வாசகர்கள் கருத்துகள் ( 1 )
RSS பயிற்சி பின்புலம் உள்ளவர்கள் தவிர மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது எளிதல்ல. இன்றுவரை திராவிட கட்சிகளிலும் முக்கிய மாவட்ட செயலாளர் பதவிக்கு SC, ST தேர்வாவது கடினம்.
பா.ஜ., மாநில தலைவர் பதவிகளில், 20 சதவீதம் பட்டியலினத்தவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அக்கட்சி மேலிடம் துவக்கி உள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பா.ஜ., உட்கட்சி தேர்தல், கடந்த நவ., 11ல் துவங்கி நடந்து வருகிறது. கிளை கமிட்டி, மண்டலம், மாவட்ட தலைவர்கள் தேர்தல் முடிந்த நிலையில், இன்னும் சில நாட்களில் மாநில தலைவர் தேர்தல் நடக்க உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=31wi1u3b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இட ஒதுக்கீடு
பா.ஜ., கட்சி விதிகளின்படி, நிர்வாகிகள் நியமனத்தில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், பல இடங்களில் தகுதியான நபர்கள் இல்லை எனக்கூறி, இந்த இடஒதுக்கீட்டை பின்பற்றாத நிலை இருந்து வருகிறது.மாநில தலைவர்களை தேர்வு செய்ய, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குழுவை பா.ஜ., மேலிடம் அமைத்துள்ளது. மாநில தலைவரை சுமுகமாக தேர்வு செய்ய, மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளின் கருத்துகளை, அக்குழு நேரில் கேட்டறிந்து வருகிறது.தேசிய, மாநில நிர்வாகிகளில், பட்டியலினத்தவர்கள் நிர்வாகிகளாக இருந்தாலும், முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட மாவட்ட, மாநில தலைவர்களில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.நடந்து முடிந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில், அம்பேத்கர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையானது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதை பெரும் பிரச்னையாக்கின. கடந்த 2000ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பட்டியலினத்தைச் சேர்ந்த பங்காரு லட்சுமணன், பா.ஜ., தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.அதை பின்பற்றி, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்க, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை, பா.ஜ., தேசிய தலைவராக நியமிப்பது குறித்து, பிரதமர் மோடி, அமித் ஷா, தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி உள்ளனர். ஆனால், தேசிய தலைவராக தேர்வு செய்யும் அளவுக்கு, செல்வாக்கான பட்டியலினத்தைச் சேர்ந்த தலைவர்கள் பா.ஜ.,வில் இல்லை என்று கூறப்படுகிறது.அதனால், 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்கள் என 36 மாநில தலைவர்களில், 20 சதவீதம் அதாவது ஏழு அல்லது எட்டு மாநிலங்களுக்கு பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை மாநில தலைவர்களாக நியமிக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். பரிசீலிக்கப்படும்
மாநில தலைவர் பதவிக்கு பொருத்தமான பட்டியலின நிர்வாகிகளை அடையாளம் காணுமாறு, மாநில தலைவரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினருக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநில தலைவராக, பட்டியலினத்தைச் சேர்ந்தவரை நியமிக்கும் திட்டம் இருப்பதாகவும், இதற்காக அமைச்சர் சாய் சரவணகுமார் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, பா.ஜ., தலைவர் ஒருவர் கூறுகையில், 'இந்திய அரசியல் சூழல் மாறி வருகிறது. பா.ஜ.,வின் ஓட்டு வங்கியாக உள்ள சமூகங்களின் மக்கள்தொகை குறைந்து வருகிறது.'பட்டியலின, பழங்குடியினரின் ஆதரவின்றி, இனி தேர்தல்களில் வெல்ல முடியாத நிலை வந்து கொண்டிருக்கிறது. அயோத்தி லோக்சபா தொகுதியில் பட்டியலினத்தவரை வேட்பாளராக நிறுத்தி, பா.ஜ.,வை சமாஜ்வாதி கட்சி தோற்கடித்தது.'இதை உணர்ந்து தான், கட்சியில் பட்டியல் இனத்தவர்களை முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் நியமிக்க, பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். எனவே, இந்த முறை மாநில தலைவர்களாக பட்டியலினத்தவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்' என்றார். - நமது நிருபர் -
RSS பயிற்சி பின்புலம் உள்ளவர்கள் தவிர மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது எளிதல்ல. இன்றுவரை திராவிட கட்சிகளிலும் முக்கிய மாவட்ட செயலாளர் பதவிக்கு SC, ST தேர்வாவது கடினம்.