உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பழனிசாமி வாக்குறுதிக்கு எதிர்ப்பு; தென் மாவட்டங்களில் கண்டன போஸ்டர்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பழனிசாமி வாக்குறுதிக்கு எதிர்ப்பு; தென் மாவட்டங்களில் கண்டன போஸ்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'வன்னியர் சமுதாயத்திற்கு, 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவேன்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளதற்கு, அக்கட்சியை சேர்ந்த தென் மாவட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது சட்டம் இயற்றப்பட்டது. அதற்கான அரசாணையும் வெளியானது. ஆனால், அதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, 'வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு, மத்திய அரசு அனுமதி தேவை இல்லை. மாநில அரசே தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, இட ஒதுக்கீடு வழங்கலாம்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 'அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வன்னியர் இட ஒதுக்கீட்டை மீண்டும் நிறைவேற்றி தருவேன்' என, விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் பழனிசாமி அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு, தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. மேலும், முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில், கண்டன போஸ்டர்கள், தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், வன்னியர் சமுதாய இடஒதுக்கீடு அறிவிப்பால், முக்குலத்தோர் சமுதாயத்தினர், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடவில்லை. அதனால், அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. வன்னியர் இட ஒதுக்கீடு அறிவிப்பால், முக்குலத்தோர் மட்டுமல்லாமல், சீர்மரபினர் பட்டியலில் இடம்பெற்ற மற்ற சமுதாயத்தினரும் பாதிக்கப்படுவர். அவர்களின் ஓட்டு வங்கியையும் அ.தி.மு.க., இழக்க நேரிடும். தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், 30 முதல் 45 தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

T.sthivinayagam
ஜூலை 26, 2025 11:42

பாட்டாளி மக்கள் கட்சி என்று கட்சி பெயர் வைத்து கொண்டு ஒரு சமூகத்துக்கு மட்டுமே இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகை சமுகநீதி அண்பு மணி ஜீ அவர்களே என்று மக்கள் கேட்கிறார்கள்


சுப்பு ஆறுமுகம்
ஜூலை 26, 2025 09:38

நீ இருபது % கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது.


Thiyagarajan S
ஜூலை 26, 2025 14:45

ஏண்டா நீ கள்ள ஓட்டு போடுவியா.... திராவிட பயலுங்க எல்லா பயலும் அயோக்கிய பயலா தான்டா இருக்கீங்க கள்ள ஓட்டு சக்கரவர்த்தி நீங்க எல்லாம்...


ஆரூர் ரங்
ஜூலை 26, 2025 09:24

தற்போதுள்ள அரசு ஊழியர்களிடம் சாதி, மதவாரி கணக்கெடுப்பு நடத்தி வெளியிட வேண்டும். அப்பதான் அதில் 14 சதவீதம் உள்ள சாதி பத்தரை சதவீதம் கேட்டு துன்புறுத்த மாட்டார்கள். அமைச்சரவையிலும் சாதிவாரி பிரதிநிதித்துவம் கடைபிடிக்க வேண்டும்..ஒரே சிறிய சாதியினர் ஒரே குடு‌ம்பம் 25 ஆண்டுகள் ஆள்வது சமூகநீதியல்ல.


peermohammednurullaraja peermohammednurullaraja
ஜூலை 26, 2025 09:03

இந்த வன்னியர் விஷயத்தை தொடர்ந்து காய் நகர்த்துகிறார்கள்.


அப்பாவி
ஜூலை 26, 2025 07:08

இது வெறும் வாக்குறுதி தானுங்க. ஜெயிச்சதுக்கப்புறம் யாரு நிறைவேத்தப் போறாங்க?


SUBBU,MADURAI
ஜூலை 26, 2025 06:55

எடப்பாடி பழனிச்சாமி போன தேர்தலில் தோற்றதே வன்னியர்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு அவர்களை தாஜா பண்ண மற்ற ஜாதி சமூகங்களை கண்டு கொள்ளாமல் அவைகளை ஒதுக்கிவிட்டு மொத்தமுள்ள 20% சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5% இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இதனால் தென் மாவட்ட மக்களின் கோபத்திற்கு ஆளானார் குறிப்பாக எங்கள் கள்ளர் சமூகத்தினரை உள்ளடக்கிய முக்குலத்தோரின் பெருவாரியான ஓட்டுக்களை இழந்தார் அப்படியிருந்தும் இந்த எடப்பாடி பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் அதே பழைய பல்லவியை பாட ஆரம்பித்து இருக்கிறார். இதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் வரும் தேர்தலில் அவர் எத்தனை பேருடன் கூட்டணி வைத்தாலும் மீண்டும் தோற்பது உறுதி.


பிரேம்ஜி
ஜூலை 26, 2025 09:32

உண்மைதான்! கடந்த தேர்தலில் இந்த இட ஒதுக்கீடு இதர மக்கள் மனதில் வெறுப்பையே ஏற்படுத்தியது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை