உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாடகை ஒப்பந்தங்களுக்கு இனி 200 ரூபாய் முத்திரை தாள்

வாடகை ஒப்பந்தங்களுக்கு இனி 200 ரூபாய் முத்திரை தாள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வீடு, கடை வாடகை உள்ளிட்ட சாதாரண ஒப்பந்த ஆவணங்களுக்கு, 200 ரூபாய் மதிப்புள்ள முத்திரை தாள்களை பயன்படுத்த, பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.சொத்துக்களை வாங்கும்போது அதன் மதிப்பில், 7 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த மதிப்பு அடிப்படையில், முத்திரை தாள்களை பயன்படுத்த வேண்டும் அல்லது 'இ - ஸ்டாம்பிங்' முறையில் உரிய தொகையை செலுத்த வேண்டும்.வீடு வாடகை, நிலம் குத்தகை ஒப்பந்தங்களை பதிவு செய்வதில்லை. உதாரணமாக, வீட்டை வாடகைக்கு விடுவோர், 11 மாதம் என்ற காலவரையறையில் ஒப்பந்தம் மேற்கொள்கின்றனர். ஆண்டுதோறும் இந்த ஒப்பந்தங்களை புதுப்பித்துக் கொள்கின்றனர். இதை பலரும், 20 ரூபாய் முத்திரை தாளை பயன்படுத்தியே எழுதுகின்றனர்.இந்நிலையில், வாடகை ஒப்பந்தம் உள்ளிட்ட பணிகளுக்கு, 20 ரூபாய், 50 ரூபாய் போன்ற குறைந்த மதிப்பிலான பத்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த, அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சாதாரண ஒப்பந்தங்களுக்காக பயன்படுத்தப்படும், 20 ரூபாய், 50 ரூபாய் முத்திரை தாள்கள் கிடைப்பதில்லை என புகார் கூறப்படுகிறது. அதனால், குத்தகை ஒப்பந்தம், பிரமாண பத்திரம் போன்ற ஆவணங்களுக்கான முத்திரை தீர்வை, 20 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே பொது மக்கள் இந்த ஒப்பந்தங்களுக்கான முத்திரை தாள்களை பயன்படுத்த வேண்டும்.பதிவு செய்யாமல் வைத்துக் கொள்வதாக இருந்தாலும், இந்த மதிப்பு முத்திரை தாள்களையே பயன்படுத்த வேண்டும். 200 ரூபாய் முத்திரை தாள் பயன்பாடு குறித்து, பொது மக்களுக்கு சார் - பதிவாளர் வாயிலாக அறிவுறுத்தல்கள் வழங்கி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Bhaskaran
செப் 25, 2024 14:45

பத்து மடங்கு கட்டணம் அதிகம்


Gunasekaran V
செப் 20, 2024 18:57

இது-இந்திய மக்களைச் சீரழித்து வரும் சீரங்கத்துப் பாட்டியின் நடவடிக்கையை விடக் கொடுமையானதாக இருக்கிறது.


shyamnats
செப் 20, 2024 16:50

எங்களுக்கு இதுவரைக்கும் 50% , 100% னு ஏத்தி ஏத்தி போரடிச்சிட்டு, அதனால - Rs 20 லருந்து 200 ன்னா 1000 சதவிகிதம் . நல்லாருக்கில்ல. வாக்களித்தவங்க எல்லாம் அனுபவியுங்க.


Rajendran Veeranan
செப் 20, 2024 10:41

ஜனங்கள்கிட்ட கொள்ளையடிக்க டெக்கினிங்க கண்டு பிடிக்க திமுக விட்ட யாரும் இல்ல


Dharmavaan
செப் 19, 2024 12:44

இது சொத்தை வாங்கி விற்கும் செயல்பாடு இல்லை குத்தகை அவ்வளவே, இதற்கு 7%/2% பொருந்துமா


Dharmavaan
செப் 19, 2024 12:42

கட்டிட வாடகை கடை வாடகை இந்த சட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்த சட்டம் விவசாய கூலிகளை பாதுகாக்க வந்தது .எனவேதான் லேண்ட் லார்ட் /டெனண்ட் என்பது விவசாய நிலம்களுக்கு மட்டுமே பொருந்தும்


சூரியா
செப் 19, 2024 12:09

இது சட்டமா அல்லது அறிவுறுத்தல் மட்டுமா? ₹200/ பத்திரத்தாளை, அதிகப்படி விலையில்லாமல் விற்க பதிவுத்துறை க்கு யார் அறிவுரை கூறுவார்கள்?


vijai
செப் 19, 2024 11:00

எப்படி எல்லாம் கொள்ள அடிக்கணும் தெரிஞ்சு கொள்ள அடிக்கிறாங்க


Paramasivam Ravindran
செப் 19, 2024 10:36

மக்களிடம் எப்படி எல்லாம் பணம் வசூலிக்கலாம் என்று தெரிந்து ஆட்சி செய்கிறார்கள்.


A Viswanathan
செப் 19, 2024 08:44

இது அதிகம்.இந்த அரசு எல்லாவிதத்திலும் மக்களை வாட்டுகிறது. மக்களின் அரசு என்று சொல்லி மக்களை பிழிகிறது


முக்கிய வீடியோ