உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / த.வெ.க., கூட்டணியில் 60 சீட்; அ.ம.மு.க., நடத்திய ரகசிய பேச்சு

த.வெ.க., கூட்டணியில் 60 சீட்; அ.ம.மு.க., நடத்திய ரகசிய பேச்சு

சென்னை : த.வெ.க., கூட்டணியில், 60 'சீட்' கேட்டு, முதல் கட்சியாக, அ.ம.மு.க., பேச்சை துவங்கியுள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு போட்டியாக, நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகமும், தேர்தல் பணிகளை துவங்கி விட்டது. தன் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், வாரந்தோறும் சனிக்கிழமை பிரசாரத்தை துவங்கியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4q497ok0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையில், சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கான பேச்சு நடந்து வருகிறது. கட்சியின் கொள்கை விளக்க மாநாட்டில் அறிவித்தபடி, கூட்டணியில் இணையும் கட்சிக்கு, ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என, வாக்குறுதி வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, த.வெ.க., கூட்டணியில் சேர முதல் ஆளாக தினகரன் முன்வந்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று இருந்த அ.ம.மு.க.,வை, தற்போது அ.தி.மு.க., தலைமையில் பா.ஜ., அமைத்திருக்கும் கூட்டணியிலும் வைத்துக் கொள்வர் என, அக்கட்சியின் பொதுச்செயலர் தினகரன் எதிர்பார்த்தார். ஆனால், அதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விஷயத்தில் பா.ஜ., தரப்பிலும் முடிவெடுக்காமல் காலம் கடத்தியதால், தே.ஜ., கூட்டணியில் இருந்து, விலகுவதாக அறிவித்தார் தினகரன். இந்நிலையில், வரும் ச ட்டசபைத் தேர்தலுக்கு விஜயுடன் கூட்டணி சேர தினகரன் பேச்சு நடத்தி வருகிறார். அ.ம.மு.க., தரப்பில், 60 தொகுதிகள் கேட்கப்பட்டதுடன், தேர்தல் செலவு குறித்தும் பேசப்பட்டுள்ளது. த.வெ.க., தரப்பில், தென் மாவட்டங்களில், 25 தொகுதிகள் வரை தருவதாக உறுதியளிக்கப்பட்டு உள்ளது. இரு தரப்பிலான பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதும், விஜய் - தினகரன் சந்திப்பு நடக்கும் என, த.வெ.க., தரப்பில் கூறப்ப டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Haja Kuthubdeen
செப் 18, 2025 20:29

விஜய் இந்த ஆளை சேர்ப்பதற்கு முன்பு இவரது வரலாறை ஆராயனும். 2சீட்டுக்கு கூட ஒர்த் இல்லை.இவர் கூட்டணி அமைத்த எந்த கூட்டணியும் உருப்பட்டதும் இல்லை...ஒபிஸ்..டிடிவி இருவரையும் சேர்க்காமல் அதற்கு தணித்தே களம் காணலாம்.விஜய் ஓட்டுதான் அவர்களுக்கு போகுமே தவிற இவர்களால் ஒத்த ஓட்டு லாபமே இல்லை.


Sudha
செப் 18, 2025 19:52

இன்றைய சிறந்த சிரிப்பு


Vijay D Ratnam
செப் 18, 2025 16:29

விஜய் கடை தொறந்து நாளாச்சு. இன்னும் யாரும் வந்தபாடில்லை. அவரும் சிறுத்தை வரும், கான்.க்ராஸ் வரும், உண்டியல்ஸ் வரும்னு எதிர்பார்த்தார். யாரும் வரல. இந்த நிலை நீடித்தால் குக்கர்காரனுக்கு 60 சீட் கொடுக்கலாம். காசு என்ன கம்பெனி ஜெயிக்க கொடுக்கும்.


என்றும் இந்தியன்
செப் 18, 2025 16:28

வேடிக்கையிலும் வேடிக்கையான கருத்து


M Ramachandran
செப் 18, 2025 15:32

அடாவடி பழனி ஆட்டைய்ய போட்ட ஆ தி மு கா விற்கு க்கு க்கா வா விட கூட சீட்ட வெல்லுங்க அது தன் பழனிக்கு சங்கு ஊதி ஏற்றி 4 பேர் சுமந்து செல்ல தோதக இருக்கும். பீ ஜெ பி க்கும் மூக்கடைய்ய பட்டது போல் இருக்கும்.


kannan
செப் 18, 2025 14:22

மஹாராஸ்ராவில் துணை முதல்வர் மேல் பிரதமர் சொல்லாத குற்றச்சாட்டா? வாசிங் பிசின் எல்லா மாநிலங்களிலும் கிடைக்குமே.


SP
செப் 18, 2025 14:12

டிடிவி தினகரன் அவர்கள் தவறான திசையில் செல்வதாக தெரிகிறது


S.L.Narasimman
செப் 18, 2025 12:29

டுவெண்ட்டி ருபீசு டோக்கனுக்கு டெபாசிட் கிடைத்தால் என்னா போனா என்ன. பெட்டிகள் கிடைத்தால் போதும். திகாருக்கு மறுபடியும் போக அதிக வாய்ப்பு உள்ளது.


pakalavan
செப் 18, 2025 12:22

ஓ பி எஸ் ,விஜய், தினகரன் சேர்ந்தால், தென்மாவட்டங்களில் அதிமுக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது, மேற்குமண்டலத்தில் செந்தில் பாலாஜி என்ற ஒருமனிதன் இருக்கும்வரை அதிமுக ஜெயிக்காது, சிறையில் இருந்துக்கொண்டே கரூர், கோயம்பத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், என்று கொங்கு மண்டலத்தை வெற்றிபெற்றுவிட்டார், தஞ்சை திருச்சி விவசாயிகள் - பழனிச்சாமி வந்தால் காலனியால் அடிக்க தயாராக உள்ளனர், வடக்கு மண்டலம் திமுகவின் கோட்டை, எனவே பத்துதோல்வி பழனிச்சாமி கொடநாடு கேசுல மாட்டி இனிமேலு திகர்தான்,


chinnamanibalan
செப் 18, 2025 11:59

தமிழக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, ஊழலில் ஊறித் திளைத்தவர்கள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து தவெக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றால், தமிழகத்தில் ஊழலற்ற நல்லாட்சியை நடிகர் விஜய் எப்படி வழங்குவார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.