உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராமதாஸ் - அன்புமணி தைலாபுரத்தில் திடீர் சந்திப்பு

ராமதாஸ் - அன்புமணி தைலாபுரத்தில் திடீர் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்று குடும்பத்துடன் சென்ற பா.ம.க., தலைவர் அன்புமணி, தந்தை ராமதாசுடன் இணைந்து, தாய் சரஸ்வதியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.பா.ம.க.,வில் அப்பா, மகன் இடையிலான மோதல் கடந்த ஏழரை மாதங்களாக நீடித்து வருகிறது. மகன் அன்புமணி மீது, ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.'தாயின் மீது தண்ணீர் பாட்டிலை அன்புமணி வீசினார்' என்று, ராமதாஸ் சுமத்திய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பானது.சமீபத்தில் ராமதாஸ் தன் 60வது திருமண நாளை கொண்டாடினார். அன்புமணி சென்று வாழ்த்தவில்லை. தாய் சரஸ்வதிக்கு மட்டும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக, ராமதாஸ் தன் வருத்தத்தை பதிவிட்டார்.இந்நிலையில், ராமதாசின் மனைவி சரஸ்வதி நேற்று தன் பிறந்த நாளை கொண்டாடினார். அதை முன்னிட்டு மனைவி சவுமியா, மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகளுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்ற அன்புமணி, கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது, ராமதாசும் உடன் இருந்தார்.கடந்த மே 11ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு பின், ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக சந்தித்துள்ளனர். இது, பா.ம.க.,வினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sankaranarayanan
ஆக 16, 2025 21:32

பா.ம.க.,வில் அப்பா, மகன் இடையிலான மோதல் கடந்த ஏழரை மாதங்களாக நீடித்து வருகிறது. இவர்களை ப்பிடித்திருந்த ஏழரை சனி விலகிவிட்டாற்போலிருக்கிறது இது சமாதானம் சந்தோலிஷம்தான்


Anantharaman Srinivasan
ஆக 16, 2025 21:23

அப்பா மகன் இருவரும் திருட்டு முழி முழிக்கின்றனர்.


தமிழ்வேள்
ஆக 16, 2025 20:59

அப்பன் மகன் இருவரையும் நம்பி பின்னால் திரியும் பாமக தொண்டன்தான் முதல் கேணையன்... இந்த டிராமாவைப் பார்த்தும் கூட திருந்த மாட்டார்கள்...குடிசை கொளுத்துவது கள்ள சாராயம் வடிப்பது மரம் வெட்டுவது பஸ் ரயில் மீது கல்லை விட்டு எறிவது... என்று இருந்தால் இன்னும் நான்கு தலைமுறைகளுக்கு பிறகும் இட ஒதுக்கீடு கேட்டு போராட வேண்டிய பரிதாப நிலைதான் இருக்கும்.. திருந்துங்கப்பா...


Vasan
ஆக 16, 2025 15:32

But why 4 cakes ? Are there 4 factions in the family, while we thought only 2?


பாரதன்
ஆக 16, 2025 14:47

என்று தான் போகுமோ பிறந்தநாள் கேக் வெட்டும் கலாச்சாரம். நமக்கு தேவையா.


Indhuindian
ஆக 16, 2025 14:04

அப்பாவும் புள்ளையும் அவங்க கட்சி ஆசாமிகளை கோமாளிகளாக்கிகிட்டு இருக்காங்க


Bharathi
ஆக 16, 2025 13:28

கேக் வெட்டறது, அதுவும் வயசான அம்மாவுக்கு தமிழ் கலாச்சாரமா மருத்துவரே? ஆனா மரத்துக்கு பதில் கேக் வெட்றது பரவாயில்லை.


Ramesh Sargam
ஆக 16, 2025 12:16

நான்தான் அன்றைக்கே சொன்னேனே ராமதாஸ் - அன்புமணி இடையே ஒரு பிரச்சினையும் இல்லை. பிரச்சினை இருப்பதுபோல நாடகம் ஆடுகிறார்கள் என்று.


Vasan
ஆக 16, 2025 12:55

Exactly. When will the 2 Doctors stop their acting? They are just buying time, as they are unable to decide to which party they should form alliance with. Thats why they are acting like in a drama as though they are split. Now this has give them an opportunity to simultaneously negotiate with 2 opponents alliance, DMK and ADMK. They are thinking TN people are fools.


SP
ஆக 16, 2025 10:36

ராமதாஸ் அவர்கள் திமுகவின் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்காமல் அன்புமணி அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்


Balaa
ஆக 16, 2025 09:57

ஓ அப்பாவே சொல்லிட்டாரா. அப்ப நான் அவருக்கு செயல் தலைவரா ஆயிடறேன்.


புதிய வீடியோ