உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கரூர் சம்பவத்தில் விஜயை கைது செய்ய திட்டம்? 7 கேள்விகளுடன் தகவல் சேகரித்த உளவுத்துறை!

கரூர் சம்பவத்தில் விஜயை கைது செய்ய திட்டம்? 7 கேள்விகளுடன் தகவல் சேகரித்த உளவுத்துறை!

சென்னை: கரூரில், 41 பேர் பலியான சம்பவத்தில் விஜயை கைது செய்தால், தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படுமா என தெரிந்துகொள்ள, ஏழு கேள்விகளுடன் உளவுத்துறையினர், 'சர்வே' எடுத்து வருகின்றனர்.த.வெ.க., தலைவர் விஜய், விழுப்புரம், மதுரையில் மாநாடு நடத்திய பின், 2026 சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, கடந்த செப்., 13ல், திருச்சியில் தொடங்கினார். அடுத்தாண்டு பிப்ரவரி வரை, சுற்றுப்பயண விபரம் அறிவிக்கப்பட்டது. ஆனால், செப்., 27ல், கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட, 41 பேர் உயிரிழந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0e780h77&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அக்கட்சி பொதுச்செயலர் உட்பட, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த விவகாரத்தில் விஜயை கைது செய்ய ஆளும் தரப்பு யோசித்து வருகிறது. விஜயை கைது செய்தால், அதுவே அவருக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்திவிடும் என, தி.மு.க., தரப்புக்கு சிலர் ஆலோசனை வழங்கி உள்ளனர். இதனால், இந்த விஷயத்தில் அவசரப்படாமல் மக்கள் கருத்தறிந்து செயல்படலாம் என, தி.மு.க., தரப்பு முடிவெடுத்துள்ளது. அதற்காக, மக்கள் கருத்தறியும் முயற்சியில் அரசு தரப்பை முடுக்கி விட்டுள்ளது, தி.மு.க., விஜயை கைது செய்தால், மக்களிடம் அது எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து உளவுத்துறையினர் கருத்தறிந்து சொல்ல, அரசு தரப்பில் முடுக்கி விட்டுள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுதும், சாலையோர வியாபாரிகள், விவசாயிகள், வணிகர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள், பெண்கள், கல்லுாரி மாணவ - மாணவியர், ஆட்டோ டிரைவர்கள், பஸ் பயணியர் உள்ளிட்டோரிடம், ஏழு கேள்விகளுடன், உளவுத்துறை போலீசார் கருத்து கேட்டு தகவல் சேகரித்துள்ளனர்.உளவுத்துறை போலீசார் கூறியதாவது: கரூர் சம்பவம் குறித்து, மக்களிடம், ஏழு கேள்விகள் கேட்கப்பட்டதில், கலவையான கருத்துகள் வந்துள்ளன. கரூர் பிரசார கூட்டத்துக்கு, போலீஸ் அதிகாரிகள் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று பலர் சொன்னாலும், இந்த விஷயத்தில், விஜயை அரசு கைது செய்திருக்க வேண்டும் என அழுத்தம் திருத்தமாக கூறி உள்ளனர். உளவுத்துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்பைப் போலவே, தனியார் ஏஜென்சிகளும் நடத்தி உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

உளவுத்துறையினரின் கேள்விகள்:

1. கரூரில் இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று, த.வெ.க.,வினர் ஆறுதல் சொல்லாதது அக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? 2. பிரசார கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது சரியா? 3. கரூரில் பிரசார கூட்டத்துக்கு வந்திருந்தோருக்கு, குடிக்க தண்ணீர் கூட ஏற்பாடு செய்யாதது சரியா? 4. இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அலை அலையாக மக்கள் சென்றது சரியானதா? 5. சம்பவத்துக்குப் பின் வீடியோ வெளியிட்ட நடிகர் விஜய், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலாக நாலு வார்த்தை பேசாதது சரியா? 6. நடந்த சம்பவத்துடன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்புபடுத்துவது சரியா?7. கரூரில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசு தரப்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. இந்த அணுகுமுறை சரியா? - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kulandai kannan
அக் 04, 2025 15:16

ஒரு கேள்வி கூட உருப்படியாக இல்லையே.


கனோஜ் ஆங்ரே
அக் 04, 2025 14:22

உளவுத் துறை சொன்னால் எல்லாம் கைது செய்ய மாட்டார்... முதலமைச்சர். அவர் ஆடுற ஆட்டமே வேற...? கிழக்கு திசையில் பந்து அடிப்பார்னு நீங்க எதிர்பார்த்தா... மேற்கு பக்கமா அடிப்பார்.... அவர் பிளானே வேறே...? விஜய கையே வைக்கமாட்டார்...? விஜய் கட்சிக்காரனுங்களே, விளக்கில் தானே சென்று வீழ்ந்து மாட்டுற விட்டில்பூச்சி மாதிரி.... இந்த அல்லக்கை, நொள்ளக்கைகள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு போறப்ப.... அப்ப, அந்த உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் “இவ்வளவு நடந்திருக்கு, அந்த கட்சி தலைவரை ஏன்யா இன்னும் கைது செய்யலை”..ன்னு கேக்கும்... அப்ப வைப்பார் ஆப்பு...? உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகு கைது செஞ்சே ஆகணும்...ங்ற கட்டாயத்தில் பேரில் கைது செய்வார்...? தமிழ்நாட்டு முதலமைச்சர என்னென்னு நினைச்சுட்டீங்க...? விஜய் கட்சிக்காரனுங்க, தாங்களே போய் சிக்கிப்பாங்க, இவர்கிட்ட...? நேத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில்... விஜய் கட்சி பொதுச்செயலாளர், “நிகழ்ச்சி ஒருங்கிணைப்பார் நான் இல்ல... நாமக்கல் மாவட்டச் செயலாளர்தான்”...னு தன்னோட கட்சி மாவட்டச் செயலாளரையே மாட்ட விட்டான் பாரு... “ அதுமாதிரி... விஜய் கட்சியின் 2, 3, 4 கட்ட தலைவர்களே, உச்ச நீதிமன்றத்தில் சென்று தாங்களே வாக்குமூலம் கொடுத்து விஜய்யை சிக்க வைப்பானுங்க...


Srprd
அக் 04, 2025 13:00

The Govt and its machinery are working for the people of the State or for the ruling party ?


ராமகிருஷ்ணன்
அக் 04, 2025 11:30

திமுகவின் எதிர் நடவடிக்கைகளுக்கு பாதகமான பதில்களை பெறும். MGR யை வளர்த்த மாதிரி டிவிக்கவை வளரச் செய்து திமுக தண்டனை பெறும்.


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
அக் 04, 2025 10:17

திமுக இதை செய்தால், ஒரு மத மக்களின் மொத்த வாக்கும், இவருடைடை மொத்த fans வாக்கும் விஜய் விற்கு எழுதில் சென்று விடும். திமுக தோல்வி அடைவது உறுதி. இது எங்களுக்கு மகிழ்ச்சி தான். கைது செய்யட்டும் செய்யட்டும் இதை தான் வலதுசாரிகள் விரும்புகிறோம்.


theruvasagan
அக் 04, 2025 10:10

எல்லா குற்றவாளிகளையும் கைது பண்ணுவதற்கு இந்த மாதிரி கருத்து கணிப்பு மக்களிடம் கேட்டு அதன் அடிப்படையில்தான் அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பார்களா. சட்டம் ஒழுங்கு நிர்வாகம் மாடல் அரசில் இப்படித்தான் செயல்படுமா.


Sanjay
அக் 04, 2025 06:20

Vijay arrest panna aadharavu pichukum.. apo dan confirm victory and next CM


Siva Balan
அக் 04, 2025 05:53

திமுகவிற்கு எதையெல்லாம் சாதகமாக மாற்றமுடியுமோ அதை மட்டும்தான் இந்த திமுக அரசு செய்யுமோ. கரூர் கொலையாக இருந்தாலும் சரி.


சமீபத்திய செய்தி