உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சனாதன விவகாரம்: உதயநிதி மீது இனி எந்த வழக்கும் தொடரக்கூடாது: உச்சநீதிமன்றம் தடை

சனாதன விவகாரம்: உதயநிதி மீது இனி எந்த வழக்கும் தொடரக்கூடாது: உச்சநீதிமன்றம் தடை

சனாதனம் தொடர்பாக உதயநிதி மீது, இனி எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது என, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.2023ல் சனாதன தர்மம் தொடர்பாக, துணை முதல்வர் உதயநிதி பேசியதற்கு எதிராக, மஹாராஷ்டிரா, பீஹார், கர்நாடகா, டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணைகளுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து உதயநிதிக்கு விலக்கு அளித்தது.இந்நிலையில், உதயநிதியின் மனு, உச்சநீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, உதயநிதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர், 'ஒரே விவகாரம் தொடர்பாகவே பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனவே, அனைத்தையும் ஒன்றாக்கி விசாரிக்க வேண்டும். இல்லையெனில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்; அவ்வாறு செய்ய இயலாது என்றால், கர்நாடகாவிற்கு மாற்ற வேண்டும். இதற்கு முன், நுபுர் சர்மா, அர்னால் கோஸ்வாமி போன்றோரின் வழக்குகள் மாற்றப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என, வாதிட்டனர்.உடன் குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''சனாதன தர்மத்தை கொரோனா போல ஒழிக்க வேண்டும் என, துணை முதல்வராக உள்ள உதயநிதி பேசியுள்ளார். வேறு ஏதாவது ஒரு மாநிலத்தின் முதல்வர், குறிப்பிட்ட மதமும் இதுபோல அழிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும்,'' என்றார்.இதையடுத்து நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில், நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை; அப்படி தெரிவித்தால், அது விசாரணை நீதிமன்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்' என்றனர். அத்துடன், வழக்கின் விசாரணையை ஏப்ரல், 28க்கு ஒத்திவைத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில் இப்போது, நாங்கள் கூடுதலாக எதுவும் சொல்லப்போவதில்லை. மேலும் தகுதியின் அடிப்படையிலும், தற்போது விசாரணை செய்யவில்லை. உதயநிதியின் மனுவுக்கு எதிர்மனுதாரர்கள் அனைவரும், அடுத்த ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும். அதற்கு அடுத்த, 15 நாட்களில் வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். சனாதன விவகாரம் தொடர்பாக, உதயநிதிக்கு எதிராக, இனிமேல் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது. அடுத்த விசாரணை நடைபெறும் வரை, இந்த விவகாரத்தில் முன்னர் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். -டில்லி சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பேசும் தமிழன்
மார் 07, 2025 22:17

அப்படியே.... இந்து மதத்தை பற்றி..... உங்கள் இஷ்டம் போல.... வாய்க்கு வந்தபடி பேசலாம்..... யாரும் கேள்வி கேட்க கூடாது என்பதையும் கூறி விட்டால் நன்றாக இருக்கும் !!!


pmsamy
மார் 07, 2025 15:13

பாஜகவுக்கு நல்ல அடி கிடைச்சிருக்கு உச்ச நீதிமன்றம் வழியாக


Balasubramanian
மார் 07, 2025 14:12

இப்படியே தவறு செய்தவனை மன்னித்து கேஸை இழுத்தடித்து கொண்டே இருங்கள்! சிசுபாலனை கிருஷ்ணர் பொறுத்தவரை பொறுத்து கடைசியில் சக்ராயுததை எடுத்து தண்டித்தது போல் மக்கள் தேர்தலில் தண்டித்து விட போகிறார்கள்


Rajasekar Jayaraman
மார் 07, 2025 12:18

நீதிமன்றம் நீதிமன்றமாக செயல்பட வேண்டும் கட்சி ஆபீஸ் ஆக இருக்கக் கூடாது


பாரத புதல்வன்
மார் 07, 2025 11:54

ஆட்டோ சங்கர் பரம்பரை


theruvasagan
மார் 07, 2025 10:49

அடுத்தபடியா வழக்கு போட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அபாரதம் கட்ட வேண்டும்னு கூட சொல்லுவாங்களோ.


ஆரூர் ரங்
மார் 07, 2025 09:33

முஸ்லிம் நாடான மலேசியாவில் முருகனின் வேல் வேல் முழக்கத்தை கிண்டலடித்த நபர்கள் மீது அரசே நடவடிக்கை எடுக்கிறது. இங்கு தமிழகத்தில் ஹிந்து மதத்தையே இழிவாகப் பேசினால் கூட ஆள்பவர்கள் கண்டுகொள்வதில்லை. உள்ளுக்குள் மகிழ்கிறார்கள்.


ஆரூர் ரங்
மார் 07, 2025 09:27

வழக்கு முடியும் வரை இந்த நீதிபதிகள் எந்த ஆலயத்துக்குள்ளும் செல்ல வேண்டாம். அது வழக்கையும் மதத்தையும் பாதிக்கலாம். ஒரு மதவிரோதியிடம் இவ்வளவு மென்மை காட்டுபவர்கள் இறைவனிடம் கருணையை எதிர்பார்க்கக்கூடாது.


orange தமிழன்
மார் 07, 2025 07:41

சரியாக சொன்னீர்கள்.......திரு சசிகுமார் யாதவ்


saravan
மார் 07, 2025 07:29

ஆப்பு உறுதி மாப்ளே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை