உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேசிய துக்க தினத்தில் அமைச்சர் தலைமையில் அரசு விழா பொதுமக்கள் அதிர்ச்சி

தேசிய துக்க தினத்தில் அமைச்சர் தலைமையில் அரசு விழா பொதுமக்கள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில், தேசிய துக்க தினத்திலும், சால்வை, கை தட்டலுடன் அரசு விழாக்களும், துணை முதல்வர் பிறந்த நாள் விழாவும், அமைச்சர் தலைமையில் நடந்ததால், தி.மு.க.,வினரே அதிருப்தியடைந்தனர்.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, ஒரு வாரம் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என, மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.ஆனால், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் கடத்துாரில், அரசு விழா நடந்தது. வாழை தோரணங்கள் கட்டப்பட்டு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி., ஈஸ்வரசாமி உள்ளிட்டோருக்கு, கைதட்டல்களுடன், சால்வை அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

மவுன அஞ்சலி

மேடையில், அமைதியாக விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டு, முடிவுற்ற திட்ட பணிகள் துவக்கம், ரேஷன் கடை திறப்பு, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா நடந்தது.மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்காத நிலையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மக்கள் தொடர்பு அலுவலர், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து, கொமரலிங்கம், சங்கராமநல்லுார் பேரூராட்சிகள் மற்றும் ஒன்றிய பகுதிகளில், 62.98 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகள் துவங்கி வைக்கும் விழாவும், 5.79 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.இதில், அமைச்சர் பேசுகையில், முன்னாள் பிரதமர் மறைவால், அமைதியாக விழா நடப்பதாக தெரிவித்ததோடு, தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கினார். முன்னதாக, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி மட்டும் செலுத்தப்பட்டது. உடுமலை நகராட்சி, தாகூர் மாளிகையில், மாலை, 5:00 மணிக்கு, 3 மாதமாக செயல்பட்டு வரும், மாவட்ட அரசு இசைப்பள்ளி துவக்க விழாவும், மாவட்ட அளவில், கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவும், மார்கழி கலை இலக்கிய விழா நடந்தது.

அதிருப்தி

தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டு, பா.ஜ.,- அ.தி.மு.க., கட்சிகளே அறிவித்திருந்த போராட்டங்களை ரத்து செய்த நிலையில், காங்., உடன் கூட்டணி அமைத்து, 10 ஆண்டுகள், மன்மோகன்சிங் அமைச்சரவையில் அமைச்சர் பதவிகளை பெற்று, அனுபவித்து வந்த தி.மு.க., அரசு, அமைச்சர் தலைமையில் விழாக்கள் நடத்தியது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேடை அலங்காரம்!

கடத்துாரில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழாவும், அதே மேடையில் நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு, வேஷ்டி, சேலைகளை அமைச்சர் வழங்கினார்.விழா மேடையில், மேற்பகுதியை அலங்கரிக்க, தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு, முதியோர், ஓய்வூதிய திட்டம் பெறுவோருக்கு, 2021-22ம் ஆண்டு வழங்கிய சேலை, 2023ம் ஆண்டு, பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கிய சேலைகள் பயன்படுத்தி, அலங்கரிக்கப்பட்டிருந்தது. அரசு, மக்களுக்கு வழங்கிய சேலை, அரசு விழாவில் மேடையை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழ்வேள்
டிச 28, 2024 12:25

சாவை கொட்டடித்து , கூத்தாடி பிரியாணி தின்று , குடல் வெடிக்க குடித்து மகிழ்வதை பண்பாடாகிய திருட்டு திராவிடம் , அப்படித்தான் இருக்கும்


lana
டிச 28, 2024 10:12

ஏம்பா அ(ட)ப்பாவி பிறகு என்ன....க்கு murasoli மாறன் இறந்த போது பக்கத்து தெருவில் அதிமுக அவர்கள் அம்மா ரிலீஸ் ஐ கொண்டாட்டம் க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உங்கள் வீட்டில் ஏதாவது துக்கம் ஏற்பட்டால் நீங்கள் வேண்டும் ஆனால் சாப்பாடு இல்லாமல் குத்தாட்டம் மட்டும் போடுங்க. மற்றவர்கள் உணர்வுகளை மதிக்க பழகுங்கள்.


Anonymous
டிச 28, 2024 09:09

இந்த லட்சணத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சி வேற, தமிழ்நாட்டில் காங்கிரஸ் தூங்குகிறது போலும்


அப்பாவி
டிச 28, 2024 07:53

ஏன் துக்கம் அனுஷ்டிக்கப் படுவதால் எவனாச்சும் சோறு திங்காம இருக்கப் போறானா?


veera
டிச 28, 2024 12:34

உனக்கு எவன் செத்தாலும் என்ன கவலை..ஓசி பிரியாணியும் , டாஸ்மாக் இருந்தா போதும்... உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கா அறிவிலி அப்புசாமி