 02, 2025 12:59

இந்த ஆளு தான் முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற என்னத்தில் திமுகவுடன் சேர்ந்து அம்மாவை மாட்டி விட்டுருப்பானோ. அது தெரிந்துதான் பிஜேபி யும் இபிஎஸ்சும் இந்த ஆளை கண்டுக்கலையோ....


S.L.Narasimman
ஆக 02, 2025 12:38

என்றைக்கு ஓபீசு சுடாலினிடம் குடும்பத்தோடு சரண்டனாரோ அன்றைக்கே அதிமுக என்ற வார்த்தையை உச்சரிக்கும் யோக்கியதயை இழந்தாச்சு. இனி உதயநிதி, இன்பாநிதின்னு பணிவிடை செய்து வயிரு வளர்த்து கொள்ளலாம்


sankaranarayanan
ஆக 02, 2025 12:15

மக்களே இனி தெரிந்து கொள்ளுங்கள் இனி தமிழகத்தில் அப்பாவும் புள்ளையாண்டானும் இருக்கும் அரசியல் கே கட்சிகள்தான் தமிழகத்தை மக்களை அடக்கி ஆளும் அது என்த கட்சி என்று இப்போதே கூறவே முடியாது இதுதானா தமிழகத்தின் தலைவிதி


Haja Kuthubdeen
ஆக 02, 2025 10:40

ஏனய்யா பண்ணீரு..அஇஅதிமுகவ மீட்டு உன்னிடம் கொடுத்தால் நீர் திமுகவோடு கூட்டணி போட்டுக்குவியா!!!!


Diraviam s
ஆக 02, 2025 10:35

இவர்களின் பாத யாத்திரை மூலம் டிராபிக் ஜாம் தான் ஏற்படுகிறது.


V RAMASWAMY
ஆக 02, 2025 09:02

சாதாரணமாக காரில் செல்வபவர்கள் இரங்கி நடந்து போனாலே அது பாத யாத்திரை என்று பெயர் பெரும் நிலையில், பாத யாத்திரை என்கிற சொல்லின் புனிதத்துவம் போய்விட்டது.


D Natarajan
ஆக 02, 2025 08:12

கொள்ளையடித்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிவிடும். கடைசியில் விடியலுடன் ஐக்கியம்.


Ravi Chandran.K , Pudukkottai
ஆக 02, 2025 04:11

அ.தி.மு.கவின் பரம எதிரியான திரு.ஸ்டாலினை ஓ.பி.எஸ் ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்த பின்பு அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தி.மு.க வின் இளைஞர் அணி, மகளிர் அணி போல் தி.மு.க வின் ஓர் அணிதான் என்பதை ஓ.பி.எஸ் பக்கம் உள்ள அ.தி.மு.க தொண்டன் மட்டுமல்ல நடுநிலையான அ.தி.மு.க தொண்டனும் நன்கு புரிந்து கொண்டு விட்டான். இனி தந்தையும், மகனும் சேர்ந்து என்ன நாடகம் ஆடினாலும் எடுபடாது. ஓ.பி.எஸ்சின் ஒவ்வொரு நகர்வும் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தவே என்பதை ஒவ்வொரு உண்மையான அ.தி.மு.க தொண்டனும் நன்கு அறிவான்.


Kadaparai Mani
ஆக 02, 2025 11:51

மிக சிறந்த கருத்து


சமீபத்திய செய்தி