உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இந்தியாவில் முதலீட்டு திட்டங்களுக்காக 10 ஆண்டில் ரூ.672 லட்சம் கோடி

இந்தியாவில் முதலீட்டு திட்டங்களுக்காக 10 ஆண்டில் ரூ.672 லட்சம் கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை, இந்தியாவில் முதலீட்டு திட்டங்களுக்காக 1,176 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக 'மோதிலால் ஓஸ்வால்' நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பாதிக்கும் அதிகமான முதலீடு, அதாவது 672 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் இடம்பெற்ற விபரம் வருமாறு:முதலீட்டு திட்டங்களுக்காக செலவிடப்படும் தொகை அதிகரித்து வருவதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை, இந்தியாவில் முதலீட்டு திட்டங்களுக்காக 1,176 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 672 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மொத்த தொகையில் பாதிக்கும் அதிகம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதேபோல மேலும் 672 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புள்ளது. முதலீடுக்கும் ஜி.டி.பி., விகிதத்துக்கும் இடையிலான விகிதம், கடந்த 2011ம் ஆண்டு முதல் தேக்கமடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டு வருகிறது. கொரோனாவுக்கு பின் மீண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அரசின் கூடுதல் செலவு ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயரும் சந்தைகள்

இந்திய பங்குச் சந்தைகள், கடந்த 33 ஆண்டு களில் 26 ஆண்டுகள் ஏற்றத்துடனே நிறைவடைந்துள்ளன. இது நம் நாட்டு சந்தைகளின் மீள்தன்மையை உணர்த்துகிறது. இடையிடையே ஏற்படும் 10 முதல் 20 சதவீதம் வரையிலான சரிவு, ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக ஆகிவிட்டது. இதனை தவிர்த்து, நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது, பங்குச் சந்தைகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்தே வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Yasararafath
நவ 25, 2024 15:46

இந்திய முதலீடு முக்கியம்


இறைவி
நவ 25, 2024 14:51

அன்னிக்கு ஒரு ரூபாய் இன்றைக்கு நூற்று ஐம்பது ரூபாய். சரி அன்னிக்கு சம்பளமும் குறைவு. விலைவாசியும் குறைவு. ஒப்பீடு செய்தால் எல்லாவற்றையும் ஒப்பீடு செய்ய வேண்டும். மோடியின் ஆட்சி காலத்தில் எல்லா துறைகளிலும் கிடைத்துள்ள அபரிமிதமான வளர்ச்சியையும் உலகளாவிய பாராட்டுதல்களையும் உபிகளால் ஜீரணிக்க முடியாத காரணத்தினால் இப்படியெல்லாம் கருத்து போட்டுத்தான் எரிச்சலை ஆற்றிக்கொள்ள வேண்டும். ஜெலுசில் குடிக்கவும்.


அசோகன்
நவ 25, 2024 11:42

ஆசாதாரண வளர்ச்சியை இந்திய மோடியால் அடைந்திருக்கிறது.. 65 ஆண்டுகளாக வெறும் 500 லட்சம் கோடி மட்டுமே.... காங்கிரஸ் எந்த அளவுக்கு இந்திய வளர்ச்சியை தடுத்து வந்துள்ளது என புரிந்துகொள்ளலாம்


அப்பாவி
நவ 25, 2024 10:27

அன்னிக்கி ஒரு ரூபாயின் மதிப்பு இன்னிக்கி 150 ரூவா. சும்மா உதவாத புள்ளி விவரங்களை அள்ளி உடாதீங்க.


சமீபத்திய செய்தி