உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவிலில் வாத்தியம் இசைக்க தடை கூடாது: காடேஸ்வரா

கோவிலில் வாத்தியம் இசைக்க தடை கூடாது: காடேஸ்வரா

திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ் வரா சுப்ரமணியம் அ றிக்கை: கோவை, வட மதுரையில் பழமைவாய்ந்த விருந்தீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பேனரில், கோவில் உட்பிரகார மண்டபத்தில் கொம்பு முரசு, உறுமி, சங்கு, பறை, ஜமாப், சிவ வாத்தியம் போன்றவை இசைக்க அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. ஹிந்துக்களின் பக்தி என்பது இசையோடு பின்னி பிணைந்தது. இசையால் இறைவனை எழுந்தருள செய்வது, உறங்க செய்வது போன்ற மரபுகள் இன்றளவும் தொடர்கின்றன. இவற்றை போற்றி வளர்க்க வேண்டிய அறநிலையத்துறை, அழித்து வருவது வேதனைக்குரியது. ஹிந்து கோவில்களின் பாரம்பரியங்களை ஒவ்வொன்றாக அழிக்க நினைக்கும் தமிழக அரசு, தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள எல்லா கோவில்களிலும், ஏற்கனவே உள்ள நடைமுறை பழக்கங்களை மாற்றக்கூடாது; இசை வாத்தியங்கள் முழங்க தடை செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ManiMurugan Murugan
செப் 15, 2025 23:49

ManiMurugan Murugan மங்கல இசை ஒவ்வொரு தொலைக்காட்சி சேவை யிலும் போடும் போது கோயிலில் போட க் கூடா து என்பது கண்டிக்கத்தக்கது இதுதான் தமிழக கலாச்சாரத்தை காக்கும் அழகா


Sivagiri
செப் 15, 2025 15:26

ஓவ்வொரு பூஜை நேரங்களிலும் , உட்ப்ரகாரத்தில் , நாதஸ்வரம் தவில் மட்டுமே காலகாலமாக இசைக்கப்படும் , சிவ வாத்தியங்களை கோடிமரத்திற்கு அப்பால் இருந்து வாசிப்பதுதான் மரபு , அதுவும் மஹாதீபாராதனை செய்யும் நிமிட நேரங்களில் மட்டுமே , மற்றபடி , நாதஸ்வர இசைதான் கோவில் பூஜைகளில் வாசிக்க வேண்டிய முறை . . . அதன் ராகம் நடை யை கேட்டே உள்ளே என்ன பூஜை நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் , எல்லா இசையையும் அழுத்தி வேறு இசைகளை இசைப்பது .சரியல்ல . .


Sun
செப் 15, 2025 13:45

இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை நீ இருக்கயிலே எனக்கு பெரும் சோதனை. என திருவிளையாடல் படத்திலே பாடல் வரிகள் இடம் பெறும். இசையும், தெய்வ வழிபாடும் என்றும் பிரிக்க முடியாதவை.


pakalavan
செப் 15, 2025 10:38

அமைதியாக இருக்கும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தும்போது கடவுளின் தெய்வீக தன்மையை உணர முடியும், அமைதியே தேவை


vivek
செப் 15, 2025 14:06

ஒத்து ஊதும்


Premanathan S
செப் 15, 2025 10:28

இந்தத் துறை இனிமேல் யாரும் கோவிலுக்குள் சாமி கும்பிடக்கூடாது என்றும் சொன்னாலும் சொல்லும்


சமூக நீதி மாடல்
செப் 15, 2025 08:31

அப்போ கூம்பு வடிவ ஒலிபெருக்கி...?


Suppan
செப் 15, 2025 14:46

மும்பையில் இந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கிளை அகற்றிவிட்டார்கள்.


சமீபத்திய செய்தி