உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நீட் தேர்வு விவகாரத்தில் செலக்ட்டிவ் அம்னீஷியா: உதயகுமார் கிண்டல்

நீட் தேர்வு விவகாரத்தில் செலக்ட்டிவ் அம்னீஷியா: உதயகுமார் கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : ''நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் 'செலக்ட்டிவ் அம்னீஷியா'வாக உள்ளார்கள்,'' என, மதுரையில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது: தமிழக சட்டமன்றம் இன்று ஸ்டாலின் மன்றமாகி விட்டது. முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட, தலைவர்கள் பேசிய சட்டமன்றத்தில் இன்றைய நிலை என்ன. ஜனநாயகம் எங்கே போனது.போலீசாரே படு கொலை செய்யப் படுகிறார்கள். அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டாமா. இன்றைக்கு கருத்து சுதந்திரத்திற்கு மிகப்பெரிய பேராபத்து வந்திருக்கிறது. தீர்மானம் கொடுத்து 10 நாட்களாக போராடுகிறோமே. அது குறித்து பேச வேண்டாமா.தி.மு.க., நாடகங்களுக்கு மேடையாக சட்டசபை பயன்படுகிறது. இன்றைக்கு முதல்வரும், துணை முதல்வரும் நீட் தேர்வு விவகாரத்தில் 'செலக்ட்டிவ் அம்னீஷியா'வால் பாதிக்கப்பட்டிருப்பார்களோ என மக்கள் கருதுகின்றனர். 2021 ஏப்.,4ல் அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், கல்வியில் சம வாய்ப்பை பறிக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க., நடவடிக்கை எடுக்கும் என எக்ஸ் தளத்தில் சொன்னார்.அதே ஆண்டில் செப்.,11ல் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து தமிழ் இனத்திற்கு விலக்கு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றார். இதுகுறித்து 2025 ஜன.,10ல் சட்ட சபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேட்டபோது, 'மத்திய அரசுதான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்.மாநில அரசால் ரத்து செய்ய முடியாது' என முன்னுக்கு பின் முரணாக முதல்வர் பேசியதை மக்கள் மறக்கவில்லை.பிறகு எதற்கு அனைத்து கட்சி கூட்டம். யாரை ஏமாற்றுவதற்கு. ஸ்டாலின் தயாரித்து, உதயநிதி நடித்து வெளியிடுகிற 'நீட் தேர்வு' படம் தோல்வியைத்தான் பெறும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
ஏப் 06, 2025 20:12

ஆமாம் அய்யா.... நீட் தேர்வு ரத்து செய்யும் மந்திரம்.... அவர்களுக்கு இப்போது மறந்து விட்டது.....அதோடு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியதையும்.... அவர்கள் மறந்து விட்டார்கள்.


pmsamy
ஏப் 06, 2025 10:22

தமிழ் சினிமாவின் அடுத்த காமெடி நடிகர் உதயகுமார்


kr
ஏப் 06, 2025 08:44

Pangali nilaipaadu enna sollunga - for this next all party meet.


Siva Balan
ஏப் 06, 2025 07:29

நீட்டுக்கு எதிராக தமிழகத்தில் ஒரே ஒரு நீட் எழுதும் மாணவர் போராடியிருக்கிறாரா.....


முருகன்
ஏப் 06, 2025 06:20

நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என மத்திய அரசிடம் பேச தைரியம் இருக்க உங்களுக்கு


Padmasridharan
ஏப் 06, 2025 05:50

"போலீசாரே படு கொலை செய்யப் படுகிறார்கள்" இவங்க உண்மையா இருந்தா encounter கூட நடக்காதே. அரசியல்வாதிகள் கொல்லப்படுவதில்லையா. சாமானிய மக்களின் உயிர் மட்டும் மதிக்கக் கூடியது இல்லையா. "கருத்து சுதந்திரத்திற்கு மிகப்பெரிய பேராபத்து வந்திருக்கிறது" அரசியல்வாதிங்க மட்டும்தான் கருத்து தெரிவிக்கனுமா. . சாமானிய மக்களின் உரிமை என்ன ஆகுது. பேச விடாம காசாக்கும் காவலர்கள் பற்றி யோசிக்கனும். மத்தவங்கள மரியாதை இல்லாம பேசி, அடக்கி ஆளனுமனு தான் நிறைய பேர் நினைக்கிறாங்க. மத்தவங்க எவ்வளவு வெச்சிருக்காங்க , அத எப்படியெல்லாம் பேசி ஏமாத்தி வாங்கலாம்னுதானே அதிகார பிச்சைக்காரர்கள் நினைச்சுகிட்டு வாழறாங்க.


முக்கிய வீடியோ