உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மூன்று மாவட்டங்களில் பிளாட்டினம் இருப்பு கண்டுபிடிப்பு; சுரங்க பணி குறித்து முடிவெடுக்க முடியாமல் அரசு திணறல்

மூன்று மாவட்டங்களில் பிளாட்டினம் இருப்பு கண்டுபிடிப்பு; சுரங்க பணி குறித்து முடிவெடுக்க முடியாமல் அரசு திணறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில், சில இடங்களில் பிளாட்டினம் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், சுரங்க பணிகளை அனுமதிப்பதில் முடிவெடுக்க முடியாமல், தமிழக அரசு திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், அதிக விலை மதிப்புள்ள கனிமங்கள் பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன. சேலம், நாமக்கல் மாவட்டங்களில், இரும்புத்தாது, பாக்சைட். மேக்னசைட் போன்ற கனிமங்களும், கோவையில் படிக சுண்ணாம்புக்கல், அரியலுார், திருச்சி மாவட்டங்களில் புதை வடிவ சுண்ணாம்புக்கல்; கடலுார் மாவட்டத்தில் பழுப்பு நிலக்கரி போன்றவையும் எடுக்கப்படுகின்றன. திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிடைக்க வாய்ப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உரிமைத்தொகை

தமிழக அரசின் கனிம வளத்துறை, இந்த கனிமங்களை சுரங்கம் அமைத்து எடுப்பதற்கான அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. எந்த இடத்தில், என்ன கனிமம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த பரவலான ஆய்வு பணிகளை, மத்திய அரசின் புவியியல் ஆய்வு நிறுவனம் மேற்கொள்கிறது. அரசு மற்றும் தனியார் நிலங்களில் கனிமங்களை எடுப்பதில், உரிமைத்தொகை அடிப்படையில், அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இதனால், கனிமங்கள் எடுப்பதற்கான அனுமதி வழங்குவதில் அரசு எப்போதும் ஆர்வம் காட்டும். இந்நிலையில், தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில், குறிப்பிட்ட சில இடங்களில், பிளாட்டினம் மற்றும் அது சார்ந்த கனிம படிவங்கள் இருப்பதை, மத்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. எந்தெந்த பகுதியில், எவ்வளவு ஆழத்தில் எவ்வளவு கனிமங்கள் கிடைக்கும் என்ற விபரங்களை, இந்நிறுவனம் டிஜிட்டல் முறையில் தொகுத்துள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கையை, தமிழக அரசுக்கு மத்திய புவியியல் ஆய்வு நிறுவனம், 2016ல் அளித்தது. இருப்பினும், பிளாட்டினம் எடுக்க, சுரங்கங்களை அனுமதிப்பதில், மாநில அரசு இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிப்பதில் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து, பிளாட்டினம் எடுக்க அனுமதிப்பது தொடர்பாக, தமிழக அரசு முடிவெடுக்க முடியாமல் திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, கனிம வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டங்களில், பிளாட்டினம் இருப்பதாக ஆய்வு அறிக்கைகள் வந்துள்ளன.

அவசிய தேவை

அதுமட்டுமல்லாது, ஆஸ்மியம், இரிடியம், ருத்தேனியம், ரோடியம், பிளாட்டினம், பல்லேடியம் போன்ற பிளாட்டினம் தொகுதி கனிமங்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை, மருத்துவம், மின்னணு தொழில்களில், பிளாட்டினம் அவசிய தேவையாக உள்ளது. அதுமட்டுமின்றி ஆபரணங்கள் தயாரிப்பதிலும், பிளாட்டினத்தின் தேவை அதிகமாக உள்ளது. அதிக விலை மதிப்பு மிக்க கனிமங்களை எடுக்க, சுரங்கப் பணிகளை அனுமதிப்பதில், தெளிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இது தொடர்பாக, நிர்வாக ரீதியான பணிகள் நடந்து வருகின்றன; விரைவில் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Mani . V
டிச 16, 2025 05:27

மீத்தேன் திட்டத்துக்கு திருட்டு திமுக ரகசியமாக கையெழுத்து போட்டது மாதிரி, இதற்கும் மக்கள் விரோத திமுக கையெழுத்து போடும். பின்னர், விளைநிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, அந்த மூன்று மாவட்டங்களை பாலைவனமாக்கும். பின்னர், அதை விரிவுபடுத்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாலைவனமாக்கும்.


ராமகிருஷ்ணன்
டிச 15, 2025 17:29

காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் பிளாட்டினம்த்தை இரண்டு குடும்பங்களும் சூரையாடி இருப்பார்கள். ஆண்டவன்தான் காப்பாற்றி இருக்கிறார்


Gajageswari
டிச 15, 2025 17:00

நிலத்திற்கு நல்ல விலை தற்போதைய வழிகாட்டி மதிப்பு மிக மிக குறைவாக உள்ளது கொடுத்தால் எதிர்ப்பை சமாளிக்கலாம்


பாபு
டிச 15, 2025 15:24

விரைவில் தெளிவான கொள்(ளை)கை முடிவு எடுக்கப்படும்.


Sridhar
டிச 15, 2025 14:35

இவனுக ஏற்கனவே திருட்டுதனமா எடுத்துருப்பானுங்க. திருட்டு கும்பல்னு சும்மா பேரு வச்சுருக்கானுங்க?


சிந்தனை
டிச 15, 2025 14:26

அப்படியா அப்படின்னா பரவாயில்லையே ஓட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் கூட தரலாம் சீக்கிரமா புடிங்க தமிழ்நாட்டை


பாரதி
டிச 15, 2025 14:21

ஏன் தாமதிக்கணும் 90% நம்ம தெலுங்கு திருடர் குடும்பத்துக்கு கொடுத்துட்டு மீதி 10 சதவீதத்தை வருமானம் வந்ததா அரசாங்க கணக்கில் எழுதிடலாம். ஜருரா வேலை ஆரம்பிங்க


Sun
டிச 15, 2025 12:06

மூன்று மாவட்டங்களில் பிளாட்டினம் சரி! அந்த 30% யார் தருவா? மத்திய அரசா? இல்லை சுரங்கம் ஏலம் எடுப்பவர்களா? நான் உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்பை சொன்னேன்! யாரும் தப்பா எடுத்துக்க வேண்டாம்!


ஜெகதீசன்
டிச 15, 2025 12:04

மாநில முன்னேற்றத்தை தடுக்க இங்கே பல அன்னிய கைக்கூலி அமைப்புகள் உள்ளதால், இதை எல்லாம் தடுக்கவே போராடுவாங்க.


Venugopal S
டிச 15, 2025 09:36

மத்திய பாஜக அரசு கைவசம் இருந்திருந்தால் ...


புதிய வீடியோ